மறுரூபப்படுத்த தேவனுடைய வல்லமை Tucson, Arizona USA 65-0911 1நன்றி, சகோ. வில்லியம்ஸ். காலை வணக்கம். நண்பர்களே, ஷகரியான் குடும்பத்தினரும், சகோதரன் சகோதரி வில்லியம் ஸும், மற்றும் இங்குள்ள பலரும் அதைக் குறித்து அறிவர். அவள் வியாதிப்படுவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகட்கு முன்பே அதை நான் ஒரு தரிசனத்தில் கண்டேன். கடந்த ஆண்டு இங்கு நாங்கள் வந்திருந்த போது - அது ஜனவரி மாதம் என்று நினைக்கிறேன் - கன்வென்ஷனின் போது அந்த குருவானவர் (அவருடைய பெயர் என்ன? இப்பொழுது எனக்கு ஞாபகம் வரவில்லை) இங்கிருந்தார். (யாரோ ஒருவர் - ''ஸ்டான்லி'' என்கிறார் - ஆசி). ஸ்டான்லி, பேராயர் ஸ்டான்லி, கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர். அவர் வேதாகமத்தை என்னிடம் கொண்டு வந்த சம்பவம் உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவர் என்னிடம் கூறினார். அநேகர், ''என் மகளே, நீ சுகமடைந்து விட்டாய்'' என்று தீர்க்கதரிசனம் உரைத்திருந்தனர். ஆனால் அவள் சுகமடைய மாட்டாள் என்றும், ''அவள் விடியற்காலை 2 மணிக்கும், 3 மணிக்கும் இடையில் மரித்து விடுவாள்'' என்றும் அந்த தரிசனம் உரைத்திருந்ததென்று அவருக்குத் தெரியும். அது நினைவிருக்கிறதா? (யாரோ ஒருவர், ''ஆம்'' என்கிறார் - ஆசி). எனவே, இரண்டு அல்லது மூன்று மணிக்கு. 2அதை நான் டீமாஸ்க்கு அறிவிக்க முடியவில்லை. இருப்பினும் நான் அவள் மாற்றாந்தாயிடம் இந்த அறையில், இந்த இடத்தில், ''அவள் சுகமடையமாட்டாள்'' என்றேன். திருமதி ஷகரியன், ''அவள் சுகமடைவாள் என்று எல்லோரும் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனரே'' என்றாள். நான், ''ஒருக்கால் நான் தவறாயிருக்கலாம். ஆனால் அவள் சுகமடையமாட்டாள் என்று நான் கூறிவிட்டேன்'' என்றேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அநேகரிடம், ''அவள் தன் ஜீவனுக்காக ஓடுவதைக் கண்டேன். அவள் படுக்கையை அடைந்து தன் கைகளை உயர்த்தி என்னை நோக்கி இப்படி அலறினாள். அவளிடம் நான் அடைய முடியவில்லை. அதன் பிறகு அவள் மரிப்பதைக் கண்டேன். நான் பார்த்த போது அங்கு ஒரு கடிகாரம் இருந்தது. அது இரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் நடுவில் ஏதோ ஒரு நேரத்தைக் காட்டினது'' என்றேன். அந்த பேராயர், ''அது நிறைவேறுகிறதா என்பதை நான் காத்திருந்து பார்க்கப் போகிறேன்'' என்றார். அது நிறைவேறினது. 3நமக்கு நிச்சயம் வருத்தமாயுள்ளது. சகோதரி பிளாரன்ஸ் ஷகரியானின் மறைவில் சபையானது ஒரு சிறப்பான நபரை இழந்துவிட்டதென்று எண்ணுகிறேன். அவள் ஒரு சிறந்த பாடகி, ஆவியில் நிறைந்தவள். நான் அவள் தாயுடன் இருந்தேன்; அவள் தாய் சுகமடைந்த போது, மேற்கு கடற்கரையில் எனக்கு முதலாவதாக கிடைக்கப் பெற்ற தொடர்புகளில் அவள் ஒருவளாக இருந்தாள். மருத்துவர்கள்... அவள் நினைவற்ற நிலையில் (coma) இருந்தாள். உடல் முழுவதும் வீங்கியிருந்தது. அங்கிருந்த மருத்துவர் என்னிடம், ''நீங்கள் அமைதியாக ஜெபியுங்கள். அதிக சத்தம் போடாதிருங்கள். அவள் மரித்துக் கொண்டிருக்கிறாள்'' என்றார். நான், ''சரி, ஐயா'' என்றேன். அதன் பிறகு அதை திரும்பத் திரும்ப என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். என் வாயைத் திறப்பதற்கு எனக்குத் தருணமே கிடைக்கவில்லை. 4சகோ. டீமாஸ் தான் என்னிடம் மேலறைக்குச் செல்லும்படி கூறினார். எனவே நான் மேலே சென்றேன். பிளாரன்ஸ் தரையில் முழங்காலில் இருந்தாள், அப்பொழுது அவள் ஒரு அழகிய சிறுமி, வேறு சில ஸ்திரீகளும். நான் அங்கு சென்று அவளுக்காக ஜெபித்தேன். அவள் நினைவற்ற நிலையில் இருந்தாள். அவள் நினைவு பெற்று படுக்கையை விட்டு எழுந்திருப்பாள் என்று நான் பிளாரன்ஸிடம் கூறிவிட்டு வந்தேன். அவ்வாறே அவள் எழுந்தாள். ஒரு சில ஆண்டுகள் கழித்து அவள் இறந்து போனாள். தேவன் நமது ஜெபங்களுக்கு உத்தரவு அருளுகிறார். அதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் அனைவரும் தேவனுடைய சித்தத்தின்படி இங்கு வந்திருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். நாம் அனைவரும் அதே விதமாக விசுவாசிக்கிறோம். ஒருவர் பின் ஒருவராக நாம் அனைவரும் அதேவிதமாக விசுவாசிக்கிறாம். ஒருவர் பின் ஒருவராக நாம் அந்த வாயிலைக் கடந்து செல்வோம். ஆகையால் தான் நாம் இன்று காலை இந்த கிறிஸ்தவ வர்த்தகரின் ஐக்கியத்தில் ஒன்றுகூடி இவைகளைக் குறித்துப் பேசி இவர்களை அதற்கென்று ஆயத்தப்படுத்துகிறோம். ஏனெனில், அது வருவது உறுதியென்று நாம் அறிந்திருக்கிறோம். 5சகோதரி பிளாரன்ஸ் வாலிப ஸ்திரீ, நாற்பத்திரண்டு வயது. இப்பொழுது தான் சகோ. வில்லியம்ஸ் அவளுடைய வாலிபப்பிராயத்தைக் குறித்து என்னிடம் கூறினார். அவளுக்கு இந்த வியாதி இருந்ததாக அவள் அறிவதற்கு முன்பே, அவளைக் குறித்த ஒரு தரிசனம் கண்டேன். அவளுக்கு நேரிடும் விளைவு என்னவென்று அது என்னிடம் உரைத்தது. தேவனுக்கு அதைக் குறித்து எல்லாம் தெரியும். அவள் இவ்வுலகை விட்டுச் செல்வதற்கு முன்பு இயேசுவை அறையில் கண்டாளாம். நாம் அவளுக்காக ஜெபிக்கப் போவதில்லை, ஏனெனில் அதை நாம் எத்தனையோ முறை செய்திருக்கிறோம். நமது மத்தியில் இருந்து நம்மை உற்சாகப்படுத்தின சகோதரி ஷகரியானின் வாழ்க்கைக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோம். நாம் சகோ. டீமாஸுக்காகவும், சகோதரி ரோஸுக்காகவும் ஜெபிக்க விரும்புகிறோம். ஞாபகம் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இது மிகவும் வேதனையான கட்டம், கடந்த... முதலில் அவருடைய தகப்பன் காலமானார், அவருடைய சகோதரி இப்பொழுது... கடந்த சில ஆண்டுகளுக்குள். (யாரோ ஒருவர் சகோ. பிரன்ஹாமிடம் பேசுகிறார் - ஆசி). ஆம், பத்து மாதங்களுக்குள்; மற்றும் சகோதரி, சகோதரி எட்னாவும் கூட. 6எனவே, சகோ. டீமாஸ்டன் எவ்விதம் அனுதாபம் கொள்வது என்று எனக்குத் தெரியும். சில நாட்களுக்குள் என் தகப்பனார், சகோதரன், மனைவி, குழந்தை காலமானார்கள். எனவே அவருக்கு எவ்வித உணர்ச்சி இன்று காலை இருக்கும் என்று நானறிவேன். அவர்களுடன் எவ்விதம் அனுதாபம் கொள்வது என்பதை அறிந்திருப்போம். (ஒலிபெருக்கி கீச்சென்று சப்தமிடுகிறது - ஆசி). நான் தான் அதை செய்தேன். என்னை மன்னிக்கவும். இங்கு எங்கோ உள்ள ஒரு சிறு கருவியை என் கையினால் தொட்டுவிட்டேன். அதை அதிக சத்தமிடச் செய்ததற்காக நான் வருந்துகிறேன், வேண்டுமென்று செய்யவில்லை. இப்பொழுது நாம் எழுந்து நிற்போம்... உங்களால் முடியுமானால்... நாம் தலை வணங்குவோம். 7பரலோகப் பிதாவே, உம்மை ஆராதிக்கவும் எங்கள் மீட்பராகிய இயேசுவை அனுப்பினதற்காக உமக்கு நன்றி செலுத்தவும் ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கவும் இன்று காலை நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். இந்த வாழ்க்கை முடிவடைந்தவுடன் எங்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. இவ்வுலகில் வாழும் நாட்கள் நிலையை நாங்கள் காணும் போது, நாங்கள் எப்பொழுதும் இங்கு இருக்க வேண்டியதில்லை என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மரணப் பள்ளத்தாக்கின் வழியாக நாங்கள் தப்பிக்க ஒரு வழியை உண்டு பண்ணியிருக்கிறீர். பிதாவே, ஓராண்டிற்கும் குறைவான காலத்திற்கு முன்பு எங்களுடன் நின்று உமது துதிகளைப் பாடின சகோதரி பிளாரன்ஸ் ஷகரியானின் வாழ்க்கைக்காக இன்று காலை உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இது எங்களுக்கு அதிக அதிர்ச்சி விளைவிக்கக் கூடாதென்பதற்காக நீண்ட நாட்களுக்கு முன்பே, சில ஆண்டுகளுக்கு முன்பே. இது நடக்குமென்று எங்களுக்கு முன்னறிவித்தீர். நீர் கூறுவது எதுவுமே உண்மை என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். ''ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ் நாள் குறுகினவனும், சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்'' என்று உம்முடைய வசனம் உரைக்கிறது. கர்த்தாவே, இதுவும் உண்மையென்று நாங்கள் அறிந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் அந்தப் பள்ளத்தாக்கை கடந்து செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். எனவே, அவள் இவ்வுலகில் வாழ்ந்த வாழ்க்கைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவள் பூச்சி அரிக்கக்கூடிய இந்த பரிதாபகரமான வீட்டை விட்டு என்றென்றைக்கும் வியாதிப்பட முடியாத மகிமையான சரீரத்துக்குள் பிரவேசித்திருக்கிறாள் என்று இன்று காலை விசுவாசம் கொண்டவர்களாய் நம்புகிறோம். அவளுக்கிருந்த பாடல் பாடும் தாலாந்துகள், இனிய குரல், கிறிஸ்துவுடன் கிருபையின் ஐசுவரியம் பெற்ற அவளுடைய ஆவி! இன்று காலை அவள் திரும்பி வருவாளானால், இதையெல்லாம் அவள் செய்யமாட்டாள். அவள் இவைகளின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இப்பொழுது அது முடிவுபெற்று விட்டது. அவள் தன் தாயாரோடும், தகப்பனாரோடும் இருக்கிறாள். அவர்கள் தங்கள் குழந்தையை வீட்டுக்கு அழைத்துக் கொண்டனர். எனவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். 8எங்கள் அருமை சகோதரன், சகோ. ஷகரியானின் ஆறுதலுக்காவும் நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம். அவர் வாழ்ந்த வாழ்க்கையையும், அவர் கடந்த சில நாட்களாக அனுபவித்து வரும் வேதனைகளையும் நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அவருக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. தலைமயிர் கொட்டுகின்றது. தோள்கள் தொங்கத் தொடங்கிவிட்டன. இருப்பினும் தேவனுக்காக ஊழியத்தில் நிலைநிற்க விரும்புகிறார். தேவனே, அவருக்கு இன்று பெலத்தைத் தாரும் தேவனே, அதை நீர் அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். அவளுடைய பிரிவால் துக்கிக்கும் இங்குள்ள அனைவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, இதை நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாங்களும் இவ்வுலகை விட்டு என்றாவது ஒரு நாள் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம் என்பதை நினைவு கூருவோமாக. கர்த்தராகிய இயேசுவின் சமுகத்தில் நாங்கள் ஒன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில். நீர் இதை எங்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம். எங்கள் சொந்த வாழ்க்கையை நாங்கள் பரிசோதித்து நாங்கள் இரத்தத்தின் கீழும் விசுவாசத்திலும் இருக்கிறோமா என்று கணக்கெடுத்துப் பார்ப்போமாக. கர்த்தாவே, இதை அருளும். 9இந்த சூழ்நிலையில் ஜனங்களுக்கு இன்று ஒரு சிறு செய்தியை நான் அளிக்க முயல்கையில், கர்த்தாவே, எனக்குதவி செய்யும். என்னைப் பெலப்படுத்தும். ஏனெனில் கர்த்தாவே, அது எனக்குத் தேவையாயுள்ளது. அதை அருள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். உம்மை கனப்படுத்தும் வகையில் ஏதாவதொன்று சொல்லப்படுவதாக. இன்று காலை எங்கள் சத்தத்தைக் கேட்கும் யாராகிலும், அவர்களுக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள அந்த நேரத்தை சந்திக்க ஆயத்தமில்லாதவர்களாய் இருப்பார்களானால், ''நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்“ என்றுரைத்த நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடம் தங்களை ஒப்புவிக்கும் நேரமாய் இது இருப்பதாக. இதை அவருடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். (நீங்கள் உட்காரலாம்). 10(மேடையின் மேல் உள்ள யாரோ ஒருவர் சகோ. பிரான்ஹாமிடம் பேசுகிறார் - ஆசி). எல்லோருக்கும் சரியாக கேட்கிறதா என்று இங்குள்ள சகோதரர் அறிய விரும்புகிறார். அவர் இரண்டு ஒலி பெருக்கிகளை இயக்குகிறார். இப்பொழுது சரியாயுள்ளதா? உங்களால் கேட்க முடிகிறதா? கேட்க முடிந்தால் உங்கள் கைகளை உயர்த்துங்கள். சரி. இன்று காலையில் எல்லோருக்கும் உட்கார இடம் இல்லாமலிருப்பதால் நான் வருந்துகிறேன். நான் நீண்ட நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று நம்புகிறேன். வேத வசனங்களைப் படித்துவிட்டு, படித்த தமது வசனங்களை தேவனாகிய கர்த்தர் தாமே கனப்படுத்தி, அதன் மூலம் அவரை நாம் சேவிக்க அவருடைய கிருபையை நமக்களிக்கப் போதிய தருணம் மாத்திரமே. 11அடுத்த ஞாயிறன்று டூசானிலுள்ள க்ராண்ட்வே அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் நாங்கள் பேசக் கூடும் என்று பில்லி பால் இன்று காலை என்னிடம் அறிவித்தான். டூசானிலிருந்து இங்கு வந்துள்ளவர் யாராகிலும் இருந்தால், இந்த வாரம் உங்களைக் காண முடியாது. அடுத்த ஞாயிறு க்ராண்ட்வே அசெம்பிளீஸ் ஆப் காட் சபையில் காணலாம். இப்பொழுது தான் நாங்கள் கிழக்கிலிருந்து திரும்பி வந்தோம், மலைகளில் வாழும் அந்த மக்களின் அதிக உபசரிப்பின் காரணமாக அதிகம் தின்று விட்டதால் என் உடல் நிலை சற்று குறைந்து காணப்படுகிறது. எனக்கு இந்த வாரம் முழுவதும் சுகமில்லை. எனவே எனக்காக ஜெபியுங்கள். 12(யாரோ ஒருவர், ''அதிக ஆப்போஸம் தின்ற காரணத்தால்'' என்கிறார் - ஆசி). (ஆப்போஸம் என்பது அமெரிக்காவிலுள்ள கங்காரு வகையைச் சேர்ந்த நீண்ட வாலுடைய ஒரு சிறு மிருகம் - தமிழாக்கியோன்). என்ன சொன்னீர்கள்? (அதிக ஆப்போஸம் ). சகோ. கார்ல் வில்லியம்ஸ் நகைச்சுவையோடு பேசக் கூடியவர். அது இப்பொழுது நமக்கு தேவையென்று எண்ணுகிறேன். அவர், ''அதிக ஆப்போஸம்'' என்றார். சகோ. கார்ல், அதைக் குறித்து எனக்குக் தெரியாது, ஆனால் நிறைய அணில்கள் தின்றதனால் ஏற்பட்டிருக்கும் (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார்). இன்று காலை நீங்கள் யாருக்காவது ஜெபிக்க விரும்பினால். உங்களில் சிலர் எனக்காக ஜெபித்தால், அதை நான் நிச்சயம் பாராட்டுவேன். ஏனெனில் அது எனக்குத் தேவையாயுள்ளது. இப்பொழுது நாம் வேகமாக வார்த்தைக்குச் செல்ல விரும்புகிறோம். 13உங்களை இங்கு நீண்ட நேரம் வைத்திருக்க நான் விரும்பவில்லை. ஏனெனில் இன்று காலை இது தொலை பேசியினால் நாடு முழுவதும் இணைக்கப்பட்டுள்ளதென்று எண்ணாகிறேன். இது மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரைக்கும், வடக்குக்கும் தெற்குக்கும் செல்கிறது. அநேக அசெம்பிளிகள் இந்த கூடாரத்திலிருந்து செல்லும் இந்த வசதியைப் பெற்றுள்ளன. இது பீனிக்ஸிலும் கூட ஆராதனைகள் நடக்கும் இடங்களில் இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சபைகளிலும், வீடுகளிலும் இவ்விதம் மிகவும் அருமையான விதத்தில் ஒன்று கூடுகின்றனர். இது வானொலி ஒலிபரப்பை விட தெளிவாயுள்ளதாகக் கூறுகின்றனர். இது தொலைபேசி இணைப்பு. அவர்கள் தொலைபேசியில் ஒரு ஒலி பெருக்கியை அந்த அறையில் வைக்கின்றனர். அவர்கள்... என் மனைவி இந்தியானாவிலிருந்து வந்த தொலைபேசி இணைப்பை சென்ற வாரம் டூசானில் கேட்டு, அது அந்த அறையில் பேசுவது போலவே உள்ளதாகக் கூறினாள். எனவே, இந்த தொலை பேசியினால் இணைக்கப்பட்டுள்ளவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும், தேவன் அவர்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நியூயார்க்கில் இப்பொழுது பகல் வேளையாக இருக்கும். இது நாட்டின் வெவ்வேறு பாகங்களைக் கடக்கும் போது வெவ்வேறு நேரமாயிருக்கும். 14இப்பொழுது ரோமர் 12ம் அதிகாரம், முதலாம் இரண்டாம் வசனங்களை நாம் படிக்க விரும்புகிறோம். அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும், பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுருபமாகுங்கள். ரோமர்.12:1-2 கர்த்தருக்குச் சித்தமானால், இன்று காலை நான் மறுரூபப்படுத்த தேவனுடைய வல்லமை என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல் தேவனுடைய நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 15போதகர்களாகிய நீங்கள் உங்கள் காலங்களில் உபயோகித்து வந்த எல்லோருக்கும் தெரிந்த பழைய பொருள் இது. இது எழுதப்பட்ட முதற்கொண்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. இருப்பினும், தேவனுடைய வார்த்தையைக் குறித்த ஒரு காரியம் என்னவெனில், அது பழையதாய் போவதேயில்லை. இந்த தேவனுடைய வார்த்தை ஏறக்குறைய இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக, அதைக் காட்டிலும் அதிக ஆண்டுகளாக, ஒவ்வொரு சந்ததியிலுள்ள மனிதராலும், போதகர்களாலும், மற்றவர்களாலும் படிக்கப்பட்டு வந்தும், அது பழையதாய் போய் விடவில்லை. நானும் கூட இதை முப்பத்தைந்து ஆண்டுகளாக படித்து வருகிறேன். ஒவ்வொரு முறை அதை நான் படிக்கும் போதும். முதன் முறை நான் படித்த போது காணத் தவறின புதிதான ஒன்றை நான் காண்கிறேன். ஏனெனில் இது தேவனால் ஏவப்பட்டு எழுதப்பட்டது. இது எழுத்து வடிவில் உள்ள தேவன். பாருங்கள், இது தேவனுடைய தன்மைகள் பேசியுரைத்து காகிதத்தில் வைக்கப்பட்டுள்ளது. 16பல முறை மனிதன், ''இந்த வேதாகமத்தை மனிதன்தான் எழுதினான்“ என்கிறான். இல்லை. தேவனே வேதாகமத்தை எழுதினதாக வேதாகமே உரைக்கிறது. இது தேவனுடைய வார்த்தை. அது ஒருபோதும் தவறாது. இயேசு, ''வானமும் பூமியும் தவறி விடும், ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒருக்காலும் தவறுவதில்லை“ என்று கூறியுள்ளார். அது தேவனாக, அவருடைய ஒரு பாகமாக இருப்பதால், அது தவறவே முடியாது. நீங்கள் குமாரனும், குமாரத்தியும் என்ற முறையில் அதன் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். அது உங்களை அவருடைய ஒரு பாகமாக செய்துவிடுகிறது. ஆகையால், தான் நாம் தேவனுடைய வார்த்தையின் பேரில் ஐக்கியம் கொள்ள இங்கு ஒன்றுகூடி“ வருகிறோம். 17மறுரூபமாகுதல் (transformed) என்னும் சொல்லின் அர்த்தத்தை நேற்று அகராதியில் நோக்கினேன். இங்கு வரவேண்டிய நேரத்தை நான் மறந்து போய், முடிவில் ஒரு பொருளை நான் தேடிக் கொண்டிருந்த போது, இந்த வசனத்தை நான் கண்டேன். அகராதியில் அந்த சொல்லின் அர்த்தம், “மாற்றப்பட்ட ஒன்று” என்பதாக இருந்தது. அது மாற்றப்பட வேண்டும். மறுரூபமாகுதல் ''முன்பிருந்த நிலையிலிருந்து வேறுவிதமாக மாற்றப்படுதல்.'' அதன் இயல்பு மற்றெல்லாமே மாற்றப்படுதலே மறுரூபமாகுதல் என்பதாகும். 18இன்று காலை ஆதியாகமம் முதலாம் அதிகாரம் என் நினைவுக்கு வருகிறது. இந்த உலகம் ஒழுங்கின்மையும், வெறுமையும்மாய் இருந்தது. பூமியின் மேல் இருள் இருந்தது; பூரண ஒழுங்கின்மையன்றி வேறல்ல. உலகம் அந்நிலையில் இருந்த போது, தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடினார். அப்பொழுது முழு காட்சியும் மாறிப்போனது - பூரண ஒழுங்கின்மையான நிலையிலிருந்து ஏதேன் தோட்டம். இதுவே மறுரூபமாக்கும் தேவனுடைய வல்லமை. அது ஒன்றுமற்ற ஒன்றை எடுத்து அதிலிருந்து அற்புதமான ஒன்றை எடுத்து அதிலிருந்து அற்புதமான ஒன்றை உருவாக்க வல்லது. தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை! 19இந்த ஏதேனுக்கான ஆயத்தத்தை தேவன் ஆறாயிரம் ஆண்டுகளாக செய்து வந்தார் என்று வேத வசனங்களைப் படிப்பதனால் நாம் அறிந்து கொள்கிறோம். அவர் அவ்வளவு நீண்ட காலம் அதற்காக எடுக்காமல் இருக்க வகையுண்டு. இதை நான், ''தேவனுக்கு ஒரு நாள், பூமியில் ஆயிரம் வருடங்கள்“ என்னும் வேத வசனத்தை ஆதாரமாகக் கொண்டு ஊகிக்கிறேன் - அதாவது தேவன் காலத்தை கணக்கெடுப்பார் என்றால். பூமியை உருவாக்க அவருக்கு ஆறாயிரம் ஆண்டுகள் பிடித்ததென்று வைத்துக் கொள்வோம். அவர் பூமியில் எல்லா நல்ல விதைகளையும் நட்டார். எல்லாமே பரிபூரணமாயிருந்தது. அநேக சமயங்களில் ஜனங்கள் ஆதியாகமம் புத்தகத்தைப் படித்து விட்டு அதை குறை கூறுகின்றனர். ஏனெனில், அது திரும்பத் திரும்ப உரைத்து. உங்களை இங்கும் அங்கும் குழப்பமடையச் செய்கிறது. ஆனால், நாம் இந்த பொருளுக்கு வருவதற்கு முன்பு, ஒரு நிமிடம் கவனிப்பீர்களானால், மோசே தரிசனம் கண்டான். தேவன் அவனோடு பேசினார். தேவன் மோசேயுடன் முகமுகமாக, உதடுகளிலிருந்து காதுக்குள் பேசினார். அவர் மோசேயுடன் பேசின விதமாக வேறு யாரிடமும் பேசவில்லை. மோசே மிகப் பெரிய, தீர்க்கதரிசிகள் அனைவரிலும் மிகப் பெரியவனாக இருந்தான். அவன் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருந்தான். தேவனால் பேச முடியும். அவருக்கு குரல் உள்ளது. அது ஜனங்களால் கேட்கப்பட்டது. தேவனால் பேச முடியும். 20தேவனால் எழுத முடியும். தேவன் பத்து கட்டளைகளைத் தமது சொந்த விரலினால் எழுதினார். ஒரு சமயம் அவர் பாபிலோனின் சுவர்களில் தமது விரலினால் எழுதினார். ஒரு சமயம் அவர் குனிந்து மணலில் தமது விரலினால் எழுதினார். தேவனால் பேச முடியும். தேவனால் படிக்க முடியும். தேவனால் எழுத முடியும். தேவன் எல்லா கிருபைக்கும், வல்லமைக்கும், தெய்வீக ஞானத்துக்கும் ஊற்றாயிருக்கிறார். இவையனைத்தும் தேவனில் உள்ளன. எனவே, அவர் மாத்திரமே சிருஷ்டி கர்த்தர் என்று அறிந்திருக்கிறோம். தேவனைத் தவிர சிருஷ்டிகர் வேறு எவருமில்லை. சாத்தானால் சிருஷ்டிக்க முடியாது. அவனால் சிருஷ்டிக்கப்பட்டவைகளை தாறுமாறாக்க முடியும். தேவன் ஒருவர் மாத்திரமே சிருஷ்டி கர்த்தர். எனவே, அவர் தமது வார்த்தையினால் சிருஷ்டித்தார். அவர் தமது வார்த்தையை அனுப்பினார். அவர் பூமியில் நட்ட விதைகள் அனைத்தையும் தமது சொந்த வார்த்தையினால் உருவாக்கினார். ஏனெனில் விதைகளை உண்டாக்க வேறொன்றுமே அப்பொழுது இருக்கவில்லை. அவர், ''இது உண்டாகக்கடவது, அது உண்டாகக்கடவது“ என்று மாத்திரமே உரைத்தார். 21அநேக சமயங்களில் வேதாகமம் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்வது போலவும் அது உரைக்காத ஒன்றை உரைப்பது போலவும் காணப்படுவதை நாம் காண்கிறோம். உதாரணமாக, ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில், ''தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்: அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும், பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்“ என்றிருப்பதைக் காண்கிறோம். அதன் பிறகு அவர் தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறார், அநேக காரியங்கள் பூமியில் சம்பவிக்கின்றன. அதன் பிறகு நாம், ''நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்“ என்று காண்கிறோம். 22முதலாம் மனுஷன் தேவனுடைய சாயலில் இருந்தான், அது ஆவி. ''தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும், உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்'' என்று யோவான்; 4 உரைக்கிறது. தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் சிருஷ்டித்த முதலாம் மனிதன் ஆவி - மனிதன். அவன் தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் இருந்தான். அதன் பிறகு அவர் இந்த மனிதனை சரீரத்தில் வைத்தார், மனிதன் விழுந்து போனான். எனவே தேவன் இறங்கி வந்து மனுஷ சாயலைக் கொண்டு, விழுந்து போன மனிதனை மீட்டுக் கொண்டார். இதுவே உண்மையான சுவிசேஷ வரலாறு என்பது என் கருத்து. 23இப்பொழுது, தேவன், ஆறாயிரம் ஆண்டுகளாக இந்த அருமையான விதைகளை நட்டு வந்தார். அதாவது அவர், ''இது இவ்விதம் இருக்கக்கடவது, இந்த மரம் இருக்கக்கடவது, இது இருக்கக்கடவது'' என்று தமது வார்த்தையை உரைத்து வந்தார். எல்லாமே பரிபூரணமாக இருந்தது. அது நல்லதாக இருந்தது. இந்த விதைகள் ஒவ்வொன்றும் தேவனுடைய வார்த்தை உரைத்த விதமாகவே அந்த ஜீவனைக் கொண்ட மரமாக வளர வேண்டுமென்று அவர் கட்டளையிட்டார். அது கர்வாலி மரத்தின் விதையாயிருக்குமானால் கர்வாலி மரத்தை தோன்றச் செய்ய வேண்டும். அது பனை விதையானால், பனை மரத்தை தோன்றச் செய்ய வேண்டும். ஏனெனில், அந்த மகத்தான சிருஷ்டி கர்த்தர் தமது வார்த்தையை அனுப்பினார். உண்மையான விதை உருவாவதற்கு முன்பு வார்த்தை விதை இருந்தது. அந்த வார்த்தை விதையை உருவாக்கினது. பாருங்கள், ''அவர் உலகத்தை தோன்றப்படுகிறவைகளால் உண்டாக்கவில்லை, பாருங்கள். அவர் உலகத்தை தமது வார்த்தையினால் உண்டாக்கினார். தேவன் எல்லாவற்றையும் பேசி தோன்றச் செய்தார். 24சிருஷ்டி கர்த்தராகிய தேவன் எல்லாவற்றையும் பேசி தோன்றச் செய்த காரணத்தால், அது பரிபூரண உலகமாக இருந்திருக்க வேண்டும். அது அழகான இடமாக இருந்தது. அது பூமியிலே உண்மையான பரதீசாக இருந்தது. ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தலைமை ஸ்தலம் எங்காவது இருக்க வேண்டும். இந்த வர்த்தகர் குழு தலைமை ஸ்தலத்தைக் கொண்டுள்ளது. எந்த ஒரு சபையும், ஒரு தலைமை ஸ்தலத்தைக் கொண்டுள்ளது. தேவனுக்கும் தலைமை ஸ்தலம் ஒன்றுண்டு. நாம் வசிக்கும் இந்த நாட்டுக்கும் தலைமை ஸ்தலம் ஒன்றுண்டு. எனவே, இந்த மகத்தான ஏதேனும் ஒரு தலைமை ஸ்தலத்தைக் கொண்டிருந்தது அதாவது இந்த உலகம் கிழக்கேயிருந்த ஏதேன் என்னும் தோட்டத்தை தலைமை ஸ்தலமாகக் கொண்டிருந்தது. தேவன் இந்த இடத்தில், பூமியிலுள்ள தமது மகத்தான சிருஷ்டிப்பை ஆளுவதற்கென, தமது குமாரனையும் அவனுடைய மணவாட்டியையும், ஆதாமையும், ஏவாளையும் வைத்தார். 25தேவனே ஆதாமுக்குத் தகப்பன். ஆதாம் தேவனுடைய குமாரன் என்று வேதம் உரைக்கிறது. அவன் தேவனுடைய குமாரன். தேவன் அவனுடைய சரீரத்திலிருந்து அவனுக்கு ஒரு துணை வியை உண்டாக்கினார். அவனிடம் அவள் நெருங்கியிருக்க வேண்டுமென்பதற்காக அவனுடைய இருதயத்தின் மேலிருந்து ஒரு விலா எலும்பை (rib) கொண்டு அவர் உண்டாக்கியிருக்கக் கூடும். அவள் அவனுக்கு இன்னும் மனைவியாகவில்லை. அவர் அப்பொழுது தான் அதை உரைத்திருந்தார். அங்கு தான் தொல்லை நேரிட்டது. ஆதாமுக்கு முன்பு சாத்தான் அவளைக் கண்டு பிடித்தான். எனவே, அவருடைய வார்த்தையை அவர் உரைத் திருந்தார். 26இதை கூறுகிறேன், இதில் அதிக நேரம் செலவழிக்க நான் விரும்பவில்லை. ஆனால் உங்களில் சிலர் முக்கியமாக தென் பகுதியிலுள்ளவர்கள் - மக்களுக்கு அளிப்பதற்கென நான் இன்று தேவனிடமிருந்து பெற்றுள்ள சர்ப்பத்தின் வித்தின் செய்தியைக் குறித்து சிறிது குழப்பமடைந்திருக்கிறீர்கள். நான் வீடு திரும்பி, கர்த்தருக்கு சித்தமானால் இந்நாட்களில் ஒன்றில் ஜெபர்ஸன்வில்லில் ஆறு மணி நேரம் செய்தி ஒன்றையளித்து இதை தெளிவாக்க விரும்புகிறேன். நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள அது சரியான முறையில் அமைந்திருக்கும். அது கர்த்தர் உரைக்கிறதாவது. சகோதரி பிளாரன்ஸ் இங்கிருந்து செல்வதற்கு அநேக ஆண்டுகட்கு முன்பு அதை நான் கண்டது எவ்வளவு உண்மையோ, இதுவும் அவ்வளவு உண்மை. பாருங்கள், இது உண்மை. ஒருக்கால் அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கக் கூடும். 27யாராகிலும் ஒருவர் என் கருத்துக்கு முரணானவைகளை என்னிடம் கொண்டு வந்தால். அதை நான் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு, ஆயினும் அவர் கூறுவதில் நான் குற்றம் கண்டு பிடிக்க மாட்டேன். நாம் ஒருவரையொருவர் குறைகூறக் கூடாது. அந்த குற்றத்தை நான் செய்வதில்லை. ஆனால் நான் பாவத்தையும், அவிசுவாசத்தையும் கண்டித்திருக்கிறேன். அதற்காக நான் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன். ஆனால் தனிப்பட்ட நபர் யாரையும், பாருங்கள், நான் குறை கூறினதில்லை. நாம் முயற்சி செய்யும் சகோதரரும், சகோதரிகளுமாயிருக்கிறோம். நேற்று காலை சகோதரி பிளாரன்ஸ் அடைந்த நிலைக்கு நாம் எல்லோரும் வந்து கொண்டிருக்கிறோம், பாருங்கள். அவள் சென்ற வழியில் நாம் அனைவரும் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். என்னுடன் இணங்காத ஒரு சகோதரனையோ, சகோதரியையோ குறை கூறுவது என் நோக்கமல்ல. அந்த செயல் எனக்கு தூரமாயிருப்பதாக! உங்களால் காணமுடியாதென்று நினைக்கிறேன். அந்த நபர் தவறாயிருக்கிறார் என்று நான் அநேக முறை எண்ணிய போதிலும். ஆனால் அது அவர்களுக்கும், தேவனுக்குமிடையே உள்ள ஒன்று ஆனால் தவறு என்னவெனில், பாவமான வழியில்.... தவறாகப் புரிந்து கொள்ளுதல் என்பது சில சமயங்களில் பாவம் அல்ல, அது ஜனங்களின் தவறான புரிந்து கொள்ளுதலே, நாம் புரிந்து கொள்ளும் விதத்தில் அதை உரைக்கும் உரிமைநம் ஒவ்வொருவருக்கும் உள்ளதென்று நினைக்கிறேன். 28இந்த மகத்தான சிருஷ்டி கர்த்தர் சிருஷ்டிக்கப்பட்ட தமது குமாரனை அங்கு வைத்தார். ஆதாம் தான் சிருஷ்டிக்கப்பட்ட தேவனுடைய முதலாம் குமாரன். இயேசு அவருடைய ஒரே பேறான குமாரன், பாருங்கள். அவர் ஒரு ஸ்திரீயின் மூலம் பிறந்தார். ஆனால், ஆதாமோ தேவனுடைய கரத்தினால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டவன். அவருடைய குமாரனும், குமாரனின் மனைவியும் தலைமை ஸ்தலத்தில் இருந்து கொண்டு எல்லாவற்றின் மேலும் ஆளுகை செய்தல் மிகவும் பரிபூரணமாக காணப்பட்டது. எல்லாவற்றிற்கும் தலைவனாக ஒரு மனிதன் - அவருடைய சொந்த குமாரனும் அவருடைய மணவாட்டியும். ஒவ்வொரு விதையும் பரிபூரணமாக இருந்தது - பனை, கர்வாலி, புல், பிறகு பறவைகள், மிருகங்கள். எல்லாமே தேவனுடைய கட்டளைக்கு கீழ்படிந்து பரிபூரண ஒழுங்கில் அமைந்திருந்தது. “உன் இயல்பை மாற்றிப் கொள்ளாதே. ஒவ்வொரு விதையும் அதனதன் ஜாதியை முளைப்பிக்க வேண்டும் கர்வாலியே, நீ பப்பாளி மரமாக மாறிவிடாதே.'' பாருங்கள் ''பனையே, நீ வேறொன்றாக மாறிவிடாதே. ஒவ்வொரு விதையும் அதனதன் ஜாதியை முளைப்பிக்க வேண்டும்.'' அவர் காலங்கள் தோறும் அதை கவனித்து வந்தார். 29அவர் வார்த்தையை உரைத்தார். அவருடைய மகத்தான சிருஷ்டிப்பின் வல்லமை இவைகளை உருவாக்கின, ஆணும், பெண்ணும் கூட. அவர்கள் தலைவராயிருந்தனர், ஏனெனில் அவர்கள் மற்றெல்லா வர்க்கங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவர்களாயிருந்தனர். அவர் மரங்கள், மிருகங்களுக்குச் செய்தது போல் இவர்களையும் வார்த்தையின் பாதுகாப்பின் கீழ் வைத்தார். அவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அந்த வார்த்தையை மீறக் கூடாது. அவர்கள் அதில் நிலைத்திருக்க வேண்டும். ''அதிலிருந்து ஒன்றையும் எடுத்துப் போடாதே, அதோடு ஒன்றையும் கூட்டாதே. இந்த வார்த்தையினால் நீ பிழைக்க வேண்டும்''. அந்த சிருஷ்டிப்பு அவ்விதமாக இருந்து வந்திருந்தால், சகோதரி ஷகரியான் இவ்விடம் விட்டு செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது - அது வார்த்தையில் நிலை கொண்டிருந்தால்! தேவனுடைய மகத்தான திட்டம்! நாம் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். நாம் திரும்பவும் அந்த இடத்துக்கு சென்று கொண்டிருக்கிறோம். எங்கு? அந்த ஏழாம் நாள் காலைக்கு. அன்று தேவன் எல்லாவற்றையும் நோக்கி பார்த்து. ''அது நல்லது. இது எனக்குத் திருப்தியளிக்கிறது. ஆம், இதை செய்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இவையனைத்துமே கட்டுக்குள் உள்ளது. என் குமாரனின் மேலும் அவன் மனைவியின் மேலும் நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர்கள் இவைகளின் மேல் கண்ணோக்கமாயிருந்து, சரியாயுள்ளதா என்று கவனித்து, ஒவ்வொன்றும் அதனதன் ஜாதியை பிறப்பிக்கிறதா என்று பார்த்துக் கொள்வார்கள். அவனுக்கு இதை செய்ய வல்லமையுண்டு'' என்றார். தேவன் மேலும், ''எல்லாம் நன்றாயிருக்கிறது. அது வேறு எவ்விதமாகவும் இருக்க முடியாது. ஏனெனில் இது என் சொந்த விருப்பம். இப்படித்தான் இது இருக்க வேண்டுமென்று விரும்பினேன். அந்த விதமாக நான் உரைத்தேன். என் வார்த்தைகள் நான் விரும்பின விதமாகவே இவைகளைத் தோன்றச் செய்தன. இதோ அவை! இவையனைத்தும் நன்றாயுள்ளன'' என்றார். எனவே, ''தேவன் ஏழாம் நாளில், தமது கிரியைகளிலிருந்து ஓய்ந்திருந்தார்'' என்று வேதம் உரைக்கிறது. 30எல்லாமே ஆளுகையின் கீழிருந்து, அதனதன் ஜாதியை முளைப்பித்தது. இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ''முளைப்பித்தல்'' அவர் விதையை பூமியில் வைத்த போது. அந்த விதை அதற்குள் இருக்கும் ஜீவனின் வல்லமையுடன் மாத்திரமே வெளிவந்து, அதை ஒரு விதையிலிருந்து ஒரு செடியாக மாற்றக்கூடும். அவருடைய மறுரூபமாக்கும் வல்லமை! தேவன் விதையை, அது என்னவாயிருக்கும் என்று உரைத்தாரோ, அந்த தன்மைகளை அது மறைவாகக் கொண்டதாய் அங்கு வைத்தார். அது சரியான நிலையில் இருக்கும் வரைக்கும், அது என்னவாயிருக்கும் என்று தேவன் உரைத்தாரோ அதேவிதமாக அது இருக்கும். அது அவ்விதம் உருவாக்கி, ஒரு வழியை உண்டாக்கினார். அந்த வழியில், அவருடைய வார்த்தையின் வரிசையில் நிலைத்து நிற்கும் எதுவும், அவருடைய வார்த்தை உரைத்த விதமாகவே அது முளைப்பிக்க வேண்டும். அதிலிருந்து அது விலக முடியாது. அது சரியான வழியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, அது அவ்விதமாவே இருக்கும் என்று தன் சொந்த குமாரனின் மேல் நம்பிக்கை வைத்தவராய் தேவன், ''எல்லாமே நன்றாயுள்ளது நான் இளைப்பாறுவேன். அந்த விதைகள் ஒவ்வொன்றும் என் விருப்பத்திற்கேற்ற செடியாக தங்களை மறுரூபப்படுத்திக் கொள்வதற்கு தங்களுக்குள் வல்லமையை பெற்றுள்ளன. அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு விதையும், நான் விரும்பின விதமாக முளைக்கத்தக்கதாக அதற்கு மறுரூபமாக்கும் வல்லமையை அளித்திருக்கிறேன்'' என்றார். தேவன் மாறவேயில்லை. அவர் அன்று இருந்தவிதமாகவே இன்றும் இருக்கிறார். ஏதாவதொன்றை செய்ய தேவன் தீர்மானித்தால், அவர் அதை செய்தே தீருவார். எதுவுமே அவரைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர் அதை செய்வார்! 31எல்லாமே நன்றாகவும், ஒழுங்காகவும் அமைந்திருந்த போது, எல்லாமே சரியாக நடக்கும் என்று தேவன் உறுதி கொண்டார். அப்பொழுது தான் சத்துரு நுழைந்தான். நான் இதை.... மறுரூபமாக தேவன் வல்லமையைக் கொடுத்தார். இப்பொழுது நான் இந்த ஆளைக் கூப்பிடப் போகிறேன், இவனுக்கு சிருஷ்டிக்கும் வல்லமை கிடையாது, ஆனால் நான்... இவனுக்கு உருக்குலைக்க (deform) வல்லமை உண்டு, மறுரூபமாக்க (transform) அல்ல - உருக்குலைக்க. இப்பொழுது உருக்குலைந்துள்ள எதுவுமே அதன் மூல நிலையிலிருந்து எடுக்கப்பட்டு, ஏதோ ஒன்று தவறாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு என் வேலை சம்பந்தமாக சோள வயலின் வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மரக்கிளை உடைந்து சோளக் கதிரின் மேல் விழுந்திருந்ததது. அந்த சோளக் கதிர் நிமிர்ந்து நிற்க தன்னாலான வரை முயன்றது. அதற்கு ஏதோ ஒன்று சம்பவித்த காரணத்தால் அது உருக்குலைந்தது. கிளை அதன் மேல் கிடந்திருந்தது. 32நாம் காட்டுக் கொடி வயலில் படந்திருப்பதை கண்டிருக்கிறோம். இங்குள்ள மனிதர், ஸ்திரீகளில் பலர் அதை கண்டிருப்பீர்கள். நீங்கள் கென்டக்கியை சேர்ந்தவர்களாயிருந்தால். ஸ்திரீகள் அங்கு மண்வெட்டி உபயோகித்து - மனிதரும் கூட வயலுக்கு சென்று அந்த கொடியை வெட்டி எறிந்துவிடுவார்கள். அந்த கொடிகளை நீங்கள் வெட்டி எறிந்துவிடாமல் போனால், இப்படி வரிசையாக உள்ள கதிர்களை அந்த கொடி அடைந்து, அதை மெள்ள மெள்ள, மெதுவாக, தந்திரமாக சுற்றிக் கொள்ளும். அது சுற்றிக் கொள்வதை நீங்கள் அறியவே மாட்டீர்கள். அது நாளடைவில் பெலன் கொண்டு அந்த கதிரை இழுத்து உருக்குலைத்து விடும். அதை தன் பக்கம் இழுத்து, தன் கொடியால் அதை சுற்றிக் கொண்டு அதை முன்பிருந்த நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு உருக்குலைத்து விடும். ஆம், அது சோளம் தான், ஆனால் உருக்குலைந்த சோளம். 33நாம் அனைவரும் இன்னும் தேவனுடைய சாயலில் இருக்கிறோம். ஆனால் சிலர் தேவனுடைய குமாரர் என்னும் நிலையிலிருந்து மிகவும் உருக்குலைந்து, நாம் நடப்பதற்கென அவர் நமக்குத் தந்துள்ள அவருடைய வழியிலிருந்து விலகி அவருடைய வார்த்தைக்கு மாறாக நடக்கின்றனர். உலகம் நம்மை பிணைத்து வழியை விட்டு விலகும்படி செய்து, தன் பக்கம் இழுத்துக் கொண்டு, தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாகிய நம்மை தேவன் வைத்த நேரான குறுகலான பாதையிலிருந்து வழி விலகச் செய்கிறது. பாவமானது தேவனுடைய குமாரருக்கும், குமாரத்திகளுக்கு இந்த பொல்லாத காரியத்தைச் செய்துள்ளது. 34உருக்குலைப்பவன்! ''உருக்குலைத்தல்“ என்று இந்த விதமாக பேசுவது விசித்திரமாகக் காணப்படுகிறதென்று நானறிவேன். ஆனால் அவன் உருக்குலைப்பவனாகத்தான் இருந்தான். அவன் உருக்குலைத்தான். அல்லது தாறுமாறாக்கினான். தாறுமாறாக்குதல் (pervert) என்றால், ”ஒன்றிலிருந்து வித்தியாசமான வேறொன்றாக மாற்றப்படுதல் என்று பொருள். உருக்குலைத்தல் என்னும் சொல்லும் அதே அர்த்தம் கொண்டதுதான் - ஒன்றை உருக்குலைத்து அது, வேறுவிதமாக செய்யப்படுதல். இருப்பினும் அது அதே விதை, ஆனால் அது உருக்குலைந்தது. மறுரூபப்படுத்த தேவனுக்கிருந்த அதே கால அளவுதான் இந்த உருக்குலைப்பவனுக்கும் இருந்ததென்று நாம் காண்கிறோம். அவன் தன்னுடைய விதையை விதைத்தான். இல்லை, அவன் தன்னுடைய விதையை... ஏதேன் தோட்டத்தில் விதைக்கவில்லை. அந்த காலம் முதற்கொண்டு, தேவனுடைய விதையை, தேவனுடைய வார்த்தையை உருக்குலைத்து, அதை வித்தியாசமான ஒன்றாகச் செய்ய அவனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் இருந்தது.... முதன்முறையாக ஏவாள் அவனுக்கு செவிகொடுத்து, ஒரு சிறு சொல்லை ஏற்றுக் கொண்டது முதற்கொண்டு. 35ஞாபகம் கொள்ளுங்கள், சாத்தான் முதலில் அந்த வேதவசனத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தான். அவன், ''நீங்கள் ஏதேன் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ? என்றான். பாருங்கள்? ''சகல விருட்சங்களின் கனியையும்.'' இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், ஏவாள், ''நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியை நாங்கள் தொடவும் கூடாது'' என்றாள். இப்பொழுது அவன் தன் செய்தியில் அந்த வார்த்தையை சிறிது திரிப்பதைக்க வனியுங்கள்.... ஏவாள், ''இதை செய்தால், அந்த நாளில் நீங்கள் சாவீர்கள் என்று தேவன் சொன்னார்'' என்றாள். அவன், ''ஓ, நீங்கள் சாகவே சாவதில்லை'' என்றான். பாருங்கள், அவன் ஒரு மனிதன், அவன், ''இதை நீ இப்பொழுது செய். நீங்கள் ஒன்றும் அறியாத ஜனங்கள். இவையெல்லாம் உனக்கு உண்மையில் தெரியாது. நீ மாத்திரம் இதில் பங்கு கொண்டால், உனக்கு ஞானம் பிறக்கும், உனக்கு அறிவு உண்டாகும். நீ நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பாய் - எனக்குள்ள இந்த ஞானத்தில் மாத்திரம் நீ பங்கு கொண்டால். எனக்கு தெரியும், உனக்குத் தெரியாது'' என்றான். 36ஞானத்தைப் பெற்றிருத்தல் நல்லது தான். ஆனால் அது முரணாக, தேவனிடத்திலிருந்து வந்த சரியான ஞானமாக, தெய்வீக ஞானமாக இல்லாமல், அது மாம்சப்பிரகாரமான ஞானமாக இருக்குமானால், நீங்கள் எவ்வளவுதான் விஞ்ஞானத்தை அல்லது கல்வியை பெற்றிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அது பிசாசினால் உண்டானது. கர்த்தருக்கு சித்தமானால், இன்னும் சில நிமிடங்களில், அது பிசாசினால் உண்டானது என்பதை நிரூபித்துக் காண்பிக்கிறேன். நாகரீகம் பிசாசினால் உண்டானது. அதைக் குறித்து சில நாட்களுக்கு முன்புதான் பிரசங்கித்தேன். பூமியிலுள்ள கலாச்சாரம் அனைத்தும், விஞ்ஞான அறிவு அனைத்தும் மற்றெல்லாமே பிசாசினால் உண்டானது. அது அவன் ஏதேன் தோட்டத்தில் பிரசங்கித்த அறிவின் சுவிசேஷமாகும். அவன் அந்த அறிவை, தாறுமாறாக்கப்பட்ட அறிவை, தேவனுடைய வார்த்தைக்கும், சித்தத்துக்கும், திட்டத்துக்கும் முரணான அறிவை எடுத்துக் கொண்டிருக்கிறான். தேவன் என்ன செய்தாரோ, அதையே அவன் தாறு மாறாக்கப்பட்ட வழியில் செய்ய அவனுக்கு ஆறாயிரம் ஆண்டுகள் இருந்து வந்துள்ளது. அவனுடைய சொந்த ஏதேனை உருவாக்க அவனுக்கு அதே கால அளவு உண்டாயிருந்தது. இப்பொழுது அவன் பூமியில் ஒரு ஏதேனைப் பெற்றிருக்கிறான். அது ஞானத்தினாலும், அறிவினாலும் நிறைந்துள்ளது. அறிவும், ஞானமும், விஞ்ஞானமுமே தொடக்கத்தில் அவனுடைய சுவிசேஷமாக இருந்தது. தேவன் அப்படிப்பட்ட ஒன்றை எப்பொழுதுமே ஆதரித்ததில்லை. நீங்கள் ஒரு நிமிடம் கவனிக்க விரும்புகிறேன். அவன் இதை செய்யக் காரணம், அவன் உலக ஞானம் கொண்ட மனிதன் என்பதனால். 37இதைக் கூறுவது மிகவும் கடினம் தான். அது மிகவும் கடினம், ஏனெனில் நான் அநேக ஆண்டுகளாக நினைத்து வந்துள்ள விதமாக நினைக்கும் மக்களிடம் இதை கூற வேண்டியதாயுள்ளது. ஆனால் அந்த தூதர்கள் மலைக்குப் பின்னால் காட்சியளித்து, அந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டது முதற்கொண்டு இது ஒரு புதிய புத்தகமாக ஆகிவிட்டது. தேவன், தாம் செய்யப் போவதாக வெளிப்படுத்தல்; 10ம் அதிகாரத்தில் வாக்களித்தபடி, மறைந்திருந்த இரகசியங்கள் வெளிப்பட்டு வருகின்றன. நாம்தாமே, இவைகளைக் கண்டு விளங்கிக் கொள்வதற்கென, தேவன் இப்பூமியில் தெரிந்து கொண்ட சிலாக்கியம் பெற்ற ஜனங்கள்; இது ஏதோ ஒரு கட்டுக் கதையோ, அல்லது ஒரு மனிதனின் மாம்சப்பிரகாரமான சிந்தையில் உருவான கற்பனையோ அல்ல. இது வெளிப்படுத்தப்பட்டு, சரியென்று நிரூபிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தை. இது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால், தேவனால் சரியென்று நிரூபிக்கப்பட்ட ஒன்று. நான் ஒரு செய்தியில் முன்பு கூறியது போல், தேவனுக்கு தமது வார்த்தையை வியாக்கியானிக்க யாருமே அவசியமில்லை. அவரே தமது சொந்த வியாக்கியானி. ஒன்று நடக்கும் என்று அவர் சொன்னால், அது நடக்கும். அது நிறைவேறுவதன் மூலம் அவர் அதை உறுதிப்படுத்துகிறார். அதுவே அதை வியாக்கியானிக்கிறது. 38சில ஆண்டுகளுக்கு முன்பு பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நம்மிடம் மற்ற சபைகள், நாம் பைத்தியக்காரர் என்றும், பரிசுத்த ஆவி என்பது கடந்து போன ஒன்று என்றும் கூறின. ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம், அதை விரும்பும் எவருக்கும் என்பதாக நாம் கண்டோம். இப்பொழுது நாம் வித்தியாசமாக அறிந்திருக்கிறோம். பாருங்கள், இது சிறிது சிறிதாக நமக்கு திறக்கப்பட்டது. இப்பொழுது அவர், சபை காலங்களில் மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் முடிவு காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று வாக்களித்துள்ளார். இப்பொழுது அவர் நமக்கு அதை அறிவித்துக் கொண்டிருக்கிறார். நாம்முடிவு காலத்தில் இருக்கிறோம். நாம் இங்கு வந்திருக்கிறாம். 39சாத்தானே நாகரீகத்தின் மூலகர்த்தா. அவனே விஞ்ஞானத்தின் மூலகர்த்தா, அவனே கல்வியின் மூலகர்த்தா. ''அது உண்மையா?'' என்று நீங்கள் கேட்கலாம். சரி, இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையப் படிப்போம். ஆதியாகமம்; 4ம் அதிகாரம், அதற்கு சென்று நாம் ஒரு நிமிடம் பார்ப்போம். நான் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டால், சகோ. கார்ல் ஒரு வேளை என்னிடம் கூறுவார் (யாரோ ஒருவர், ''அதனால் பரவாயில்லை'' என்கிறார் - ஆசி). இப்பொழுது, ஆதியாகமம்; 4ம் அதிகாரம், 16ம் வசனம், மனிதனின் மேலும், ஸ்திரீயின் மேலும் சாபத்தை வைக்க தேவன் என்ன செய்தாரென்றும், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றும் இந்த பாகம் கூறுகிறது; அவர்கள் மேல் சாபம் அல்ல, ஆதாமின் நிமித்தம் பூமியை சபித்ததால் என்ன நேரிடுமென்று அவர்களிடம் கூறுதல். ஏவாளுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக நாம் காண்கிறோம். ஒருவன் சாத்தானுடையவன், மற்றவன் தேவனுடையவன். நீங்கள், ''ஓ, இல்லை! இல்லை, சகோ. பிரன்ஹாமே'' எனலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். காயீன், ஆதாமின் குமாரன் என்றுரைக்கும் ஒரு வேதவசனத்தை எங்காவது எனக்குக் காண்பியுங்கள். ''காயீன் பொல்லாங்கனால் உண்டானவன், ஆதாமினால் அல்ல'' என்னும் வேத வசனத்தை நாம் உங்களுக்குக் காண்பிக்கிறேன். 40ஏவாள் இங்கு கர்ப்பவதியான போது கவனியுங்கள். நாம் 4ம் அதிகாரத்தின் முதலாம் வசனத்திலிருந்து தொடங்குவோம்: ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று... அவள் என்ன சொன்னாள் என்றால், கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். அது அப்படித்தான் இருக்க வேண்டும். அது வேசி பெற்ற பிள்ளை, அல்லது யாராக இருந்தாலும், அது தேவனிடத்திலிருந்து தான் வரவேண்டும், பாருங்கள். ஏனெனில் அது அவருடைய விதை, அவருடைய விதையின் பிரமாணம். அது பாழடைந்த விதை, தாறுமாறாக்கப்பட்ட விதை எதுவாயிருந்தாலும், அது முளைப்பிக்க வேண்டும். அது அவருடைய கட்டளை. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். அவன் மறுபடியும் அவளை அறியவில்லை. ஆதாம் தன் மனைவியை அறிந்தான், அவள் காயீனைப் பெற்றாள், அவள் ஆபேலையும் பெற்றாள், இரட்டைக் குழந்தைகள். சாத்தான் அவளுடன் அன்று காலையில் இருந்தான், ஆதாம் அன்று பிற்பகல் இருந்தான். 41செய்தித்தாளில் அந்த பெரிய சந்தடியைக் கண்டீர்களா, அது டூசானில் என்று நினைக்கிறேன். அந்த ஸ்திரீ ஒரே நேரத்தில் ஒரு கறுப்பு நிறக் குழந்தையையும் ஒரு வெள்ளை நிறக் குழந்தையையும் பெற்றெடுத்தால். அவள் தன் கணவனுடன் அந்த காலையைக் கழித்தாள், ஆனால் கறுப்பு நிற மனிதனுடன் அவள் பிற்பகலைக் கழித்தாள். அந்த வெள்ளை மனிதன், தன் குழந்தையை அவன் கவனித்துக் கொள்வான் என்றும், ஆனால் கறுப்பு நிற மனிதன் தன் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும் கூறினான். பாருங்கள்? நாய்கள் ஈனுவதில் அவ்விதம் நடக்கிறதென்று எனக்குத் தெரியும். ஒருசில மணி நேரம் கழித்து உடலுறவு கொண்டால், நிச்சயம் அவ்விதம் நடக்க வகையுண்டு. அது அதை நிரூபிக்கிறது. 42நாகரீகம் எங்கிருந்து வந்தது என்பதைக் காண்பிக்க, நாம் ஆதியாகமம்; 4ம் அதிகாரத்தை மறுபடியும் படிப்போம். 16ம் வசனம்: அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்த பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய எனோக்கின் பேரை இட்டான். நாகரீகம் தொடங்கினது. ஸ்கோஃபீல்ட் வேதாகமத்தில், டாக்டர் ஸ்கோஃபீல்ட் ''முதலாம் நாகரீகம்'' என்கிறார். கவனியுங்கள், அதன் பிறகு அவன் குமாரரைப் பெற்றான், அவர்கள் இசை கருவிகளையும், இசையையும் உண்டாக்கினர். இவர்கள் குமாரரைப் பெற்று, அவர்கள் பட்டினங்களைக் கட்டி, பித்தளை முதலியவற்றால் கருவிகளை உண்டாக்கி, எல்லாவற்றையும் செய்தனர். பாருங்கள், அதைதான் அவன் செய்தான், காயீன் வம்சத்தில் தோன்றினவன் முதலாம் நாகரீகத்தை உண்டாக்கினான். அவன் காலங்கள் தோறும் அதையே செய்து வந்திருக்கிறான். 43நாம் 25ம் வசனத்துக்கு சென்று அடுத்தபடியாக என்னவென்று பார்ப்போம்: பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள். (சேத்தின் வம்சத்தினரே, காயீனின் வம்சத்தினர் அல்ல). பாருங்கள், நாம் உயர்வாகக் கருதும் அந்த மகத்தான அறிவாளிகள்! இன்றைய கம்யூனிசம் என்ன, அவர்களின் தேவன் யார்? அது அறிவு, விஞ்ஞானம். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இவைகளை இன்று எண்ணிப் பாருங்கள். 44சாத்தான் இப்பொழுது தன்னுடைய ஒருவிதமான ஏதேனைக் கொண்டவனாயிருக்கிறான். இந்த ஆறாயிரம் ஆண்டுகளாக அவன் தேவனுடைய முழு உலகத்தையும் உருக்குலைத்து தன் ஏதேனை உருவாக்கிக் கொண்டான் (அதை சிருஷ்டிக்கவில்லை); தன் சிருஷ்டிகள், மிருகங்கள், ஓரினத்துடன் வேறினத்தை சேர்த்து கலப்பினம் உண்டாக்குதல்: மரங்கள், மனிதர்: மதமும் கூட, வேதாகமம், சபை: எல்லாமே விஞ்ஞானத்தால் இயங்குகின்றன. நமது வாகனங்கள், நமக்குள்ள அனைத்துமே நமக்கு விஞ்ஞானத்தால் கொடுக்கப்பட்டவை, இவை மனிதனின் சாதனைகள். சாத்தான் தன்னுடைய மகத்தான ஏதேனைக் கொண்டிருக்கிறான். செய்தியானது ஏற்ற சமயத்தில் நமக்கு அளிக்கப்பட்டுள்ளதென்றும். இது வெளிப்படுத்தல்; 10ல் உரைக்கப்பட்டுள்ள காலமேயன்றி வேறொரு காலம் அல்ல என்பதையும் இது நமக்கு நிரூபிக்கிறது. இன்றைய கலப்பினத்தை பாருங்கள், ஒரு மேலான, இல்லை, ஒரு அழகான உலகத்தை உண்டாக்க - மேலான ஒன்றை அல்ல.... இன்றைய சிறு பிள்ளைகளைப் பாருங்கள். 45நேற்று என் மகளை ஒரு பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருந்தேன். அவளுடைய பற்கள் கோணலாக வளர்ந்து வருவதாக அவர் கூறினார். டூசானில் உள்ள ஒரு சகோதரன், சகோ. நார்மன் என்பவரின் மகளுடைய பற்கள் வெளியே நீட்டிக் கொண்டுள்ளன. வெகு விரைவில், வரப்போகும் நாட்களில், பிறக்கும் குழந்தைகளுக்கு பற்கள் எந்த விதத்திலும் வளரக்கூடும் என்பதாக பல் மருத்துவர் கூறுகின்றார். இதற்கு நாம் உண்ணும் கலப்பு உணவே காரணம். சென்ற மாதம் ''ரீடர்ஸ் டைஜஸ்ட்'' பத்திரிகையில், அந்த மேன்மையான சுவிசேஷகர் பில்லி கிரகாமைக் குறித்து வாசித்தீர்களா? அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு வருகிறீர்களா? அவருக்காக நான் முன்னைவிட இப்பொழுது அதிகமாக ஜெபித்துக் கொண்டு வருகிறேன். அன்றிரவு அவர் கழுத்துப்பட்டை திரும்பினவர்களுக்கு உரை நிகழ்த்தின போது, பழியை அவர்கள் மீது சுமத்தினார். அவருக்கு ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது. இந்நாட்களில் ஒன்றில் அவர் தன் ஸ்தானத்தை கண்டுகொள்வார் என்று நம்புகிறேன். இப்பொழுது அவர், அந்த சீர்குலைந்த நகரமாகிய சோதோமிலிருந்து அழைத்துக் கொண்டிருக்கிறார். பில்லி மிகவும் பலவீனமடைந்து விட்டதால் அவரால் கூட்டங்கள் நடத்த முடியவில்லை என்றும், அவர் ஓடி உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றும் அவருக்கு ஆலோசனை கூறப்பட்டதாக ரீடர்ஸ் டைஜஸ்ட்யில் உள்ளது. எனவே அவர், தினந்தோறும் ஒரு மைல் தூரம் ஓடி - அப்படித்தான் என்று நினைக்கிறேன், அப்படி ஏதோ ஒன்று, உடற்பயிற்சி செய்கிறார். 46மனிதன் அழுகக் கூடியவன். மானிட வர்க்கம் முழுவதுமே நேர்மையற்ற நிலையில் உள்ளது. எல்லாமே ஜலப்பிரளயத்துக்கு முன்பிருந்த காலம் போல் உள்ளது. அது முழுவதும் தலைகீழாக, திருப்பப்பட்டு, தேவன் அவைகளை நட்ட நேர்வரிசையிலிருந்து வித்தியாசமாக உள்ளது. பாவம், விஞ்ஞானத்தின் மூலமாகவும் வஞ்சகத்தின் மூலமாகவும், மானிட வர்க்கம் முழுவதையும் திரித்துவிட்டது. ரீடர்ஸ் டைஜஸ்டில் அந்த கட்டுரைக்குக் கீழ்இருந்ததை படித்தீர்களா? இந்நாட்களில் பெண்களும், ஆண்களும் இருபது முதல் இருபத்தைந்து வயதுக்குள்ளாகவே தங்கள் உடல் அமைப்பில், நடுத்தர வயதை அடைந்து விடுகின்றனர் என்று அங்கு எழுதப்பட்டிருந்தது. அதை சற்று யோசித்துப் பாருங்கள். அன்றிரவு சிந்தனைகளைப் பகுத்தறியும் நேரத்தில் ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு நின்று போயிருந்த இருபத்திரண்டு வயது பெண்ணை நான் கூப்பிட்டேன். அவளுடைய மருத்துவர் அப்படித்தான் அவளிடம் கூறியிருந்தார். பாருங்கள், இது விழுந்து போன, சீரழிந்த, நரகத்துக்கு சென்று கொண்டிருக்கும் நேர்மையற்ற வர்க்கம். இவ்வாறு கூறுவது ஓழுக்கமற்றது போல் ஒலிக்கக்கூடும். ஆனால், அது வேதபூர்வமானது, பாருங்கள். அது உண்மை. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியார். 47இப்பொழுது கவனியுங்கள், ஆடு மாடுகளை இன்று கலப்பினம் செய்த, தாவரங்களை இன்று கலப்பினம் செய்த அதே விஞ்ஞானம் ''இதுதான் மானிட வர்க்கம் முழுவதையும், அழித்துக் கொண்டிருக்கிறது'' என்கிறது. நான் அதை படித்தது போல் நீங்களும் படித்திருப்பீர்கள். அப்படியானால் அவர்கள் ஏன் அதை நிறுத்துவதில்லை? அவர்களால் அதை நிறுத்த முடியாது. அது அவ்விதமாக இருக்குமென்று தேவனுடைய வார்த்தை உரைத்துள்ளது. அவர்கள் மாத்திரம் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால், அவர்கள் யூதாஸ் காரியோத் போன்று கருவிகளாக அமைந்திருந்து, என்ன நடக்குமென்று தேவன் உரைத்துள்ளாரோ அது நிறை வேறுவதற்கு காரணமாயுள்ளனர். அதை அவர்கள் தங்கள் சொந்த விஞ்ஞானத்தின் அடிப்படையில் செய்கின்றனர். சாத்தான் தன் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் ஏவாளை வஞ்சித்த அதேவிதமாக சபையையும் வஞ்சித்து விட்டான். அதற்கு ஏவாள் முன்னடையாளமாயிருக்கிறாள். ஆதாம், இல்லை ஏவாள், சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். அது என்ன செய்ததென்று கவனியுங்கள். அவள் அறிவைப் பெற அலைந்து திரிந்த போது, தேவனுடைய மூல வார்த்தையை தாறுமாறாக்கின அல்லது உருக்குலையப் பண்ணின சாத்தானுக்கு செவி கொடுத்து நன்மைக்கும், தீமைக்கும் இடையே இருந்த கோட்டை கடந்துவிட்டாள். 48இன்றைய சபைகள் உருக்குலைந்து விட்டன. நான் ஜனங்களையும் தனிப்பட்ட நபர்களையும் குறிப்பிடவில்லை. நான் சபை உலகத்தைக் குறிப்பிடுகிறேன். விஞ்ஞானத்தின் மூலம் ஒன்று இப்படியும் ஒன்று அப்படியுமாக திரிக்கப்பட்டுள்ளது. அவன் முன்பு செய்த அதேவிதமாக, சாத்தான் ஏசாயா;14:12ல் கூறப்பட்டுள்ள அச்சுறுத்தலை நிறைவேற்றி விட்டான். அதை நாம் ஒரு நிமிடம் படிப்போம். ஏசாயாவின் புத்தகம் 14ம் அதிகாரம், 12ம் வசனம். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழவெட்டப்பட்டாயே! ஏசாயா அவனை தரிசனத்தில் காண்கிறான், பாருங்கள், வரப்போகும் காலத்தில். நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்று.... உன் இருதயத்தில் சொன்னாயே. 49ஏதேன் முதற்கொண்டு சாத்தானின் நோக்கம் தனக்கென ஒரு ஏதேனை உண்டாக்கிக் கொண்டு தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே. அப்பொழுது தேவனுடைய நட்சத்திரங்கள் அவனைத் தொழுது கொள்ளும், குமாரர் அவனைத் தொழுது கொள்வார்கள் என்று அவன் எண்ணினான். அவன் அதை செய்து, சபைக்குள் அதை கொண்டு வந்து, அதை முற்றிலுமாக நிறைவேற்றி விட்டான். அதன் விபரங்களுக்கு இப்பொழுது நான் செல்லப் போவதில்லை. ஒலிநாடாக்களைக் கேட்கும் எவருக்கும் அது தெரியும். அந்த நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாத்தான் அதை கல்வித் திட்டத்தின் மூலம் செய்துவிட்டான் - இது நன்றாகப் பொருந்தும், இது மேலானது, அது மேலானது என்பதாக. அவர்கள் மரணத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமலிருக்கின்றனர். அவர்கள் குருடாக்கப்பட்ட, குருடருக்கு வழி காட்டுகின்றனர், குருடாக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள், குருடாக்கப்பட்ட சபைத் தலைவர்கள், குருடருக்கு வழிகாட்டும் குருடர்கள். அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள், அவர்கள் இருவரும் குழியில் விழுவார்கள்'' என்றார் இயேசு. 50இந்த இரண்டு விதமான ஏதேன்களும் மிகவும் நெருங்கியிருந்து, அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் ஏறக்குறைய வஞ்சிப்பதைப் பாருங்கள். அது அவ்விதமாகவே இருக்குமென்று மத்;24:24 உரைக்கிறது. இங்கு சில நிமிடங்கள் நாம் நிறுத்திக் கொண்டு இந்த இரண்டு ஏதேன்களையும் கவனிப்போம். முக்கியமாக ஒரு காரியத்தை, அதாவது தேவனுடைய வார்த்தை அந்த ஏதேனை உண்டாக்கினதென்று வேதம் உரைக்கிறதென்றும், மற்ற ஏதேன் வருமென்று எவ்விதம் தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறதென்றும். நாம் தீர்க்கதரிசியாகிய பவுல் 2.தெசலோனிக்கேயர்;2ம் அதிகாரத்தில் உரைத்துள்ளதற்கு செவி கொடுப்போமானால், வேறொரு ஏதேன் இருக்க வேண்டுமென்று நாம் அறிந்திருப்போம். உங்களுக்கு விருப்பமானால் அதை நான் படிக்கிறேன்: தன்னை உயர்த்துகிறவனாயும், கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது... அவன் தேவனுடைய ஆலயத்தில் உட்கார்ந்து, தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து ஆராதிக்கப்படுவான். அதை யோசித்துப் பாருங்கள்! ஏசாயா;14ம் அதிகாரத்தில், ஏசாயா தீர்க்கதரிசி தேவனிடமிருந்து தனக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு தரிசனத்தின் மூலம், லூசிபர் தன் இருதயத்தில் சொன்னதைக் கண்டு, ''அவன் அதைச் செய்வதாகச் சொன்னான்'' என்றுரைத்தான் - பவுலுக்கு ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஏசாயா. இப்பொழுது இங்கு, எண்ணூறு ஆண்டுகள் கழித்து, அவன் தன் ஸ்தானத்துக்கு வருகிறதைப் பவுல் காண்கிறான். கவனியுங்கள், அது அவனுடைய ஏதேனில் முடிவடைகிறது. அவனுடைய விஞ்ஞான சம்பந்தமான ஏதேனில், அவனுடைய விஞ்ஞான சம்பந்தமான உலகத்தை, விஞ்ஞான சம்பந்தமான மணவாட்டி - சபையைக் கொண்டதாய், எல்லாமே ''அறிவு'' என்னும் சொல்லின் கீழ், பெரிய வேதசாஸ்திர பள்ளிகள், பெரிய பட்டங்கள், கல்வித் திட்டங்கள். 51சகோதரனே, சகோதரியே, இதைக்கேள். நாம் ஒவ்வொரு வரும் பிளாரன்ஸ் நடந்து சென்ற பாதையில் நடக்கப் போகின்றோம். இதைக் குறித்து ஆலோசனைச் செய்யும்படி இயேசுவின் நாமத்தில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்னை நீங்கள் கருத வேண்டாம். நான் உங்கள் சகோதரன். அதுவல்ல. ஆனால் நான் உரைக்கும் வார்த்தையை கருத்தாய் ஆலோசனை செய்யுங்கள். தேவனுடைய சொந்த வார்த்தையின் மூலம், நாம் வாழும் காலத்தில் பரிபூரணமாய் உறுதிப்பட்டவைகளின் மூலம், நாம் எங்கிருக்கிறோம் என்பதைக் காணுங்கள். இந்த திட்டங்கள் அனைத்துமே முற்றிலும் கிறிஸ்துவுக்கு விரோதமாக அமைந்துள்ளன. இப்பொழுது, அவன் ஒரு ஏதேனைப் பெற்றிருக்க வேண்டும். அவன் அப்படிச் செய்யப் போவதாகக் கூறினான். தேவனுடைய எளிமையான வார்த்தை, அவன் அவ்விதம் செய்வான் என்றுரைக்கிறது. அவன் அதை செய்துக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவன் தன்னுடைய புத்திக்கூர்மையான, விஞ்ஞானப் பிரகாரமான, ஸ்தாபன மணவாட்டியைக் கொண்டு அதை செய்தான். இந்நாட்களில் ஒன்றில், நிறுவப்படவிருக்கும் உலக சபைகளின் ஆலோசனை சங்கத்திற்கு அவன் தலைவனாவான். எல்லோருமே அவனுடைய சார்பில் இருப்பார்கள். 52ஜனங்கள் தீயவர்கள் என்பதனால் அல்ல. அவர்கள் தானியத்தைப் போல் நேர் வரிசையில் நடப்பட்டிருந்தனர். ஆனால் சாத்தான் விஞ்ஞானம், ஆராய்ச்சி, கல்வி, டாக்டர் பட்டங்கள் போன்ற கொடிகளை விதைத்து அவர்களை கோணலாக்கி விட்டான். சில சமயங்களில் அவர்கள், ஏதாவதொரு வேத சாஸ்திரக் கல்லூரியிலிருந்து நீங்கள் பெற்றுள்ள உங்கள் டாக்டர் பட்டத்தைக் காண்பிக்காமல் போனால், உங்களை பிரசங்க பீடத்தில் அனுமதிக்க மாட்டார்கள். இது அனைத்துமே தவறு! ஜனங்கள் அல்ல; அந்த திட்டம் தான் தவறு. இப்பொழுது அது என்ன செய்துவிட்டது? அது மறுபடியுமாக முழு உலகத்தையும் (தேவனுடைய மூல விதையை கலப்பினம் செய்து தாறுமாறாக்கியதன் மூலம்) மற்றொரு அந்தகாரக் குழப்பத்திற்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் தேவன் மறுபடியும் நம்மைக் குறித்து அக்கறையுள்ளவராய், இந்த நிலையின் மேல் அவரால் அசைவாட முடியும் என்பதற்காக நான் மிக்க மகிழ்ச்சியுள்ளவனாயிருக்கிறேன். அவர் அவ்விதம் செய்து ஒரு சிறு மந்தையை வெளியே அழைப்பதாக வாக்களித்திருக்கிறார். அதுவே அவருடைய மணவாட்டியாயிருக்கும். 53இங்கு மறுபடியும் கவனியுங்கள், இந்த சபைகள், இல்லை, இந்த ஏதேன்கள், எவ்வளவு பரிபூரணமான உதாரணங்களாக உள்ளதென்று. தேவன், தம்முடைய வார்த்தையாகிய விதையின் மூலம்! ஒன்று மாத்திரமே வார்த்தையை உயிர்ப்பிக்க முடியும், அதுதான் ஆவி. அதுவே வார்த்தைக்கு ஜீவனை அளிப்பது. வார்த்தையிலுள்ள ஜீவன் ஆவியின் ஜீவனை சந்திக்கும் போது, விதை என்ன வாயுள்ளதோ அதைத் தோன்றச் செய்கிறது. இப்பொழுது என்ன நடந்ததென்று கவனியுங்கள். ஏதேன் தோட்டத்தில் தேவனுடைய திட்டத்தின் கீழ் பாவமின்மை இருந்தது. அது யுகங்களில் ஒன்றாகும். முதலாம் யுகம், பாவமற்ற யுகம். ஜனங்கள் பாவம் என்னவென்று அறிந்திருக்கவில்லை. அவர்கள் பாவத்தைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. ஆதாம், ஏவாள் இருவரும் நிர்வாணமாயிருந்தனர். ஆனால் அவர்கள் முகத்தின்மேலிருந்த ஆவியின் திரையினால் அவர்கள் தங்கள் நிர்வாணத்தைக் காணாதபடி மறைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் நிர்வாணிகளாயிருப்பதை அறிந்திருக்கவேயில்லை. ஏனெனில் அவர்கள் மறைக்கப்பட்டிருந்தனர். தேவனுடைய திரை அவர்களுடைய சிந்தைகளில் இருந்த காரணத்தால், நன்மை எது தீமை எது என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை. இருவரும் நிர்வாணிகளாய் நின்று கொண்டிருந்ததே, அவர்கள் நிர்வாணிகளாய் இருந்தனர் என்னும் அறிவும் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்பதைக் காண்பித்தது. அவர்கள் இருவரும் நிர்வாணிகளாயிருந்தும் அதை அறியாமலிருந்தனர். 54நீங்கள் வேதாகமத்தைத் திருப்ப விரும்பினால், அல்லது குறித்துக்கொள்ள விரும்பினால், அது வெளிப்படுத்தல்; 3ம் அதிகாரம். கடைசி சபை காலமாகிய லவோதிக்கேயா பெந்தெகொஸ்தே சபை காலத்திலே எப்படியிருக்குமென்று பரிசுத்த ஆவியானவர் முன்னுரைக்கிறார்.... நீ நிர்வாணியும், குருடனுமாயிருப்பதை அறியாமலிருக்கிறாய். அங்கு தேவனுடைய விதைகள் பாவமற்ற தன்மையின் கீழ் அவர்கள் நிர்வாணிகள் என்று அறியாதவர்களாய், பரிசுத்த ஆவியின் திரை அவர்களை பாவத்திலிருந்து திரை மறைத்திருந்தது. இப்பொழுது கடைசி சபை காலத்திலே, அவர்கள் மறுபடியும் நிர்வாணிகளாயிருந்து அதை அறியாமலிருப்பதாக இங்கு நாம் காண்கிறோம். ஆனால், இது பரிசுத்த ஆவி திரை அல்ல. இது அன்று சாத்தான் ஏவாளின் மேல் போட்ட இச்சையின் திரை. இவர்கள் மிகவும் அசுத்தமுள்ளவர்களாய், இவர்கள் நிர்வாணிகளாயிருப்பதை அறியாமலிருக்கின்றனர் - தெருக்களில் காணப்படும் குட்டை கால் சட்டை அணிந்து கவர்ச்சியான உடைகளை உடுத்துள்ள நமது தேசத்து பெண்கள். 55யாரோ ஒருவர், அவர்கள் அணியப் போகும் புது உடையைக் குறித்த செய்தித்தாள் விளம்பரத்தை வெட்டியெடுத்து எனக்கு அனுப்பியிருந்தார். அது இடுப்பிலிருந்து பதினான்கு அங்குலம் நீளம் என்று நினைக்கிறேன் - அப்படி ஏதோ ஒன்று. அது இச்சையின் திரை என்று நமது தேசத்து பெண்கள் உணருகின்றனரா என்று வியக்கிறேன். நீங்கள், ''நான் விபச்சாரக் குற்றத்துக்கு நீங்கலானவள் என்று தேவனுக்கு முன்பாக என்னால் நிரூபிக்க முடியும்'' எனலாம். இருந்த போதிலும், நியாயத்தீர்ப்பின் போது நீ, ''விபச்சாரி'' என்றே அழைக்கப்படுவாய். வேதம் அவ்வாறு உரைக்கிறது. ''ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்று இயேசு கூறினார். 56''குருடனும், நிர்வாணியுமாயிருப்பதை அறியாமல் இருக்கிறாய். ''வெளியில் காணப்படும் அந்த ஏழை பெண்களுக்கு விரோதமாய் எனக்கு ஒன்றுமில்லை. அது அந்த பொல்லாங்கு! ஸ்தாபன முறைமைகள் அதை அடையாளம் கண்டு கொள்ளவோ, அதற்கு எதிர்த்து நிற்கவோ தவறிவிட்டது போல் தோன்றுகிறது. பெண்கள் தங்கள் தலை முடியைக் கத்தரித்துக் கொள்ளவும், அழகு படுத்தும் சாதனங்களை உபயோகிக்கவும், குட்டை கால் சட்டை அணிந்து கொள்ளவும் அவர்கள் கிறிஸ்தவ மார்க்கத்தின் பெயரால் அனுமதிக்கின்றனர். என்ன ஒரு பயங்கரமான காரியம்! பாருங்கள், சாத்தானின் ஏதேனில் அவர்கள் நிர்வாணிகளாயிருந்து, அதை அறியாமலிருக்கின்றனர். அவர்களுக்கு அது தெரியவில்லை. இங்கிருந்து பார்க்கும் போது, நீச்சல் குளத்திலுள்ள பெண்களைக் காண்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த ஸ்திரீ மாத்திரம் அவள் என்ன செய்கிறாள் என்று அறிந்திருப்பாளானாள்! ஆனால் அவள் அறியாமலிருக்கிறாள். அவள் நிர்வாணியாயிருக்கிறாள். அவளுடைய உடல் புனிதமானது. தன் தோலை மறைக்க தேவன் அவளுக்கு உடுத்தின உடைகளை அவள் களைகிறாள். அவள் அதை சதா குறைத்துக் கொண்டே வருகிறாள். ''நாகரீகம், உயர் கல்வி, மேலான நாகரீகம், மேலான பண்பாடு'' என்னும் சொற்களின் கீழ் அவள் நிர்வாணியாயிருக்கிறாள். இது உங்கள் மனதில் பதிந்துவிட்டது என்பதை உறுதியாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். இது அனைத்தும் பிசாசினால் உண்டானது. கர்த்தராகிய இயேசு வரும் போது இது நிர்மூலமாக்கப்படும். அதன் ஒவ்வொரு பாகமும் நிர்மூலமாக்கப்படும், அவைகளில் ஒன்றும் விடப்படுவதில்லை. ஓ, சகோதரனே, பீனிக்ஸில் நான் பேசுவதை நாடு முழுவதிலுமுள்ள நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இவைகளைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்! நீங்கள் இவைகளுக்கு இங்கு கீழ்பட்டிருக்கிறீர்கள். கூடுமானால் அது தெரிந்து கொள்ளபட்டவர்களையும் வஞ்சிக்கும்'' என்று இயேசு கூறினார். 57முதலாம் ஆவி... முதலாம் திரை பரிசுத்த ஆவியாகிய பரிசுத்த திரையாக இருந்தது. அவள் அதன் வழியாக வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது. ஆனால் சாத்தான் அவளிடம் அறிவைக் குறித்துப் பேசத் தொடங்கின போது, அவள் சிறிது உலகத்தை எட்டிப் பார்க்க நேர்ந்தது. அவளுடைய குமாரத்தியாகிய சபையும் அதையே செய்துள்ளது. நீங்கள் காண வேண்டும், நீங்கள் ஏதாவதொரு சினிமா நட்சத்திரம் போல உடுத்த வேண்டும். இளைஞர்கள் எல்விஸ் பிரஸ்லி அல்லது பாட்பூன், அல்லது மார்க்கத்தின் பெயரிலுள்ள சிலரைப் போல் நடந்துகொள்ள வேண்டுமென்று ஆவல் கொள்கின்றனர். பாட்பூன் கிறிஸ்து சபையைச் சேர்ந்தவர். எல்விஸ் பிரஸ்லி பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்தவர். பிசாசு பிடித்த இவ்விருவரும் இயேசு கிறிஸ்துவை மறுதலித்த யூதாஸ் காரியோத்தை விட உலகத்துக் அதிக கேடு விளைவித்துள்ளனர். அவர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். அந்த இளைஞர்கள் அதை அறியாமலிருக்கின்றனர். எனக்கு இந்த இளைஞர்களுக்கு விரோதமாய் ஒன்றுமில்லை, அதை இயங்கச் செய்யும் ஆவியே அது. 58சிறிது அந்த பக்கம் சென்று, அந்த கொடி ஒருமுறை தானியத்தின் மேலோட்டைப் பற்றிக்கொள்ள அனுமதித்து, என்ன நடக்கிறதென்று பாருங்கள். தானியம் அழிந்து விடும். ஓ, ஆமாம், அந்த கொடி அதைப் பற்றிக் கொண்டால், அப்படித்தான் செய்யும். ஒவ்வொரு முறையும் அது அப்படியே செய்யும். ஏவாள் உலகத்தை சிறிது எட்டிப்பார்க்க நேர்ந்தது. சகோதரனே, சகோதரியே, உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். யோவான் எழுதின முதலாம் நிருபம், 2ம் அதிகாரம் 15ம் வசனத்தில், வேதம் இவ்வாறு கூறுகிறது. வேண்டுமானால் அதை நாம் படிக்கலாம். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால், அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 59இங்கு பூமி என்னும் சொல் உபேயாகிக்கப்படவில்லை, அது காஸ்மாஸ் என்னும் கிரேக்க சொல். அதற்கு, ''உலக ஒழுங்கு'' என்று பொருள். நாம் உலகத்தின் நாகரீகத்திலும் இன்றைய போக்கிலும் அன்பு கூர்ந்து, இது அருமையான தருணம். ஓ, இவையனைத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்'' என்று எண்ணிக் கொண்டால், உங்கள் எண்ணம் தவறு. அது பிசாசினால் குலைக்கப்பட்டுவிட்டது. ''நீங்கள் உலக ஒழுங்கிலும், இன்றைய உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பு கிடையாது என்பதால்.'' அதை நினைவில் கொள்ளுங்கள். ஓ, தேவனே நாம் எதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பாருங்கள். 60இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டு உங்களுக்கு ஒரு சிறு கதையைக் கூற விரும்புகிறேன். முதலாம் உலக யுத்தத்தில் பணிபுரிந்த ஒரு இராணுவ போதகர் இதை கூறக் கேட்டிருக்கிறேன். அவர்கள் எறிந்தார்கள்... சாத்தான் தொடக்கத்தில் ஏதேன் தோட்டத்துக்கு வந்தபோது அவன் செய்தது போல். அவனால் அந்த விதைகளை தோண்டி எடுக்க முடியவில்லை. அவனால் அதை விதைகளை அழிக்க முடியவில்லை. ஆனால் அவன் விஷத்தை தெளித்தான் (Sprayed). அது விதையை உருக்குலைத்து விட்டது. அது சரியான இனத்தை பிறப்பிக்கவில்லை. அது மூல விதையை உருக்குலைத்து விட்டது. இந்த மார்க்க திட்டங்கள் அனைத்துமே அப்படித்தான். அவர்கள் இன்னும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயுள்ளனர். ஆனால் உருக்குலைந்துள்ளனர். அவர்கள் சபைக்குச் சென்று சரியானதை செய்ய விரும்புகின்றனர். ஒரு கன்னியாஸ்திரீ நீசமான பெண்ணாக இருக்க வேண்டுமென்பதற்காக கன்னிமடத்தைச் சேருவதில்லை. ஒரு மனிதன் கெட்டவனாக இருக்க வேண்டும் என்பதற்காக வேத சாஸ்திரப் பள்ளிக்குச் செல்வதில்லை. நீங்கள் கெட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக கைகளைக் குலுக்கி, உங்கள் பெயரை புத்தகத்தில் பதிவு செய்து, இவ்விதம் ஏதாவதொன்றைச் செய்து சபையைச் சேர்ந்து கொள்வதில்லை. நீங்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறீர்கள். ஆனால் அது ஏமாற்றப்படுதல், உருக்குலைதல் அவ்விதம் செய்து விட்டது. சாத்தான் அதை தெளித்தான். பாருங்கள்? தேவனுக்கு ஒருபோதும் ஒரு ஸ்தாபனம் இருந்ததில்லை. அவ்விதமான ஒன்று தேவனுடைய வார்த்தையில் எங்குமே காணப்படவில்லை. தேவனே நமது ஸ்தாபனம் (organisation). நாம் அவருக்குள் ஒரு சரீரமாக ஒழுங்காக பரலோகத்தில் அமைந்திருக்கிறோம் (organised). அது உண்மை. நமது பெயர்கள் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. பாருங்கள்? கவனியுங்கள். 61ஆனால், பாருங்கள், இது மிகவும் கடினமென்று அறிவேன், ஆனால் கூடுமானால் இன்னும் சிறிது நேரம் என்னுடன் பொறுத்துக் கொள்ளும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். உலக மகா யுத்தத்தின் போது... பொருளை விட்டுவிலகிச் செல்வதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால் இதை தெளிவாக்க, சாத்தான் ஏதேனில் என்ன செய்தான் என்னும் என் விவரணத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்: அவன் பயங்கரமான விஷத்தை தெளித்தான். அந்த தெளிப்பு என்னவென்று நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? என்னால் கூற முடியும். அது உண்டாக்கப்பட்ட முறை (formula) என்னிடம் உள்ளது, இரண்டு வார்த்தைகள்: விசுவாசத்துக்கு முரணான அவிசுவாசம், சந்தேகம். அவன் அவிசுவாசத்தை தெளித்தான். விஞ்ஞானம் அந்த இடத்தை நிறைத்தது. குழி எங்கிருந்ததோ, சாத்தான் அந்த குழியை அறிவினாலும், விஞ்ஞானத்தினாலும், நாகரீகத்தினாலும் நிரப்பினான். அது விதைக்குள் சென்று. தேவனுடைய முழு சிருஷ்டிப்பையும் உருக்குலைத்தது. 62உங்களை நான் ஒரு கிளையின் மேல் உட்காரவைத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்று நானறிவேன். நானும் கூட உங்களுடன் அந்த கிளையின் மேல் இருக்கிறேன். நாம் என்ன செய்யலாம் மென்று அறிய நாம் எல்லோருமே இங்கு முயன்று கொண்டிருக்கிறோம். வித்தியாசமாயிருக்க வேண்டும் என்பதற்காக இவைகளை நாம் கூறுவதில்லை. நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் பாதையின் முடிவை அடைந்து ஒவ்வொரு வார்த்தைக்கும் கணக்கொப்புவிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இப்பொழுது நமது சத்தங்கள்... நாம் பிறந்த போது, நமது முதலாம் சிறு அழுகுரல் அங்கு ஒலிப்பதிவானது. நியாயத்தீர்ப்பின் நாளில் அது மறுபடியும் போட்டு காண்பிக்கப்படும். நீங்கள் உடுத்தின உடைகளும் கூட நியாயத்தீர்ப்பின் நாளில் உங்களுக்கு காண்பிக்கப்படும். விஞ்ஞானம் அதை தொலைகாட்சியின் மூலம் கண்டு பிடித்துள்ளது. பாருங்கள், தொலைகாட்சி ஒரு படத்தை உற்பத்தி செய்வதில்லை. அதை அது ஒரு குழாயின் வழியாக செலுத்துகிறது. உங்கள் உடைகளின் நிறம், ஒவ்வொரு முறையும் நீங்கள் அசையும் போதும், உங்கள் மனதிலுள்ள ஒவ்வொரு சிந்தனையும் தேவனுடைய பதிவுத்தட்டில் பதிவாகியுள்ளது. இவையனைத்தும் உங்களுக்கு முன்னால் வைக்கப்படும் - நீங்கள் உடுத்த ஒவ்வொரு முறையும் நீங்கள் சிகை அலங்கரிக்கும் இடத்துக்குச் சென்று, தேவன் கொடுத்த தலை முடியை கத்தரித்த போதும். அது காண்பிக்கப்படும். அதற்காக நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் அந்த இடத்திலும் கூட நீங்கள் அசைய முடியாது. அங்கு நீங்கள் இருதயத்தில் சிந்திக்கும் சிந்தனைகளும் கூட உங்களுக்கு முன்னால் போட்டு காண்பிக்கப்படும். நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும். இவ்வாறு பெரிதான இரட்சிப்பை நாம் புறக்கணித்தால் எப்படி தப்பித்துக் கொள்வோம். நாம் தப்பித்துக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு அசைவும், இருதயத்தின் சிந்தனைகளும், வேறொரு பரிமாணத்தில் பதிவாகிக் கொண்டிருக்கின்றது - நீங்கள் உடுத்தின உடைகளின் நிறமும் கூட. வண்ணத் தொலைகாட்சி அதை நிரூபிக்கிறது. அது அதை கிரகித்து அதை காண்பிக்கிறது, பாருங்கள். அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று பரிமாணங்களின் ஒரு பரிமாணமே. பாருங்கள்? 63இப்பொழுது விஷம் எவ்வளவாக சபையை, பூமியை தாக்கியுள்ளது! சாத்தான் விதைகளின் மேல் தெளித்த விஷம் அவைகளில் துவாரங்களை உண்டாக்கி அவைகளை உருக்குலையச் செய்தது. அவன் அதிகமதிகமாக சபைகளின் இருதயங்களில், மக்களின் இருதயங்களில், மற்றும் எல்லாவற்றிலும் விஞ்ஞானத்தை ஆழமாக பதித்துக் கொண்டு வந்ததன் விளைவாக மானிட வர்க்கம் இனம் கலந்த (interbred) நிலையை அடைந்து... ஒவ்வொரு விதையும் அதன் இனத்தை பிறப்பிக்க வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். மானிட வர்க்கம், தாவர வர்க்கம் மற்றும் எல்லாம் இனங் கலந்ததால், அது நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. பூமியில் வளரும் கலப்பின உணவை நாம் உண்ணுதல் நமது சிந்தனைகளை... நமது சரீரங்கள் இருபது அல்லது இருபத்தைந்து வயதிலேயே நடுத்தர வயதை அடைந்துவிடும் காரணம், கலப்பின உணவை உண்ணுவதால் நமது உயிரணுக்கள் (Cells) சீரழிந்து போவதால், அதன் விளைவாக நமது மூளை உயிரணுக்கள் சீரழிந்து போகின்றன அல்லவா? அவைகளும் உயிரணுக்கள் தானே! ஆகையால் தான் ரிக்கிகள் காய்ச்சின இரும்புக் கம்பியோடு தெருக்களில் ஓடுகின்றனர்; ரிக்கட்டாக்களும், எல்விட்டாக்களும், இன்னும் நாம் வெவ்வேறு பெயர்களால் அழைக்கும் மற்றவர்களும், அரை நிர்வாணமாக ஜனங்களுக்கு முன்னால் காணப்படுகின்றனர். அவர்களுக்கு மூளை கெட்டுவிட்டது. அவர்களுக்கு நல்லொழுக்கம், நன்னடத்தை போன்றவைகளைக் குறித்த எண்ணம் ஒன்றுமில்லை. 64இப்பொழுது என் சிறு கதையைக் கூறுகிறேன். இந்த இராணுவ குருவானவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தாராம். அங்கு காயப்பட்ட அநேக வீரர்கள் கூடாரங்களில் படுத்திருந்தனர், சிலர்... அவர் அப்பொழுது தான் வேறு இடத்திலிருந்து மாற்றலாக அங்கு வந்திருந்தார். அவர் அங்கு சென்றதாக என்னிடம் கூறினார். அங்கு ஏதோ ஒரு இராணுவ அதிகாரி அவரிடம், “குருவானவரே, நாம் வாகனத்தில் சென்று, வெளியேயுள்ள இடங்களை பார்வையிட்டு வரலாம்'' என்றார். அவர்கள் அந்நாட்களில் போரில் (Mustard Gas) கடுகு வாயுவையும், க்ளோரின் வாயுவையும் உபயோகித்தனர். அவர் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, அங்கு நான் சென்ற போது, மரத்தில் பட்டையே இல்லை, புல் எதுவுமே காணப்படவில்லை. அது ஒரு ஈஸ்டர் காலையாயிருந்தது. அங்கு நொறுங்கின சில பீரங்கி வண்டிகள் இருந்தன. இந்த அதிகாரி இவைகளைக் குறித்துக் கொண்டு, இவைகளைப் பழுது பார்க்க முடியுமா என்று தீர்மானம் செய்ய வேண்டியவராயிருந்தார். இந்த இடம் பரந்த ஆர்கான் காட்டுக்கு அருகில் இருந்தது? நான் அங்கு தனியாக நின்று கொண்டிருந்த போது, மேலே நோக்கி, ''ஓ, தேவனே, நிலைமை இவ்விதம் மாறிக் கொண்டிருக்கிறதே என்றேன்'' என்றார். அது உண்மை. அது அந்நிலைக்குத் தான் வந்து கொண்டிருக்கிறது. எல்லாமே எரிந்து விட்டது, எங்குமே ஜீவனைக் காண முடியவில்லை, அந்த வாயுக்களினால் புல் பூண்டுகள் அனைத்தும் எரிந்துவிட்டன, மரங்கள் பட்டுப்போயின, எல்லாமே செத்துப் போய் முறுக்கப்பட்டு, தொங்கிக் கொண்டிருந்தன, தோட்டாக்கள் அதை துளைத்திருந்தன. 65இன்றைய உலகத்தின் காட்சியும் அதுவல்லவா? சாத்தான் தன் அவிசுவாசத்தை தெளித்து, தன் விஞ்ஞானத்தின் மூலமாகவும் அறிவின் மூலமாகவும் கலப்பினமாகச் செய்து விட்டான். ஆதியில் தேவன் ஆதாமையும், ஏவாளையும் வைத்த அந்த அழகான பரதீசாகிய தோட்டம், மரணமின்றி வியாதியின்றி, துயரமின்றி, எல்லாமே பரிபூரணமாக அமைந்திருந்தது. சாத்தானின் விஷத் தெளிப்பு அதை என்ன செய்து விட்டதென்று பாருங்கள்! அது சீர் குலைந்துவிட்டது. அதில் ஒன்றுமே இல்லை. அந்த குருவானவர் என்னிடம், ''நான் அழத்தொடங்கி இங்குமங்கும் நடந்தேன். அப்பொழுது ஒரு கன்மலை என்னைக் கவர்ந்தது. நான் அங்கு சென்று அந்த கன்மலையை உற்று நோக்கி, கல்லைப் புரட்டினேன். அந்த கல்லின் கீழ் ஒரு வெள்ளைப் பூ வளர்ந்து கொண்டிருந்தது. அது ஒன்று மாத்திரமே உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. ஏனெனில் அது, கன்மலையினால் பாதுகாக்கப்பட்டது'' என்றார். என் கன்மலையாகிய தேவனே, எங்களுக்குப் புகலிடமாயிரும். ஓ தேவனே, விஞ்ஞானத்தின் பெயராலும் கல்வியின் பெயராலும் விஷங்கள் எல்லாவிடங்களிலும் பரம்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எங்களுக்கு பாதுகாப்பாயிரும். ஓ தேவனே, அந்நாள் வரைக்கும் என்னைக் காத்தருளும் என்பதே என் ஜெபமாயுள்ளது. (சகோ. பிரன்ஹாம் பேசுவதை நிறுத்துகிறார். அப்பொழுது மேடையின் மேலிருந்த ஒருவர், ''சகோ. பிரன்ஹாமே, நேர அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டாம்'' என்கிறார் - ஆசி). நாம் ஒவ்வொருவரும் அந்த கன்மலையாகிய கிறிஸ்துவின் கீழ் இருக்கிறோம் என்று நம்புகிறேன். 66அன்றொரு நாள் நான் பிரசங்கித்ததை உங்களில் அநேகர் கேட்டீர்கள். நான் வேட்டையாட, காட்டின் வழியாய் சென்று கொண்டிருந்த போது, நான் திரும்பிப் பார்க்க வேண்டுமென்று ஏவப்பட்டேன். நான் பார்த்த போது, அங்கு ஒருகாலி சிகரெட் பாக்கெட் தரையில் இருந்தது. அது ஒரு புகையிலை கம்பெனி, அந்த கம்பெனியின் பெயரை நான் சொல்லக் கூடாது. அவர்கள், ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், புகை பிடிக்கும் மனிதனின் சுவை“ என்னும் கவர்ச்சிகரமான விளம்பரவாக் கியத்தைக் கொண்டிருந்தனர். நான் நடந்து செல்லத் தொடங்கி, காட்டில் சிறிது தூரம் சென்றேன். அப்பொழுது ஏதோ ஒன்று, ''அந்த சிகரெட் பாக்கெட்டிடம் மறுபடியும் செல்'' என்றது. நான், ''பரலோகப் பிதாவே, ஒருநாள் காலையில் நீர் வார்த்தையை உரைத்து அந்த அணில்களை சிருஷ்டித்த அந்த மரத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நீர் ஏன் என்னைத் திரும்பிப் போகச் சொல்லுகிறீர்?'' என்று எண்ணினேன். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், ''நீ ஞாயிறன்று ஒரு பிரசங்கம் செய்ய வேண்டும். அதன் தலைப்பு அதின்மேல் எழுதப்பட்டுள்ளது'' என்றது. நான்; ''சிகரெட் பாக்கெட்டின் மேலா?'' என்று எண்ணினேன். நான் மறுபடியும் அந்த இடத்திற்கு சென்றேன். நான், ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள், என்ன ஒரு வஞ்சகம்!'' என்று எண்ணினேன். ஒருவன் சிந்திக்கும் மனிதனாக இருந்தால் அவன் புகை பிடிக்கவே மாட்டான். ஆனால், பாருங்கள், ஜனங்கள் அந்த புகையை விழுங்குகின்றனர். 67இரண்டு ஆண்டுகட்கு முன்பு என்று நினைக்கிறேன், நான் ஒரு கன்வென்ஷனுக்கு சென்றிருந்த போது, மேற்கு கடற்கரையில் நடந்த உலக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். அங்கே சினிமா நட்சத்திரம் யூல் பிரன்னரின் படமும் மற்றவர்களின் படமும் காண்பிக்கப்பட்டது. அங்கு பல விஞ்ஞானிகள் ஒரே அறையில் இருந்து கொண்டு, புகை பிடித்தலினால் உண்டாகும் அபாயத்தை விளக்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் சலவைக் கல்லின் மேல் சிகரெட் புகையை ஊதி அதன் மேல் படிந்த நிக்கோட்டினை ஒரு Q-முனை கொண்ட கண்ணாடி குழலைக் கொண்டு சுரண்டி அதை எலியின் முதுகில் படியச்செய்து அதை கூண்டில் வைத்தனர். ஏழு நாட்களில் அந்த எலி புற்று நோயால் நிறைந்து அதனால் நடக்கவும் கூட முயடிவில்லை. பாருங்கள்? அந்த விஞ்ஞானி சொன்னார்... தண்ணீரின் வழியாக செலுத்தினார். ஒருவர், ''வடிகட்டும் பொருளை உபயோகித்தால்?'' என்றார். அவர், ''வடிகட்டும் பொருளா? அப்படி ஒன்று கிடையாது'' என்றார். இது விஞ்ஞானிகளே விளக்கினது. அவர்கள், ''தார் (tar) இல்லாமல் புகை உண்டாகாது. தார் தான் புகையை உண்டாக்குகிறது'' என்றார். 68ஒரே காரியம் என்னவென்றால், அதிக சிகரெட்டுகள் விற்பனை செய்வதற்கு அது கையாளப்படும் உபாயமாகும். அது, நான்... நான் தேவதூஷணம் உரைப்பதாகவோ அல்லது மூடபக்தி வைராக்கியம் கொண்டவன் என்றோ கருத வேண்டாம். ஒரு மனிதனுக்குள் இருக்கும் பிசாசு, அவன் புகைபிடிக்கும்படி செய்து, அவனைக்கொல்லப் பார்க்கிறது. ஒரு சிகரெட்டில் அடங்கியுள்ள நிக்கோடின் அவனுடைய ஆவலைத் தீர்க்குமானால், அந்த கம்பெனி இந்த வஞ்சிக்கும் உபாயத்தைக் கையாடி, ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்'' என்கிறது. எனவே, அவனைத் திருப்தி செய்யக் கூடிய போதிய அளவு தாரைப் பெறுவதற்கு அவன் ஒரு சிகரெட்டுக்குப் பதிலாக வடிகட்டும் பொருள் பொருத்தப்பட்ட நான்கு அல்லது ஐந்து சிகரெட்டுகளை புகைக்க வேண்டியதாயுள்ளது. அமெரிக்கர்கள் தங்கள் சகோதரருக்கும், சகோதரிகளுக்கும் மரணத்தை விற்பனை செய்கின்றனர். என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. 69இருப்பினும், ''சிந்திக்கும் மனிதனுக்கு சரியான ஒரு வடிகட்டும் பொருள் உண்டு'' என்று எண்ணினேன். ஒரு மனிதன் புகை பிடித்தால். அது அவனில் புகை பிடிக்கும் மனிதனின் சுவையை உண்டாக்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். அந்த சுவையை அவன் பெறாமல்... அவனுடைய ஆவலை தீர்க்கும் புகை கிடைத்து அந்த சுவை அவனுக்கு கிடைக்கப் பெறாமல் இருந்தால். அவன் ஒரு சாதாரண சிகரெட்டு பிடிப்பதற்கு பதிலாக வடிகட்டும் பொருள் பொருத்தப்பட்ட நான் கைந்து சிகரெட்டுகள் பிடிக்கிறான். பாருங்கள், இது ஒரு உபாயம். விற்பனை உபாயம், அமெரிக்க மக்களை அது வஞ்சிக்கிறது. அந்த குளிர் நாளில் போர்ஜ் பள்ளத்தாக்கில் ஜார்ஜ் வாஷிங்டனையும், அவருடைய இராணுவ வீரர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் காலணிகளும் கூட இல்லாமல் போரிட்டு நமக்கு இப்பொழுதுள்ள செழிப்பை சம்பாதித்து தந்ததையும் நினைவு கூருகிறேன். அப்படியிருக்க அமெரிக்கருக்கு ஒரு கள்ள உபாயத்தைக் கைக் கொண்டு, எல்லா பொல்லாங்குக்கும் வேராயுள்ள இழிவான ஆதாயத்துக்காக மரணத்தை விற்பனை செய்தல் என்பது! பணத்தின் மேல் பேராசை. எல்லாமே பைத்தியமாகிவிட்டது. இவையனைத்தும் அழிந்து போகும் என்பதை அவர்கள் அறியாமலிருக்கின்றனர். உங்களுக்கு புகை கிடைக்கவில்லை என்றால், சுவை கிடைக்காது. பிறகு நான், ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் ஒன்றுண்டு'' என்று எண்ணினேன். சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்! ''சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் பரிசுத்த மனிதனின் சுவையை உண்டாக்கும்'' என்னும் என் பொருளைத் தெரிந்து கொண்டேன். 70நமது ஸ்தாபனங்கள் அப்படிப்பட்ட அநேக காரியங்களைச் செய்து, எவ்வகையிலும் வாழ்ந்து தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைப்பவர்களை சேர்த்து கொண்டுள்ளது. ஏன்? தங்கள் ஸ்தாப்னங்களிலுள்ளவர்களின் எண்ணிக்கையை பெருக்கிக்கொள்ள. நமது எண்ணிக்கை அதிகமாகும் காரணம், இதன், அதன், மற்றதன் கீழ் வாழும் எவரையும் நாம் சேர்த்துக் கொள்கிறோம். ''அதனால் பரவாயில்லை. உங்கள் பெயர்களை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டு உங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டால், அதுவே போதுமானது. ஓ, நீங்கள் விசுவாசிக்க வேண்டும்''. பிசாசும் கூட விசுவாசிக்கின்றது. நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும். அது தேவனுடைய வடிகட்டும் பொருளின் வழியாக வருகிறது. சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் ஒன்றுண்டு. அதை என் கையில் பிடித்திருக்கிறேன். அது ஸ்தாபன சுவையை உண்டாக்காது. ஆனால் அது பரிசுத்த மனிதனின் சுவைக்கு திருப்தியை அளிக்கும் என்று உங்களுக்கு தெரியும். 71தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டுள்ள ஒரு ஸ்திரீ இந்த வடிகட்டும் பொருளின் வழியாக எவ்விதம் வர முடியும்? ''புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிப்பது தேவனுக்கு அருவருப்பானது'' என்று வேதம் கூறியிருக்க. குட்டை கால் சட்டை அல்லது நீள கால் சட்டை அணியும் ஸ்திரீ இதன் வழியாக எவ்விதம் வர முடியும்? தன்னை ஏதோவொன்று நினைத்துக் கொண்டு ஸ்திரீகளைப் போல் உடை உடுத்தி மயிரை நீளமாக வளர்த்து அதை கண்களின் மேல் விழ வைத்து, சுருட்டிவிட்டுக் கொள்ளும், மனிதனின் நிலை என்ன? அவன் தன் மனைவியின் உள்ளாடைகளை அணிந்து கொள்கிறான், அவளோ அவனுடைய வெளிப்புற ஆடைகளை அணிந்து கொள்கிறாள். இதுவா சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள்? ஒரு சிந்திக்கும் மனிதன் அல்லது சிந்திக்கும் ஸ்திரீ அவ்விதம் செய்ய மாட்டார்கள். தேவனுடைய வார்த்தை இவைகளை அதன் வழியாகச் செல்ல அனுமதிக்காது. இத்தகைய எதுவுமே அந்த வார்த்தையின் வழியாக கடந்து செல்ல முடியாது. அது பரிசுத்த ஆவி. அது வார்த்தையை உங்களுக்குள் கொண்டு வந்து பரிசுத்த மனிதனின் சுவையை தோன்றச் செய்கிறது. 72இன்று தெருவில் செல்லும் இக்கட்டாவைப் பாருங்கள். ஒரு அழகான உடலை தேவன் அவளுக்குக் கொடுத்திருக்கிறார், ஆனால் சாத்தானோ அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறான். அவள் ஒழுக்கமற்ற விதத்தில் உடுத்துகிறாள். இன்னும் ஒரு வாரத்தில் அவளுடைய உடல் கல்லறையில் அழுக வாய்ப்புண்டு என்பதை அவள் அறியாமலிருக்கிறாள். அண்மையில் நான் தெருவில் வந்து கொண்டிருந்தேன். அப்பொழுது நான் மேற்கு கடற்கரையில் தென்மேற்கு வேதாகமப் பள்ளியில் நடந்த அசெம்பிளீஸ் ஆப் காட் சபையினர் நடத்தின கன்வென்ஷன் ஒன்றில் பிரசங்கிக்கச் சென்றிருந்தேன். அப்பொழுது ஒரு சிறிய பெண் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தாள்... அவள் குறைவான ஆடைகளை அணிந்திருந்தாள் - நாம் 'பிகினி' என்று அழைக்கிறோமே, அது போன்ற உடை. அதன் ஓரம் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் மாட்டுப் பையனின் (Cow Boy) தொப்பியையும், காலணிகளையும் அணிந்திருந்தாள். நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன். நான், “பாவம் இந்த சிறு பெண், யாரோ ஒரு தாயும், தகப்பனும் பெற்ற பெண், இங்கு தேவனுடைய குமாரத்தியாக இருக்க வேண்டியவள், பிசாசின் கண்ணியாக அமைத்து விட்டாள்” என்று எண்ணினேன். “நான் திரும்பி அந்த சிறுமியிடம் சென்று அதை கூறுவேன்'' என்று எண்ணினேன். அவளுக்கு அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் என் மகள் சாராளின் வயதிருக்கும் - பதினாறு பதினேழு வயது. அதன் பிறகு என் மனதை மாற்றிக் கொண்டு, ''வேண்டாம், அவ்விதம் செய்யாமலிருப்பது நலம். நான் சாலையில் நடந்து கொண்டே அவளுக்காக ஜெபம் செய்வேன். நான் நின்று அவளுடன் பேசிக் கொண்டிருப்பதை யாராகிலும் பார்த்து விட்டால்! ஆகவே, அவ்விதம் நான் செய்யாமலிருப்பது நலம்'' என்று எண்ணினேன். 73தேவ குமாரர்களே, கவனியுங்கள். இன்றைய யேசபேல்கள் உங்களிடம் விளையாட வரும் ஒரு நிலை ஏற்படுமானால், சிந்திக்கும் மனிதன் முதலாவதாக சிந்திப்பான். அவள் ஒருவேளை மிகவும் அழகாயிருக்கலாம். ''நான் அவளை கவர்ந்து விடலாம்'' ஆனால் இளைஞனே, அது உன் ஆத்துமாவை நஷ்டப்படுத்திவிடும். அவ்வாறே பெண்களாகிய உங்களில் சிலர் இந்த ரிக்கிகளுடன் விளையாடினால் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் பரிசுத்த மனிதனின் சுவையை உண்டாக்கும். விவாகமான மனிதரே, தேவ குமாரர்கள், இந்த பெண்களை இவ்விதம் நீங்கள் தெருவில் காணும் போது, தொடக்கத்தில் என்ன நடந்ததென்பதை உணருவதில்லையா? ஜலப்பிரளயத்துக்கு முன் பிருந்த உலகத்திலிருந்த பெண்களை விஞ்ஞானம் மிகவும் செளந் தரியமுள்ளவர்களாகச் செய்த போது, தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளை (தேவ குமாரத்திகளை அல்ல) பெண் கொண்டார்கள். தேவன் அதை மறக்கவேயில்லை. அது முழு உலகத்தையும் அழித்துபோட்டது. விஞ்ஞானம் அழகை அதிகமாக்குகிறது. முன்பெல்லாம்... கடைசி நாட்களில் பெண்களின் அழகு அதிகமாயுள்ளதை நீங்கள் கவனித்தீர்களா, அதுவே முடிவின் அடையாளம். தேவன் அதை நிரூபித்திருக்கிறார். எனவே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகியுங்கள், அப்பொழுது நீங்கள் பரிசுத்த மனிதனின் சுவையைப் பெறுவீர்கள். அவ்விதம் செய்யாவிட்டால் அது உங்கள் வீட்டை இழக்கச் செய்யும் உங்கள் ஸ்தானத்தை இழக்கச் செய்யும், நீங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழக்கச் செய்யும், அது மாத்திரமல்ல, உங்கள் ஆத்துமாவையும் இழக்கச் செய்யும். வேறொரு மனிதன் உங்கள் பிள்ளைகளை வளர்க்கும்படி செய்யும், வேறொரு ஸ்திரீ உங்கள் பிள்ளைகளை வளர்க்கும் படி செய்யும். 74எனவே சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அது பரிசுத்த ஸ்திரியின் சுவையை உண்டாக்கும். நீங்கள் சிகை அலங்கரிக்கும் இடத்துக்கு புறப்படும் போது, சிந்திக்கும் ஸ்திரீயின் வடிகட்டும் பொருளை - வேதம் என்ன கூறியுள்ளதோ அதை - எடுத்துக் கொண்டு, அதிலிருந்து விலகுங்கள். பாருங்கள்? அப்படி செய்யாதீர்கள். நான் உங்கள் சகோதரன். உங்களை நான் நேசிக்கிறேன். உங்களுக்கு விரோதமாக எனக்கு ஒன்றுமில்லை. தேவன் அறிவார். உங்கள் மேல் நான் கொண்டுள்ள தேவ அன்பே இவைகளை நான் கூறும்படி செய்கிறது. ஒரு மனிதன் அதை உங்களுக்கு எடுத்துக் கூறாவிட்டால், உங்கள் போதகர் நீங்கள் அவ்விதம் நடந்துகொள்ள உங்களை விட்டுவிட்டால், அவருக்கு உங்கள் மேல் அன்பில்லை. அவர் உங்கள் மேல் அன்பு செலுத்த முடியாது. பெண்களைத் திருத்தாமல் அவர்கள் மேல் கொண்டிருக்கும் அத்தகைய அன்பு எனக்கு வேண்டாம். என் சகோதரி பரிசுத்த சுவையைபட பெற வேண்டுமென்பதே என் விருப்பம். அவள் உண்மையில் என் சகோதரியாயிருப்பதையே நான் விரும்புவேன். யாரோ ஒருவர் அவள் அழகைக் குறித்தும், அவள் எப்படியிருக்கிறாள் என்பதைக் குறித்தும், அவள் செக்ஸ் ராணியாய் இருக்கிறாள் என்று வர்ணிப்பதும் அல்ல. ''அவள் என்னுடைய...'' உ, ஊ, இல்லை, அவள் நாணயமுள்ள பெண்ணாக இருப்பதையே நான் விரும்புவேன். ஓ தேவனே, கன்மலையின் கீழ் என்னை வைத்துக் கொள்வீராக. ஆம், எபேசியர் 5:26ன்படி அந்த கன்மலையின் கீழ் நீங்கள் செல்லக் கூடிய ஒரே வழி, ''திருவசனத்தைக் கொண்டு நம்மை பிரிக்கும் தண்ணீரினால் சுத்திகரிக்கப்படுவதே.'' அது உண்மை. 75இப்பொழுது, பிசாசு தனது கல்வியை உங்கள் மேல் தெளிக்க இடம் கொடுக்காதீர்கள். வேண்டாம், வேண்டாம். அது உங்களைக் கொன்று போடும். ''என் தாயார், என் தகப்பனார், என் பாட்டி சேர்ந்திருந்த சபையை நானும் சேர்ந்திருக்கிறேன்'' என்பதை பிசாசு உங்கள் மேல் தெளிக்க இடங்கொடுக்காதீர்கள். வேதம் ஏழு சபைகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் உரைக்கும் போது, அது அனைத்தும் விதைக்குள் சென்றுவிட்டது என்கிறது. எல்லாமே அழுகிவிட்டது. எல்லாமே நொதிக்கிற இரணமாயுள்ளது. பிசாசு உங்கள் மேல் தெளிக்க இடங்கொடுத்து, ''அது உயரிய நெறி. நாங்கள் முன்காலத்தவரைக் காட்டிலும் அதிக கல்வி பயின்றுள்ளோம்'' என்று கூறாதீர்கள். பிசாசு அதை உங்கள் மேல் போட்ட இடங்கொடுக்காதீர்கள். அவனுடைய நாகரீகம், கல்வி, விஞ்ஞானம் ஆகிய முழுத்திட்டத்தை உங்களுக்குக் காண்பித்தேன். அவன் அதை சபையில் நுழைத்து விட்டான். அதற்கு செவி கொடுக்காதீர்கள். அந்த அசுத்தமான தொலைக்காட்சிகளிலிருந்தும் மற்றவைகளிலிருந்தும் விலகியிருங்கள். 76நமது பொருள், ''ஒத்த வேஷம் (conformed) தரியாமல், மறுரூபமாகுங்கள் (transformed)'' என்கிறது. அங்கு சென்று, ''நான் ஞாயிறன்று திடப்படுத்தலை (Confirmed) பெற்றுக் கொண்டேன்“ என்று கூறுவதல்ல. அங்கு சென்று உடனடியாக மறுரூபமாகுங்கள் இப்பொழுது உள்ள நிலையிலிருந்து, நீங்கள் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பும் நிலைக்கு மாறுதல். இப்பொழுது, உங்களுக்குள் எந்தவிதமான விதை உள்ளது என்பதை அது பொறுத்தது. உங்களுக்குள் நுண்ணறிவுள்ள, கல்வியறிவு கொண்ட விதை வைக்கப்பட்டிருந்தால், அது செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, தேவனுடைய குமாரனை அல்லது குமாரத்தியை உருக்குலையச் செய்வதே. அவ்வளவு தான். அது ஒன்றை மாத்திரமே அது செய்ய முடியும். நான் காணும் போது, இன்றைய ஜனங்கள், தேவன் இல்லையென்று அவர்கள் விசுவாசிப்பது போல் நடந்து கொள்கின்றனர். 77இவ்விதம் கூறினதால் என்னை மன்னிக்கவும். இதன் காரணமாக யாராகிலும் ஒருவருடைய மனது வேதனைப்பட்டால், அந்த நோக்கத்துடன் அதை நான் கூறவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஒரு ஞாயிறன்று, தொலைகாட்சியில் பக்தி பாடல்கள் பாடும் நிகழ்ச்சியைக் காண என் மகள் என்னை அழைத்திருந்தாள். அது ஒரு ஞாயிறு காலை. ஓரல் ராபர்ட்ஸின் நிகழ்ச்சியைக் காண நான் விரும்பினேன். அது காண்பிக்கப்படும் போது எனக்கு அறிவிக்கும்படி கூறியிருந்தேன். அவர்கள், ''இந்த பாடலைக் கேளுங்கள், இது மிகவும் நல்ல பாடல்'' என்றனர். அங்கு நின்று கொண்டிருந்த என் மகனும் கூட அவ்விதம் கூறினான். நான் தொலைகாட்சி பெட்டியை திருப்பினேன்... தன் வீட்டில் தொலைகாட்சி பெட்டியை வைத்திருக்கும் ஸ்திரீயிடமிருந்து நாங்கள் வாடகைக்கு வாங்குகிறோம். என் வீட்டில் தொலைகாட்சி பெட்டி வைத்துக்கொள்ள எனக்குப் பிரியமில்லை. இல்லை ஐயா! அது என் வீட்டில் இருப்பது எனக்குப் பிரியமில்லை. அதை துப்பாக்கியால் சுட்டு உடைத்து விடுவேன். அந்த பொல்லாத காரியத்தோடு யாதொரு தொடர்பும் கொள்ள எனக்குப் பிரியமில்லை. ஆம், ஐயா! ஆனால் அதை.... 78அரிசோனா நாட்டைச் சேர்ந்தவர்களாகிய உங்களைக் குறித்து இங்கு கூற விரும்புகிறேன். பள்ளிகளைக் குறித்த புள்ளி விவரத்தை அன்றொரு நாள் நீங்கள் கண்டிருப்பீர்கள் இல்லையா? அரிசோனா பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களில் எண்பது சதவிகிதம் மனநிலை கோளாறினால் அவதியுறுகின்றனர். அவர்களில் அறுபத்தேழு சதவிகிதம் தொலைகாட்சியைக் கண்டதால், அதை குறித்து என்ன சொல்லுகிறீர்கள்? எனவே உங்கள் துப்பாக்கியை உபயோகித்து அதை நொறுக்குவது நலம்! பாருங்கள்? பிசாசு அதை உங்கள் மேல் தெளிக்க இடங்கொடுக்காதீர்கள். இல்லை, ஐயா. ஜனங்கள், நான் கூறினது போன்று, நியாயத்தீர்ப்புக்கு வர வேண்டியதில்லை என்பது போல் நடந்து கொள்கின்றனர். தொலைகாட்சி பாடல் நிகழ்ச்சியில் இந்த பையன்களும், பெண்களும். அங்கு ஏதோ ஒரு இந்திய குடும்பம் இருந்தது. திரு. பூல் என்பவர் தான் அந்த பாடல் குழுவின் தலைவர் என்று நினைக்கிறேன். அவர்கள் பாடல்களைப் பாடினது எனக்கு நவீன கேலி பரியாசம் போல் காணப்பட்டது. ஒரு கூட்டம் ரிக்கிகள் அங்கு நின்று கொண்டு தங்கள் கைகளை மேலும் கீழும் அசைத்தனர். 79இன்று காலை பாடின. இந்த இளைஞனை நான் பாராட்டுகிறேன். அவர் மிகவும் கண்ணியமாக காணப்பட்டார், உண்மையான மனிதனைப் போல். அது எனக்குப் பிரியம். சில நேரங்களில் வர்த்தகர்களாகிய நீங்கள் ஒரு கூட்டம் ரிக்கிகளை இங்கு கொண்டு வந்து விடுகிறீர்கள். அவர்கள் இங்கு நின்று கொண்டு, உடலை அசைத்து, உரக்க சத்தமிட்டு, தங்கள் முகம் ஊதா நிறமாக மாறும் வரைக்கும் மூச்சைப் பிடித்து பாடுகின்றனர். அதுவல்ல பாடல். அது விஞ்ஞானப் பிரகாரமாக அதிக சத்தம் எழுப்புதல். பாடல் என்பது இருதயத்திலிருந்து புறப்பட்டு வரும் இன்னிசை. 80''இது என்ன பரிதாபம்! இது என்ன அவமானம்!'' என்று நினைத்துக் கொண்டேன். எனவே மதம் என்னும் பெயரால், தேவன் இல்லை என்பது போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர். அன்றொரு நாள் யாரோ ஒருவன் என் மகளுடன் சென்று கொண்டிருக்கும் பையனுடன் இவ்விதம் கூறினானாம். அவன் ஒரு கிறிஸ்தவன். அவன் ஆதாம், ஏவாளைக் குறித்து ஒரு புத்தி கூர்மையான வியாக்கியானம் அளித்து, “ஏதேன் தோட்டத்தில் ஏவாள் நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளே, அந்த மரத்தை அங்கு காண்கிறீர்களா? அங்கு தான் உங்கள் தாய் நமக்கு வீட்டுக்கு வெளியே ஆகாரம் கொடுக்கிறாள்'' என்றானாம். உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா, வைராக்கியமுள்ள கிறிஸ்தவன் என்று கருதப்படும் ஒருவன், தேவனுடைய வாக்குத்தத்தத்தையும், வார்த்தையும் எடுத்து அதை பன்றியின் பட்டியலில் எறிந்து விடுவான் என்று! அவர்கள் நியாத்தீர்ப்புக்கு வர வேண்டியதில்லை என்பது போல் நடந்து கொள்கின்றனர். ஆனால், தேவன் ஒவ்வொரு இரகசியத்தையும் நியாயத்தீர்ப்புக்கு கொண்டு வருவார். அவர்கள் தேவன் இல்லாதது போல் நடந்து கொள்கின்றனர். 81அவர்களை மூடன் என்றழைக்க நான் விரும்பவில்லை. ஏனெனில்... மூடன் (fool) என்றழைப்பது சரியல்ல என்று வேதம் கூறுகிறது. அது சரியல்ல என்று இயேசு கூறினார். “எந்த மனிதனையும் மூடனென்று அழைக்காதிருங்கள்'' என்றார். அவர் ஆனால் சங்.14:1, ”தேவன் இல்லையென்று மதிகெட்டவன் (fool) தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்“ என்றுரைக்கிறது. பாருங்கள்? அவர்கள் அப்படியல்ல. அவர்களை மூடர்களென்று அழைக்க நான் விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மூடர்களைப் போல் நடந்து கொள்கின்றனர். எனவே, இன்று நாம் எங்குள்ளோம் என்பதைப் பாருங்கள் - தேவன் ஒருவர் இல்லையென்பது போல். ''நான் ஒரு சபையைச் சேர்ந்தவன். வேதாகமம் முழுவதுமே ஒரு பெரிய ஹாஸ்யம். எங்கள் சபை, அது எங்கே செல்கிறதென்பதை அறிந்துள்ளது''. ஆம், நரகத்துக்கு நேரடியாக அவர்கள் நேராக அந்த பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானமும், கல்வியும், வேத சாஸ்திர பள்ளிகளும் அவர்களை அந்த பாதையில் வேகமாகத் தள்ளிக் கொண்டு செல்கின்றன. அவர்களுக்கு எதைக் குறித்தும் வெளிப்பாட்டை அளிக்க பரிசுத்த ஆவியானவருக்கு தருணம் கிடைப்பதில்லை. வேத சாஸ்திரபள்ளிகள் அதை அறுத்தெறிந்து விட்டன. பரிசுத்த ஆவியானவரே நம்மை நடத்த வேண்டும்; வேத சாஸ்திரப் பள்ளியோ, பேராயர்களோ, மேற் பார்வையாளர்களோ அல்ல. பரிசுத்த ஆவியானவரே, நம்மை வழி நடத்துபவர். உ, ஊ. 82காயீன் அப்படிப்பட்டவனாயிருந்தான். அவன் கிரியையில் மிகவும் மதாபிமானியாய் இருந்தான். உங்களுக்குத் தேவையெல்லாம் மதம் என்றால், காயீனைக் குற்றப்படுத்தினதற்காக தேவன் அநீதியுள்ளவராயிருப்பார். ஏனெனில் அவன் மதாபிமானியாய் இருந்தான். அவன் ஆபேலைப் போல் உத்தமமாயும், மதாபிமானியாயும் இருந்தான். அவன் தேவனைக் குறித்து சிந்தித்தான், அவன் தேவனை ஆராதித்தான், அவனுக்கு ஒரு சபை இருந்தது, அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அவன் பலி செலுத்தினான். அவன் ஜெபம் பண்ணினான், அவன் ஆராதித்தான், ஆனால் அவன் புறக்கணிக்கப்பட்டான். எவ்வளவு தான்... ஏசாவும் கூட. பாருங்கள்? மதம் பாருங்கள், அது சாத்தானின் வேலை; முழுவதும் கொன்றுவிடாமல் அதை அசுசிப்படுத்துவது. அவ்வளவு தான், அவன் முழுவதும் கொல்ல மாட்டான். ஓ, கம்யூனிஸ்டுகள் அல்ல; அல்ல. அந்திக்கிறிஸ்து கம்யூனிஸம் அல்ல. ''கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்'' என்று வேதம் உரைக்கிறது. நீங்கள் இரும்புத் திரையை கவனிக்காதீர்கள், ஆனால் இந்திர நீலத் (purple) திரையை கவனியுங்கள். உ, ஊ. 83கவனியுங்கள் காயீன் தொழுது கொள்ள வந்தான். ஆனால் அவனுக்குள் தவறான வித்து இருந்தது. சர்ப்பத்தின் 'உஸ்' என்னும் சீறும் சப்தம் அவன் மேல் சீறினது. அவன் ஸ்திரீயின் வித்தாக இருந்தான். அவன் தேவனுடைய பரிபூரண சித்தத்தை அறிந்திருந்தான், ஆனால் அதை செய்ய மறுத்தான். அது உங்களுக்குத் தெரியுமா? சாத்தான் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கிறான், ஆனால் அதை செய்ய மறுக்கிறான். கவனியுங்கள், தேவன் ஆபேலின் செய்தியை உறுதிப்படுத்துவதை அவன் கண்டான். இப்பொழுது நீங்கள் சிந்திக்க, ஒரு நிமிடம் உங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆபேலின் செய்தி உண்மை என்பதை தேவன் உறுதிப்படுத்தினார். இப்பொழுது நீங்கள் கிரகிக்கின்றீர்களா? உ, ஊ, ஆபேலின் செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது. காயீன் அதைக் கண்டு, அந்த செய்தி உண்மையென்று தேவன் உறுதிப்படுத்தினார் என்பதை அறிந்து கொண்டான். ஆனால் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனுடைய பெருமை தடை செய்தது. தேவன் அந்த செய்தியை உறுதிப்படுத்துவதை அவன் கண்டான். 84இன்றைக்கும் அவ்வாறேயுள்ளது, தேவனுடைய வார்த்தைக்குத் தங்களை தாழ்த்துவதென்பது ஜனங்களுக்கு கடினமாயுள்ளது. அவர்களுக்கு அதை செய்ய விருப்பமில்லை. அவர்கள் சபையின் கோட்பாடுகளுக்கு தங்களைத் தாழ்த்துவார்கள், நிச்சயமாக, ஆனால் தேவனுடைய வார்த்தைக்கு அல்ல. இதை நீங்கள் காண விரும்பினால், வேதத்தில்.... இங்கு ஒரு வேதவசனத்தை எழுதி வைத்திருக்கிறேன், அதை தான் இங்கு குறிப்பிடுகிறேன். ஆதியாகமம்;4:6,7 வசனங்கள். தேவன் காயீனிடம், ''உன் முகநாடி ஏன் வேறுப்பட்டது? உனக்கு ஏன் எரிச்சல் உண்டாகி, இங்குமங்கும் நடக்கிறாய்? நீ சற்றுமுன்பு கேட்ட செய்தி உனக்கு எரிச்சல் உண்டாக்கினது. அப்படி ஏன் செய்கிறாய்? உன் சபைக்குள் நான் வராத காரணத்தால் உன் முகநாடி வேறுபட்டதோ? ஏன் அப்படி செய்கிறாய்?'' என்று கேட்டார். நீங்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை உபயோகிக்கிறீர்களா? அவர், ''நீ ஏன்... அப்படி ஏன் காணப்படுகிறாய்? நீ நன்மை செய்ய விரும்பினால், நீ போய் உன் சகோதரன் அங்கு செய்கிறது போல் செய். அப்பொழுது நான் உன்னை ஏற்றுக் கொண்டு உன்னை ஆசீர்வதிப்பேன். அவனுக்குச் செய்வதையே உனக்கும் செய்வேன்'' என்றார். அவனால் செய்ய முடியவில்லை. அவர், ''நீ செய்யாமல் போனால், அவிசுவாசமாகிய பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்'' என்றார். 85அவர்கள் நம்மிடம், ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன'' என்கின்றனர். அவர்கள் வெளிப்படுத்தல் 10, மல்கியா 4ல் கூறப்பட்ட கடைசி நாட்களில், தேவன் வாக்களித்துள்ளவை பரிபூரணமாக உறுதிப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்படுவதைக் காண்கின்றனர். இவையனைத்தும் மிகப் பரிபூரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சகோதரரே, என்ன தவறு? பாருங்கள்? அவர்கள் விசுவாசியாமல் போனால், அவிசுவாசமாகிய பாவம். ஒரே ஒரு பாவம் தான் உண்டு, அதுதான் அவிசுவாசம். அது உண்மை. நீங்கள் குடிப்பதனால், புகை பிடிப்பதனால், புகையிலை மெல்லுவதனால், குட்டை கால்சட்டை அணிவதனால், அல்லது வேறென்ன செய்தாலும், அது உங்களை ஆக்கினைக்குட்படுத்துவதில்லை. நீங்கள் விசுவாசிக்காத காரணத்தால் தான். நீங்கள் விசுவாசித்தால், இவைகளைச் செய்யமாட்டீர்கள். பாருங்கள்? ஒரு விசுவாசி இவைகளை செய்வதில்லை. ஒரு விசுவாசி சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை எடுத்துக் கொள்கிறான், பாருங்கள், பாருங்கள், பெண் விசுவாசி சிந்திக்கும் ஸ்திரீயின் வடிகாட்டும் பொருளை எடுத்துக்கொள்கிறாள், இவ்விரண்டில் ஒன்றை. சரி ஆனால், பாருங்கள், பாவம் வாசற்படியில் படுத்திருக்கிறது. 86இப்பொழுது கவனியுங்கள், அது காயீனுக்கு என்ன செய்ததோ, அதையே இன்றைக்கும் செய்யும். அது காயீனை மனப்பூர்வமான பாவியாகப் போகச் செய்தது. அவன் மனப்பூர்வமாய்க் கீழ்படியாமல் போனான். மனப்பூர்வமாய் கீழ்படியாத ஒவ்வொரு நபருக்கும் அது அவ்விதமாகவே இருக்கும். ஆபேலின் செய்தி உண்மையென்று தேவனால் உறுதிப்படுத்தப்பட்டதை கண்ட பின்பும், அவன் மனப்பூர்வமாய் கீழ்படியாமல் போனான். அப்பொழுது அவன் பிரிக்கும் கோட்டை கடந்து சென்றான். நீங்கள் கடக்கக் கூடிய ஒரு கோடு உண்டு. அது உங்களுக்குத் தெரியும், இல்லையா? (சபையோர், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). இப்பொழுது, இங்கும் இந்த ஒலிபரப்பு தொலைபேசியின் மூலம் செல்லும் நாடுகளிலுமுள்ள போதகர்களே, அதை நீங்கள் உணருகின்றீர்களா? அது வேதவசனம் என்று நீங்கள் அறிந்திருந்தும், அதை செய்யாமல் போனால், தேவன் எப்பொழுதுமே... அவர்... ஓ, நீங்கள் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படுவீர்கள். அப்படித்தான் இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொருவரும் இருந்தனர். அவர்கள் வனாந்தரத்தில் வாழ்ந்து, பிள்ளைகளை, பயிர்களை வளர்த்து ஆசீர்வதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள், ஒவ்வொருவரும் தேவனிடமிருந்து நித்திய காலமாகப் பிரிக்கப்பட்டனர். இயேசு அவ்விதம் கூறினார். ஓ, ஆமாம். தேவன் உங்களை ஆசீர்வதித்துக் கொண்டேயிருப்பார், ஆனால் நீங்கள் தொலைந்து விட்டீர்கள். நிச்சயமாக. அப்படித்தான் வேதம் உரைக்கிறது, அப்படித்தான் அவர் கூறினார். கவனியுங்கள், நீங்கள் பிரிக்கும் கோட்டைக் கடக்க வாய்ப்புண்டு. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? (''ஆமென்''). காயீன் அவ்விதம் செய்தான். 87இப்பொழுது ஒரு நிமிடம் வேதாகமத்தை திருப்புவோம். நான் எபிரேயர் 10:26ஐ குறித்து வைத்திருக்கிறேன். அதை வேகமாக எடுக்க முடியுமா என்று பார்ப்போம். எபிரேயர் நிருபம் 10ம் அதிகாரம்... 26ம் வசனம் என்று நினைக்கிறேன். அதை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். என்னுடன் ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் அதைப் படிப்போம். சரி, இதோ அது. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமால், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். எபி.10:26-27. அது தேவனுடைய பரிசுத்த வார்த்தை உரைக்கிறதாவது. நாம் அதைக் கண்ட பின்பும் கேட்ட பின்பும் மனப்பூர்வமாய் அவிசுவாசிப்போமானால், நாம் கோட்டை கடந்துவிட்டோம். அதற்கு மன்னிப்பு இனியிராது, நீங்கள் கோட்டைக் கடந்துவிட்டீர்கள். நீங்கள், ''ஓ, தேவன் இன்னும் என்னை ஆசீர்வதிக்கிறார்'' எனலாம். ஓ, ஆமாம். 88எல்லைக் கோட்டை அடைந்த இஸ்ரவேலரை நினைவு கூருங்கள். தேவன் அவர்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை பரிசுத்த தேசத்தில் கொடுத்திருந்தார்; அதாவது அது பாலும் தேனும் ஓடுகிற செழிப்பான தேசமாயிருக்குமென்று. மோசே, காலேபையும், யோசுவாவையும் மற்ற வேவுகாரர்களையும் அந்த தேசத்தை வேவு பார்க்க அனுப்பின போது, அவர்கள் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சியை அங்கிருந்து கொண்டு வந்தனர். அந்த தேசத்திற்கு சென்ற பத்து பேர், ''நம்மால் முடியாது. அங்குள்ள கடினமான சூழ்நிலையைப் பாருங்கள். நாம் பைத்தியக்காராயிருப்போம். நமக்கு சண்டையிட இந்த சிறு ஆயுதங்களே உள்ளன. அவர்களிடம் என்ன உள்ளதென்று பாருங்கள் நம்மால் முடியவே முடியாது'' என்றனர். ஆனால் யோசுவாவும், காலேபும், ''நம்மால் நிச்சயம் முடியும். தேவன் வாக்குரைத்திருக்கிறார்'' என்றனர். ஞாபகம் கொள்ளுங்கள், அவர்கள் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டனர். அது காதேஸ்பர்னேயாவில். அவர்கள் திரும்பி வந்து வனாந்தரத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் ஒவ்வொரு வரும் மரித்து, நித்திய காலமாய் இழக்கப்பட்டனர். இயேசு அவ்விதம் கூறினார். அந்த பிரிக்கும் கோட்டை கடக்காதீர்கள், பாருங்கள். ''ஒருவன் நன்மை செய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.'' 89இஸ்ரவேல் ஜனங்கள் அதையே செய்தனர். மோசே உறுதிப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்ட பின்பும் - அந்த விலையேறப் பெற்ற விதை - பிலேயாம் அவர்கள் மேல் விஷத்தை தெளிக்க அவர்கள் இடங்கொடுத்தார்கள். போதகரே, இந்த வார்த்தைக்கு விரோதமாய் ஒரு போதும் ஒன்றையும் கூற வேண்டாம். பிலேயாமை பாருங்கள். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். தேவனுடைய விதை உறுதிப்படுத்தப்பட்டதை அவன் கண்டான். அவன் கொண்டிருந்த அந்த பெரிய ஸ்தாபனமாகிய மோவாபியர், அவர்களுடைய தேசத்தின் வழியாய் ஒரு கூட்டம் அலைந்து திரிபவர் வருவதைக் கண்ட போது. அவன் அவர்கள் மேல் விஷம் தெளித்து, ''ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் அனைவரும் கிறிஸ்தவவர்களே. நாம் எல்லோரும் விசுவாசிகளே. உங்களுக்கும், எங்களுக்கும் ஒரே முற்பிதாக்கள் இருந்தனர். நாம் லோத்தின் பிள்ளைகள் அல்லவா? லோத்து ஆபிரகாமின் உடன்பிறந்தவனின் மகன் அல்லவா? நாம் எல்லோரும் ஒன்றுதானே! நாம் ஒருவரையொருவர் விவாகம் செய்து கொள்வோம்'' என்றான். ஏதேன் தோட்டத்தில் சாத்தான் விஷத்தைத் தெளிக்க, ஏவாள் அனுமதித்தது போல, இஸ்ரவேலரும் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி தங்கள் மேல் விஷத்தை தெளிக்க அனுமதித்தனர் - அவர்கள் நடுவில் உறுதிப்படுத்தப்பட்ட வார்த்தையைக் கொண்டிருந்த உண்மையான தீர்க்கதரிசி இருந்தும் கூட. பிலேயாம் அறிவால் விளைந்த கருத்தை அவர்கள் மேல் தெளித்தான். அதை யோசித்துப் பாருங்கள். அது மன்னிக்கப்படவேயில்லை, அந்த பாவம் மன்னிக்கப்படவேயில்லை. 90அந்த தெளித்தலின் விளைவாக விதைகள் தங்கள் கடமையின் பாதையில், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் அழுகின. அவர்கள் ஒவ்வொரு வரும் சபையிலேயே, கடமையின் பாதையிலேயே, தேவனைப் பின்பற்றினவர்களாய் அழுகி நிர்மூலமாயினர். அவர்கள் சாத்தான் தங்கள் மேல் அறிவுத் தெளிப்பை - கல்வியறிவினால் நுண்ணறிவினால் விளைந்த கருத்தை - தெளிக்கும்படி அனுமதித்து, ''நாம் அனைவரும் ஒன்றே. நாம் தேவனுடைய பிள்ளைகள்“ என்று அவன் கூறினதற்கு செவிகொடுத்தனர். நீங்கள் அப்படியல்ல! ஆனால் அந்த கள்ளத் தீர்க்கதரிசி, தான் பெற்றிருந்த அறிவால் விளைந்த கருத்தை அவர்கள் மேல் தெளிக்கும்படி அவர்கள் அனுமதித்தனர். எக்யூமெனிகல் ஆலோசனை சங்கமும் இப்பொழுது அதையே செய்து கொண்டிருக்கிறது, அதே காரியம். “நாமெல்லாரும் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரிய ஸ்தாபனமாகி விடுவோம். உங்கள் ஸ்தாபன முறைமை முழுவதுமே பிசாசினால் உண்டானது. அது வேதாகமத்தின்படி மிருகத்தின் முத்திரை. கர்த்தருக்குச் சித்தமானால், அதைக் குறித்த புத்தகம் விரைவில் வெளிவரும். 91கவனியுங்கள், நோவாவின் காலத்தில், வார்த்தையானது மிதப்பதற்கென்று பேழை வடிவில் உண்டாக்கப்பட்டது. வார்த்தையானது தரையிலிருந்து ஆகாயத்துக்கு மாற்றப்படுவதற்கென ஒன்று சேர்க்கப்படுதல் என்பதைக் குறித்து ஒரு சிறு குறிப்பை இங்கு கூற விரும்புகிறேன். அந்த பேழையின் அமைப்பை அவர்கள் கண்டபோது, அக்காலத்திலிருந்த ஜனங்கள் தங்கள் அறிவால் விளைந்த கருத்தைக் கொண்டவர்களாய், முடிவு காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசியாகிய நோவாவைப் பார்த்து கேலி செய்தார்கள். ஆனால் அது... அந்த பேழை தேவனுடைய வார்த்தையின்படி அமைக்கப்பட்டு, உள்ளும் புறமும் ஜெபம் விசுவாசம் என்னும் கீலினால் பூசப்பட்டிருந்தது. மழை வந்த போது, மதங்களின் அறிவு கருத்துக்கள் அனைத்தும்... அவர்களுடைய சபைகளில், பூமியின் மேல் அழுகிப்போனது பேழையோ இவையனைத்துக்கும் மேலாக மிதந்தது. விஞ்ஞானத் தெளித்தலைக் கொண்டிருந்த விதை நியாயத்தீர்ப்பில் அழுகினது. 92நாம் இப்பொழுது என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறோம்? நமது சபையை நிறுவமுயன்று கொண்டிருக்கிறோமா, அல்லது தேவனுடைய வார்த்தையை நிலைநாட்ட முயன்று கொண்டிருக்கிறோமா? நாம் என்ன செய்ய முயன்று கொண்டிருக்கிறோம்? நாம் எந்த நோக்கத்துடன் பணி புரிந்து கொண்டிருக்கிறோம்? ஜனங்களை மீண்டும் இதில் கொண்டு வர முயன்று கொண்டிருக்கிறோமா? இந்த மகத்தான காலம், இந்த ஏதேன் சபை இந்த கடைசி நாட்களில் என்ன செய்து கொண்டிருக்கிறது? சகோதரனே, காலதாமதமாகி விட்டது, நான் இப்பொழுதே முடிக்க வேண்டும். (ஒரு சகோதரன், ''தொடருங்கள் என்கிறார் - ஆசி). எனக்கு இன்னும் பதினைந்து நிமிடம் தாருங்கள் நான் எழுதிவைத்துள்ள வேத வசனங்களைக் கூறாமல் நிறுத்திக் கொள்கிறேன் (''நிச்சயமாக, தொடருங்கள்''). ஆம், சரி, எனக்குத் தெரியும். நல்லது, ஜனங்கள் இதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகின்றனர் போலும். பிரசங்கத்தை முடித்துக் கொள்வது எனக்குக் கடினமாயுள்ளது (''தொடருங்கள், அவசரம் ஒன்றுமில்லை). நான் வேகமாக முடிக்கிறேன். சரி. 93சபை என்றழைக்கப்படும் இன்றைய மகத்தான விஞ்ஞானப் பிரகாரமான, கல்வியறிவு கொண்ட கலப்பு ஏவாளைப் பாருங்கள். அவள் என்ன செய்யமுயல்கிறாள்? அவள் தேவனுடைய வார்த்தையை உயர்த்த முயல்கின்றாளா, அல்லது மக்கள் செய்து கொண்டிருப்பதை செய்யும்படி விட்டுக் கொடுக்கிறாளா? அவர்கள் சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை, அதாவது தேவனுடைய வடிகட்டும் பொருளை, உபயோகிப்பதில்லை. அவர்கள் எதை உற்பத்தி செய்கின்றனர் என்று பாருங்கள். அவர்கள் தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்கின்றனர். சபையானது தன் அறிவுத்திட்டத்தின் மூலம் விதையை செய்து உருக்குலைய, மானிட வர்க்கம் முழுவதுமே தேவனுடைய வார்த்தையை விஞ்ஞானப் பிரகாரமாக அறியாமலிருக்கும் நிலையை அடையும்படி செய்துள்ளது, இவைகளில் நான் நீண்ட நேரம் நிலைத்திருக்கப் போவதில்லை. வேகமாக முடிக்கப் போகிறேன். விஞ்ஞானப் பிரகாரமான அறியாமை! தேவன், வாக்குத்தத்தம் பண்ணின தம்முடைய வார்த்தையினால் இங்கு இவைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, அவர்கள் அதை அலட்சியம் செய்து அதை விட்டு விலகிச் சென்று விடுகின்றனர். ஏனெனில், அவர்கள் விஞ்ஞானப் பிரகாரம் அறியாதவர்களாயிருக்கின்றனர். விஞ்ஞான பிரகாரமான அறியாமை! 94(அப்பொழுது நான் புன்முறுவல் செய்த காரணம், இங்குள்ள சகோ. வில்லியமஸ் ஒரு காகிதத் துண்டில், ''நீங்கள் பிற்பகல் முழுவதும் பிரசங்கிக்கலாம்'' என்று எழுதி அனுப்பியிருந்தார். அதை நான் பாராட்டுகிறேன். அது உண்மையில் அருமையானது.) 95ஜனங்கள் மனப்பூர்வமாக பாவம் செய்கின்றனர். அது இன்று சபை உலகம் முறைமை முழுவதையும் தேவனுக்கு விரோதமான, மனப்பூர்வமான பாவத்திற்குள்ளாக்கியுள்ளது. சாதாரண ஒழுக்க முறையே (common decency) நான் கூறுவது சரியென்று உங்களுக்கு நிரூபித்துக் காண்பிக்கும். சரி, அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் காணக் கூடாதபடிக்கு இச்சை என்னும் திரை அவர்களுடைய கண்களைக் குருடாக்கியுள்ளது. அவள் மறுபடியும் நிர்வாணியாக இருக்கிறாள். தேவன் வெளிப்படுத்தல் 3ம் அதிகாரத்தில், ''நீ பார்வையடையும்படிக்கு என்னிடத்தில் வந்து கண்களுக்கு கலிக்கம் வாங்கிக்கொள்'' என்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். பாருங்கள், கலிக்கம் என்பது அவருடைய வார்த்தை. 96உங்களுக்குத் தெரியுமா, அவர்கள், ''அந்த மனிதன் நாற்பது ஆண்டுகள் படித்து பட்டம் வாங்கினார். அவர், பி.எல்டி, டிடி, போன்ற பட்டங்களைப் பெற்றிருக்கிறார்'' என்கின்றனர். இதைக் குறித்து இயேசு என்ன சொன்னார் தெரியுமா? அவர், ''ஒருவன் தன்னைத் தான் வெறுத்து என்னைப் பின்பற்றக்கடவன்'' என்றார். பவுல் அதை செய்தான். நீங்கள், ''அதுவல்ல அதன் அர்த்தம்'' எனலாம். அப்படியானால், பவுல் ஏன் அதைப் பின்பற்ற வேண்டும்? அவன், ''நான் உங்களிடத்தில் சிறந்த வசனிப்போடாவது மனுஷஞானத் தோடாவது வரவில்லை. அப்படியிருந்தால் உங்கள் நம்பிக்கை அதன் மேல் கட்டப்பட்டிருக்கும். உங்கள் விசுவாசம் மனுஷ ஞானத்தில் அல்ல, தேவனுடைய வார்த்தையின் மேல் கட்டப்பட்டிருக்கும்படிக்கு, நான் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், பெலத்தோடும் உங்களிடத்தில் வந்தேன்“ என்றான். 97ஜனங்கள் சாதாரண ஓழுக்க முறையையும், நாணயத்தையும் இழந்துவிட்டது போல் தோன்றுகிறது. அவர்கள் முன்பிருந்தது போல் இப்போழுது இல்லை. முன்பெல்லாம் தீர்க்கதரிசி, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொன்ன போது, நடுங்குவது வழக்கம். ஆம், அவர்கள் நிச்சயம் நடுங்கினர். ஜனங்கள் பயந்து, அசைந்தனர். ஆனால் இப்பொழுதோ அவர்களுக்கு பயம் அனைத்தும் போய்விட்டது. அவர்கள் தேவனுக்கு பயப்படுவதில்லை. “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்'' என்று சாலொமோன் சொன்னான் - அதன் ஆரம்பம் மாத்திரமே. ஆனால் தீர்க்கதரிசி, ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்று சொன்னால், ஜனங்கள், ''மூடத்தனம்'' என்கின்றனர் பாருங்கள், அவர்களுக்கு விமோசனமே இல்லை. அவர்கள், ''நாங்கள் புத்திசாலிகள், நாங்கள் அறிவுள்ளவர்கள், அப்படிப்பட்ட ஒன்றை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்'' என்கின்றனர். தேவதூதர்கள் நடக்க பயப்படும் பாதையில் மூடர்கள் ஆணி அடிக்கப்பட்ட காலணிகளுடன் நடந்து செல்வார்கள் என்னும் ஒரு பழமொழி உண்டு. நிச்சயமாக. 98இப்பொழுது, மறுரூபமாகுதல் என்றால் என்ன? (வேகமாக). அதை நாம் எப்படி பெறுவது? மறுரூபமாகுதல் என்ன செய்கிறது? தேவன் தமது வார்த்தையின் ஆவியால் அதை செய்கிறார். அவர் மறுரூபப்படுத்துகிறார். அவர் தமது விதையை விதைத்து, அதன் மேல் தமது ஆவியை ஊற்றுகிறார், அது அந்த பொருளைத் தோன்றச் செய்கிறது. பரிசுத்த ஆவியானவர் வார்த்தையாகிய விதையை மறுரூபப்படுத்தி, அதன் ஜாதியை முளைப்பிக்கச் செய்து அதை உறுதிப்படுத்துகிறார். உங்களுக்குள் இருப்பது நீங்கள் எந்த விதமானவிதை என்பதை காண்பிக்கிறது. அதை நீங்கள் மறைக்க முடியாது. நீங்கள் உள்ளே என்னவாக இருக்கிறீர்களோ, அது வெளியே காணப்படுகிறது. அதை நீங்கள் தவிர்க்க முடியாது. அந்த மரத்தை நீங்கள் அது இருப்பதைவிட வேறுவிதமாகச் செய்ய முடியாது. பாருங்கள், அது அவ்விதமாகத்தான் இருக்கும். பரிசுத்த ஆவியானவர் விதைகளுக்கு உள்ளே இருப்பதை மறுரூபப்படுத்துகிறார். அது எந்தவிதமான விதையாயிருந்தாலும், அது அதை மறுரூபப்படுத்தும். அது பொல்லாததாய் இருந்தால், பொல்லாததை தோன்றச் செய்யும். அது உண்மையான தேவனுடைய வார்த்தையாயிருந்தால், அது சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருள் வழியாக உண்மையான தேவகுமாரனை அல்லது குமாரத்தியைத் தோன்றச் செய்யும். விதை மேலே வரும்போது அதன் வழியாக வந்து, தேவகுமாரனை அல்லது குமாரத்தியை தோன்றச் செய்யும். 99ஒரு நாள் உலகத்தில் இருள் சூழ்ந்திருந்த போது, தேவன்... இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், நான் அதிக நேரம் பேசப் போவதில்லை. இன்னும் சிறிது நேரம். ஒருநாள் உலகத்தில் எல்லாவிதமான மார்க்கங்களும், கைகளைக் கழுவுதல், குடங்கள், வெவ்வேறு அங்கிகளையும் தொப்பிகளையும் அணிதல் போன்ற சடங்காச்சாரங்கள் நிறைந்து மிகவும் குழப்பமான நிலையில் இருந்தது. தேவன் இஸ்ரவேலருக்கு அளித்திருந்த உண்மையான நியாயப்பிரமாணங்களும், சட்டதிட்டங்களும் மிகவும் தாறுமாறாக்கப்பட்டு, இயேசு அவர்களைப் பார்த்து, ''உங்கள் பாரம்பரியங்களினால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்'' என்றார். அவர்கள் பரிசுத்த ஆசாரியர்கள் என்றழைத்தவர்களைப் பார்த்து இயேசு, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள். அவனுடைய கிரியைகளையே நீங்களும் செய்கிறீர்கள்'' என்றார். பாருங்கள், அப்படித்தான் அவர் கூறினார். 100உலகமானது அவ்வித குழப்பத்தில் இருந்த போது தேவ ஆவியானவர் முன் குறிக்கப்பட்ட ஒரு வித்தின் மேல் அசைவாடினார். அவர் ஏசாயா;9:6ல் கூறப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை மறுரூபப்படுத்தி அதை தத்ரூபமாக்கினார். அப்பொழுது தேவன் அந்த குழப்பமான நேரத்திலிருந்து காப்பாற்ற மனித சரீரத்தில் தோன்றினார். மனிதன் தேவனுடைய சாயலிலே உண்டாக்கப்பட்டான், ஆனால் இங்கு தேவனே வருகிறார். அதை தீர்க்கதரிசி முன்கூட்டியே காண்கிறான். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், வார்த்தையாகிய தேவனை தீர்க்கதரிசி முன்கூட்டி காண்கிறான். இதே தீர்க்கதரிசி இந்தக் கடைசி நாட்களில் சாத்தானின் கல்வி சம்பந்தமான திட்டங்களையும், மதசம்பந்தமான திட்டங்களையும் காண்கிறான். அதே தீர்க்கதரிசி ஏசாயா;9:6ல், “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவருடைய நாமம் அதிசயமானவர், ஆலோனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும். அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கு முடிவில்லை'' என்றான். அது தேவனுடைய வார்த்தை. ஆவியானவர் அந்த வார்த்தையின் மேல் அசைவாடி, அது கன்னிகையின் வயிற்றில் ஒரு பாலகனை உருவாக்கியது. ''ஒரு பாலகன் பிறந்தார், அவர் ஆதி மனிதனைப் போல் சிருஷ்டிக்கப்படவில்லை, பிறந்தார்.'' 101சாத்தான் மறுபடியும், மறுபடியுமாக அதை தெளிக்க முயன்றான். அவன் அவரை மேலே கொண்டு சென்று, ''நீர் யாரென்று கூறிக்கொள்வது உண்மையானால், எனக்கு இந்த சுகமளித்தல் சிலவற்றை செய்து காட்டும். அதை எப்படி உம்மால் செய்ய முடிகிறது என்பதை எனக்குக் காட்டும். இந்த கற்களை அப்பங்களாக்கும். நீர் கீழே குதிப்பதை நான் காணட்டும். உம்மால் செய்ய முடியும் என்று வேதம் உரைக்கிறது'' என்றான். மத சம்பந்தமான பிசாசுகள் இன்றைக்கும் அதையே கூறுவதை நீங்கள் காண்கிறீர்களா? ''தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று இருக்குமானால், இதோ சகோதரன் இன்னார் இங்கு படுத்துகிடக்கிறார். அவருக்கு நீர் சுகமளிப்பதை நான் காணட்டும்.'' அதே பிசாசு இயேசு சிலுவையில் அறையுண்டபோது அங்கு நின்று கொண்டு, ''நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலிருந்து இறங்கி வா'' என்றது. அவர் தேவனுடைய குமாரன் என்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. அவர் தேவனுடைய குமாரன் என்று ஆவியானவர் நிரூபித்தார். ஏசாயா;9:6 நிறைவேறினது. அன்றிரவு ஒலிபரப்பைக் கேட்ட உங்களில் அநேகர், அவர் தேவனுடைய குமாரன் என்று வேதம் உரைக்கிறது என்பதை நிரூபிக்க நாங்கள் ஏறக்குறைய அறுபது சொச்சம் தேவ வசனங்களை எடுத்துக் காண்பித்ததை கேட்டீர்கள். 102ஓ, சாத்தான் மறுபடியும் முயன்று எல்லாவற்றையும் செய்தான். ஒருநாள் அவர் கப்பலின் அடித்தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை அவன் கண்டு, “இப்பொழுதே அவரை அழித்து விடுவேன்'' என்றான். ஆனால் அவனால் முடியவில்லை. அவர் தவறான காரியத்தை செய்ய வேண்டுமென்று அவன் அவரைச் சோதித்தான். ஆனால் அவனால் முடியவில்லை. ஏன்? அவர் விரட்டும் தைலமாகிய (repellent) முன்குறித்தல் என்பதனால் தெளிக்கப்பட்டிருந்தார். எனவே அவர் வஞ்சிக்கப்பட முடியாது. இல்லை. இல்லை, அவர் இவ்வுலகிற்கு வருவார் என்று வார்த்தை உரைத்தது. ஆமென். எந்த பிசாசும் அவரைத் தொல்லைப்படுத்த முடியாது. வேறெந்த தேவகுமாரனும் அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முன்குறிக்கப்படவில்லை. அவர் விரட்டும் தைலத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறார். சாத்தானின் விஷம், ஸ்தாபனத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் அவரைத் தொடவும் கூட முடியாது. அவர் நடந்து கொண்டே செல்கிறார், ஒன்றுமே அவரைத் தொல்லை படுத்த முடியாது. எதுவுமே அவரைப் பாதிக்கவில்லை. 103''நல்லது, உம்மை பூமியனைத்துக்கும், பேராயராக்கி விடுவேன். எனக்கு அதன்மேல் ஆளுகை உள்ளது. நீர் மாத்திரம் என்னைப் பணிந்து கொண்டு என் கூட்டத்தில் வந்து சேர்ந்து கொள்ளும். உம்மை அரசாளும்படி வைப்பேன். நான் கீழே இறங்கிவிட்டு, உம்மை மேலே ஏற்றுவேன்.'' அவர், ''அப்பாலே போ, சாத்தானே, வார்த்தையாகிய தேவனைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே'' என்றார். பிறகு ஒரு நாள்... இந்த மகத்தான நபரைக் குறித்து, சிறிது நேரம் பேச விரும்புகிறேன். ஒருநாள், ஆவியானவர் மறுபடியும் அவர் மேல் அசைவாடினார். ஏனெனில், தீர்க்கதரிசியின் மூலம் தேவனிடத்திலிருந்து வந்த அவரைக் குறித்த சில வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன. ''அவர் ஆட்டுக்குட்டியைப் போல் அடிக்கப்படும்படி கொண்டு போகப்பட்டார். ஆவியானவர் அவர் மேல் அசைவாடி, அவரை நடத்திச் சென்று, கல்வாரி சிலுவைக்கு அனுப்பினார். அங்கு அவர் மரித்தார். அவருடைய மரணத்தைக் குறித்து உரைக்கப்பட்டிருந்த அனைத்தும் நிறைவேறி, பூமியின் மேலிருந்த முன்குறிக்கப்பட்ட தேவனுடைய வித்துக்கள் அனைத்துக்கும் வெளிச்சத்தையும், ஜீவனையும் கொண்டு வந்தது. அதைச் செய்யும் வழியை அவர் கொண்டு வந்தார். இதோ வித்து உள்ளது, ஆவியானவர் ஜீவனைக் கொண்டு வந்து, தேவனுடைய குமாரரையும், குமாரத்திகளையும், உலகத்திலுள்ள இந்த இருளின் குழப்பத்திலிருந்து தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்க மறுரூபப்படுத்துகிறார். 104''முன்குறித்தல்'' என்னும் சொல்லைக் கண்டு இடற வேண்டாம். நீங்கள் இடறுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். கவனியுங்கள், அது என் வார்த்தையல்ல. அது தேவனுடைய வார்த்தைகளில் ஒன்று. நீங்கள் படிக்க விரும்பினால், எபேசியர்;1:5ஐப் படியுங்கள். ''நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்.'' பாருங்கள்? இதை ஒரு நிமிடம் விவரிக்க விரும்புகிறேன், ஒரே நிமிடம். உங்கள் மனதிலிருந்து சந்தேகத்தைப் போக்க. பாருங்கள். நீங்கள் தொடக்கத்தில் உங்கள் தகப்பனில் ஒரு வித்தாக இருந்தீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் அவ்விதம் இருந்தீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கொள்ளுபாட்டனார். அவருக்கும் பாட்டனார், அவருக்கும் பாட்டனார்க்குள்ளேயும் இருந்தீர்கள், அது உங்களுக்குத் தெரியுமா? (சபையோர் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி). எபிரெயர் நிரூபத்தை வாசித்துப் பாருங்கள். லேவி ஆபிரகாமின் அரையிலிருந்த போது, தசமபாகம் கொடுத்தான் என்று காண்கிறோம். அவன் ஆபிரகாமுக்கு நான்கு தலைமுறைக்கு பிறகு தோன்றினவன். ஆபிரகாம் மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்த போது, அது நான்காம் தலைமுறையில் பிறந்த லேவியின் கணக்கில் எடுக்கப்பட்டது. அப்பொழுது அவன் ஆபிரகாமின் அரையிலிருந்தான். பார்த்தீர்களா? பாருங்கள்? 105நீங்கள் உங்கள் தகப்பனின் அரையிலிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மாம்ச சரீரத்தில் மாற்றப்படும் வரைக்கும் உங்கள் தகப்பன் உங்களுடன் ஐக்கியம் கொள்ள முடியாது. என் மகன் எனக்குள் இருந்தான். எனக்கு ஒரு மகன் வேண்டுமென்று விரும்பினேன். ஆனால், அவன் அப்பொழுது எனக்குள் இருந்தான். பாருங்கள்? ஆனால் விவாகத்தின் மூலம் அவன் என்னைப் போன்ற ஒருவனாக மாற்றப்பட்டு, என்னைப் போலானான். நீங்கள் உங்கள் பெற்றோரைப் போல் ஆகின்றீர்கள். ஏனெனில் தொடக்கத்திலேயே அது உங்களுக்குள் இருந்தது. நீங்கள் தேவனுடைய குமாரராயிருப்பீர்களானால், அவருடைய தன்மைகள் (attributes)... நீங்கள் உங்கள் தகப்பனின் தன்மையாயிருக்கிறீர்கள், தாயின் தன்மை அல்ல. வித்து தகப்பனில் இருக்கிறது. பாருங்கள்? உங்கள் தாய் உங்களைச் சுமந்து உங்களை பிரசவிக்கும் கருவி மாத்திரமே. அவள் உங்கள் தகப்பனின் வித்தை சுமக்கிறாள். பாருங்கள்? 106பூமியும் கூட இயற்கையில் தேவனுடைய வித்தை சுமக்கும் கருவியாயுள்ளது. பாருங்கள். முற்றிலுமாக. உலகம் எவ்வளவு பெரிது என்பதல்ல; அதை உண்டாக்கின தேவன் எவ்வளவு பெரியவர் என்பது தான் முக்கியம் வாய்ந்தது. பாருங்கள்? பாருங்கள்? நீங்கள் தேவனுடைய குமாரன் அல்லது குமாரத்தியாயிருந்தால் நீங்கள் தொடக்கத்திலேயே தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவருடைய தன்மைகளாயிருக்கிறீர்கள். நீங்கள் அப்பொழுது அவருக்குள் இருக்கவில்லை என்றால், நீங்கள் முன்பு இருக்கவில்லை, இனிமேல், இருக்கப்போவதுமில்லை. ஏனெனில் நான், அரையில், இங்குள்ள இந்த மனிதனின் குமாரனையோ, அங்குள்ள அந்த மனிதனின் குமாரனையோ சுமக்க முடியாது. நான் என் சொந்த குமாரனை மாத்திரமே சுமக்க முடியும். அவர்கள் என் சாயலைத் தரித்துக் கொண்டிருப்பார்கள். அல்லேலூயா! உங்களுக்கு விளங்குகிறதா? 107தேவனுடைய குமாரரும், குமாரத்திகளும் அவருக்குள் தொடக்கத்திலேயே இருந்தனர். இப்பொழுது கவனியுங்கள். உங்களுக்கு நித்திய ஜீவன் உள்ளதாக நீங்கள் கூறுகிறீர்கள். நமக்கு நித்திய ஜீவன் உள்ளதாக நாம் விசுவாசிக்கிறோம். ஒரே வகையான நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவன். நித்தியமாயுள்ள ஒன்றே ஒன்று தேவனே. அப்படியானால், உங்களுக்கு நித்திய ஜீவன் மாத்திரமே உண்டு, அது தேவன். நித்தியமாயுள்ள ஒன்றே ஒன்று தேவனே அப்படியானால், உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், உங்களுக்குள் இருக்கும் அந்த ஜீவன் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. உலகம் உண்டாவதற்கு முன்பே நீங்கள் தேவனுடைய அரையில் இருந்தீர்கள். அந்த வார்த்தை தானே... இயேசுவே வார்த்தை என்று அழைக்கப்படுகிறார். ''ஆதியிலே வார்த்தை என்று அழைக்கப்படுகிறார். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார்'' என்று பரி. யோவான்; 1ம் அதிகாரம் உரைக்கிறது. அப்படியானால் நீங்கள் இயேசுவின் அரையில் இருந்து. அவருடன் கல்வாரிக்குச் சென்றீர்கள். அவருடன் மரித்தீர்கள், அவருடன் உயிரோடெழுந்தீர்கள். இன்றைக்கு நாம் அவரில் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, அவருடைய ஆவியினால் நிறைக்கப்பட்டு, தேவனுடைய குமாரத்திகளுமாயிருக்கிறோம். அவருடன் மரித்து, அவருடன் உயிரோடெழுந்தோம். நிச்சயமாக. 108இப்பொழுது நீங்கள் அவருடன் ஐக்கியங்கொள்ள முடிகிறது. அவருக்குள் இருந்த போது உங்களால் அப்படி செய்ய முடியவில்லை, ஏனெனில் நீங்கள் அவருக்குள் ஒரு வார்த்தையாக மாத்திரம் இருந்தீர்கள் - ஒரு வித்தாக. இப்பொழுதோ அவர் உங்களை மாம்சத்தில் தோன்றச் செய்திருக்கிறார். நீங்கள் அவருடன் ஐக்கியங்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். உங்களுடன் பரிபூரணமாக ஐக்கியங்கொள்ள அவர் இறங்கி வந்து மாம்சமானார். பரிபூரண ஐக்கியத்தைக் கண்டீர்களா? ஓ, என்னே, இந்த தேவனுடைய ஆழமான இரகசியங்கள்! எவ்வளவு அருமையானவை! பாருங்கள், தேவன் ஆவியில் ஐக்கியங்கொள்ள முடியாது. எனவே தேவன் நம்மோடிருக்க மனிதனானார். இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனே அவர் மாம்சத்தில் பிறந்ததால் குமாரன் என்னப்பட்டார். அவருடைய சரீரம் அவர் வசிப்பதற்கென அளிக்கப்பட்ட கூடாரம். ''தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் ஓரே பேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.'' தேவன் வசிப்பதற்கென தமக்கொரு வீட்டை, ஒரு சரீரத்தை கட்டிக் கொண்டார். நீங்கள் அவரைத் தொடுவதற்கென அவர் இறங்கி வந்தார். 1.தீமோ.3:16, ''அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். தேவ தூதர்களால் காணப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்.'' பாருங்கள்? இப்பொழுது அவர்... 109நீங்கள் மாம்சமாயிருப்பதனாலும், அவர் மாம்சமாயிருப்பதனாலும், நீங்கள் அவருடன் ஐக்கியங்கொள்ள முடிகிறது. ஏனெனில் அவர் தேவனுடைய அன்பின் தன்மையாயிருந்தார். தேவன் அன்பாயிருக்கிறார். அது சரியா? இயேசு தேவனுடைய அன்பின் தன்மையாயிருந்தார். அந்த அன்பின் தன்மை வெளிப்பட்ட போது - அது தேவனே - அவரிடம் சேர்ந்திருந்த தன்மைகள் அனைத்துமே அவரிடம் வந்துவிட்டது. ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் நிச்சயமாக. அவர்கள் முன்குறிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நீங்கள் அங்கு இருக்க மாட்டீர்கள். அவ்வளவு தான். நிச்சயமாக. இப்பொழுது நாம் அவருடைய வார்த்தையின் ஐசுவரியத்தின் மூலம் ஐக்கியங்கொள்ள முடிகிறது. அதன் ஒரு பாகமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் வார்த்தையின் பாகமாக இருக்கிறீர்கள். ஏனெனில் அவர் ஆதியிலே வார்த்தையாயிருந்தார், இப்பொழுது நீங்கள் வார்த்தையாயிருக்கிறீர்கள். பாருங்கள்? வார்த்தை என்பது என்னவென்று இன்றிரவு அல்லது ஞாயிறன்று, அல்லது இங்கு நான் வரும் ஏதாவது ஒரு நாளில் பிரசங்கிப்பேன் பாருங்கள் இப்பொழுது நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். 110கவனியுங்கள் ஒரு காரியத்தை என்னால் செய்ய முடியாது. என் முன்னோர்களைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ள முடியாது. நான் ஒரு பயங்கரமான குழப்பம் கொண்ட குடும்பத்தில் தோன்றினவன். என் தகப்பனார் ஐயர்லாந்து தேசத்தை சேர்ந்தவர். என் தாயார் சிகப்பு இந்தியர் கலப்பு. அவர்கள் பாதிசிகப்பு இந்தியர். அவர்களுடைய தாய் சிகப்பு இந்தியர், இவர்கள் உபகாரச் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோருமே குடிகாரர்கள். அவர்களில் பெரும்பாலோர் சண்டையில் மரித்தனர், துப்பாக்கி சண்டையிடுபவர்கள். எனவே அதைக்குறித்து பெருமையடித்துக் கொள்ள எனக்கு ஒன்றுமேயில்லை. ஏனெனில் என் முன்னோர்கள் மோசமானவர்கள். என் வம்சம் மோசமான ஒன்று. ஆனால் சகோதரனே, ஒரு காரியத்தைக் குறித்து என்னால் பெருமையடித்துக் கொள்ள முடியும். என்னை மீட்டெடுத்த என் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து என்னால் பெருமையடித்துக் கொள்ள முடியும். அவருடைய மறுரூபமாக்கும் வல்லமையினால் அவர், முன்குறித்தலின்படி ஒரு விதையை நட்டார். அதை நான் கண்டேன். இப்பொழுது நான் யாருடைய குமாரன்? ஆம். அவரைக் குறித்து நான் பெருமையடித்துக் கொள்ள முடியும். என் வாழ்க்கையில் முப்பத்து மூன்று ஆண்டுகளை நான் அவரைக் குறித்து பெருமையடித்துக் கொள்வதிலேயே செலவழித்து விட்டேன். அவர் இன்னும் முப்பத்து மூன்று ஆண்டுகளை எனக்குத் தருவாரானால் அவரைக் குறித்து இன்னும் அதிகமாக பெருமையடிக்க முயல்வேன். பாருங்கள்? என் முன்னோரைக் குறித்து நான் பெருமையடித்துக் கொள்ள முடியும், அல்லேலூயா. அவர் என்னை மீட்டு, ஜீவ விதையை இங்கு விதைத்து, இந்த வார்த்தையை நான் காணும்படி செய்து, அவருடைய ஆவியை அனுப்பி, ''இதோ உள்ளது. இதை பேசு, இது நடக்கும். அதை செய்'' என்றார். ஓ, என்னே, என்னால் அவரைக் குறித்து பெருமையடித்துக் கொள்ள முடியும்! அவர் எப்படி அதை செய்தார்? திருவசனமாகிய தண்ணீரினால் சுத்திகரித்ததன் மூலம், பிரிக்கும் தண்ணீர். அதை நாம் சற்று முன்பு விவரித்தோம். 111உண்மையான முன்குறிக்கப்பட்ட விசுவாசிகள் வார்த்தையில் நிலைத்திருப்பார்கள், ஏனெனில் அவர்கள் அந்த வார்த்தையின் ஒருபாகமாய் இருக்கின்றனர். ஓ, அலைந்து திரியும் நட்சத்திரங்களே, எவ்வளவு காலம் நீங்கள் அலைந்து திரிவீர்கள்? மெதோடிஸ்டுகளே, பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, வெளியில் உள்ளவர்களே, நீங்கள் யாராயிருந்தாலும்; சபைக்கு சபை, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம், தொலைகாட்சியிலிருந்து தொலைகாட்சிக்கு, உலகத்திலிருந்து உலகத்துக்கு அலைந்து திரியும் நட்சத்திரங்களே, நீங்கள் ஏன் வரக்கூடாது?அவர் உங்களுடன் ஐக்கியங்கொள்ள வாஞ்சையுள்ளவராயிருக்கிறார். அவர் உங்களுக்காக ஆவல் கொண்டிருக்கிறார். உங்கள் மனம் புதிதாகிறதினாலே அவர் உங்களை, சபைக்கு அல்லது ஸ்தாபனத்துக்கு அல்ல, அவருடைய வார்த்தைக்கு மறுரூபப்படுத்த விரும்புகிறார். அந்த வாஞ்சை உங்களில் இருக்குமானால், நீங்கள் வார்த்தையின் ஒரு பாகமாக இருக்கிறீர்கள். நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். (மத். 5:6) நீங்கள் இப்பொழுதுள்ள உருக்குலைந்த மதத்திலிருந்து உங்களை வெளியே கொண்டு வர அவர் தமது மறுரூபமாக்கும் வல்லமையை அனுப்பியுள்ளார். நாம் இருக்கும் இந்த உருக்குலைந்த குழப்பத்திலிருந்து; நாம் நிர்வாணிகளாய், குருடராய், பரிதபிக்கப்படத்தக்கவர்களாய் இருந்தும் அதை அறியாமலிருந்து, அறியாமை கொண்ட உருக்குலைந்த மத்தியிலிருந்து உங்களை வெளியே கொண்டு வர அவர் தமது மறுரூபமாக்கும் வல்லமையை அனுப்பியுள்ளார். நண்பர்களே அதை சிந்தித்துப் பாருங்கள். 112உங்களுக்குத் தெரியுமா, தேவன் தமது வார்த்தையை நிறைவேற்ற தமது மறுரூபமாக்கும் வல்லமையை அனுப்பி, சாராள், ஆபிரகாமின் சரீரங்களை முழுவதுமாக மாற்றினார். ஒரு கிழவனையும் ஒரு கிழவியையும் அவர் மறுரூபப்படுத்தினார். ஏனெனில் அவ்விதம் செய்வதாக அவர் வாக்களித்திருந்தார். தேவன் எதை செய்வதாக வாக்களித்துள்ளாரோ, அதை செய்வார். எதுவுமே, ஒன்றுமே... தாறுமாறாக்கப்பட்ட ஒன்றைக் கொண்டு அவர் எதையும் செய்ய முடியாது. ஆனால் அவர் தமது வார்த்தையை நிறைவேற்றுவார், அவர் தமது ஆவியை அனுப்புவார்! ''கர்த்தராகிய நான் அதை நட்டேன், அதற்கு இரவும், பகலும் நீர் பாய்ச்சுவேன். அதையாரும் என் கைகளிலிருந்து பிடுங்கிக் கொள்வதில்லை.'' வேதம் அவ்விதம் உரைக்கிறது. 113ஓ, அலைந்து திரியும் நட்சத்திரங்களே, உங்கள் இருதயத்தில் வாஞ்சை கொண்டிருப்பவர்களே! நீங்கள் வாஞ்சை கொண்டிருக்க வேண்டும், இல்லையென்றால் இன்று காலை நீங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள். இல்லையென்றால் நீங்கள் நாடெங்கிலுமுள்ள சபைகளுக்கும், அரங்கங்களுக்கும் சென்று கொண்டிருக்க மாட்டீர்கள் - ஏதாவதொன்று உங்களை அங்கு கொண்டு செல்லாமல் போனால். யாரோ ஒருவர் உங்களிடம் பேசினார். இன்னும் சென்று கொண்டிருக்க வேண்டாம். திருவசனமாகிய தண்ணீரினால் சுத்திகரிப்பு ஒன்றுண்டு, அது உங்களை உறைந்த மழையைப் போல் வெண்மையாக்கும். ஓ, தேவகுமாரர்களே, கேளுங்கள்! அந்த உருக்குலைந்த இடத்தில் தங்காதீர்கள். அதை விட்டு வெளியே வாருங்கள். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அதற்கு முரணான எதையுமே அவன்... நீங்கள், ''என் ஜீவனத்துக்கு நான் என்ன செய்வேன்? இதை நான் எப்படி செய்வேன்?'' எனலாம். அது தேவனுடைய வேலை. ''என்னால் இதை எப்படி செய்ய முடியும்? என் கூட்டாளிகள் என்னை புறம்பாக்கி விடுவார்களே.'' ''என் நாமத்தினிமித்தம் தன் சொந்த தகப்பனையாவது, மனைவியையாவது, புருஷனையாவது, வீடுகளையாவது, குடும்பங்களையாவது விட்டவர்களெவர்களோ, அவர்களுக்கு இவ்வுலகத்தில் குடும்பங்களையும், தகப்பன்மார்களையும், தாய்களையும், சகோதரரையும், சகோதரிகளையும், மறு உலகத்தில் நித்திய ஜீவனையும் அளிப்பேன்'' என்று தேவன் கூறியிருக்கிறார். அது ஒரு வாக்குத்தத்தம், நண்பனே. ஓ, அதற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்! தேவன் அளிக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேறும். தேவனுடைய ஒவ்வொரு விதையும் ஒரு வாக்குத்தத்தமே. 114சகோதரியே, உன் தலைமுடியை கத்தரித்துக் கொள்வதை நிறுத்திவிடு. ஏனெனில் அது தேவனுடைய பார்வையில் ஒரு அசுத்தமான செயல். அந்த உடைகளை அணிவதை நிறுத்திவிடு. அது அவருக்கு அருவருப்பானது! சகோதரரே, மனிதரே, இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து ஸ்தாபனங்களுக்கு ஆதரவு காண்பிக்காதீர்கள். உங்கள் மனைவிகள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய அனுமதிக்காதீர்கள். இது கிறிஸ்தவர்களுக்கு உகந்ததல்ல. வார்த்தைக்குத் திரும்பி வாருங்கள்! அந்த வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள், அது வளரும். அது வளர்ந்தேயாக வேண்டும். தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை அதை முதலில் வளரச் செய்தது. அவர் மறுபடியுமாக அதை வளரச் செய்கிறார். அது முன்பு எங்கிருந்ததோ, அங்கிருந்து தொடங்குகிறார். 115ஏனோக்கு தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமையினால் மரணத்தை காணாதபடி எடுத்துக் கொள்ளப்பட்டான். அதை ஏன் தேவன் செய்தார்? நிகழவிருக்கும் சபை எடுத்துக் கொள்ளப்படும்தலுக்கு, அது ஒரு முன்னடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காக. எலியாவும் அப்படித்தான். இயேசுவின் சரீரமும் அது மரித்த பின்பு உயிர்ப்பிக்கப்பட்டது. கல்லறையிலிருந்த இயேசுவின் சரீரம் தேவனுடைய வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டு, உறைந்து போன மரித்த சாயலிலிருந்து உயிரோடெழுந்த மகிமையடைந்த தேவனுடைய குமாரனாக மறுரூபமாக்கப்பட்டது. ஏனெனில் தீர்க்கதரிசி சங்கீதம்;16:10ல் - நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் அது சங்கீதம்;16:10 - ''அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன், என் பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன்'' என்கிறான். ஓ, தேவனே! அந்த வார்த்தை நிறைவேற வேண்டியதாயிருந்தது. அது தேவனுடைய வார்த்தை. நீங்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்ல விரும்பினால், அதை உங்கள் இருதயத்தில் நடுங்கள். நீங்கள் உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பினால், இந்த வார்த்தையை அங்கு வையுங்கள். அது எசேக்கியல் என்று நினைக்கிறேன், தேவன் அவனிடம், ''அந்த சுருளை எடுத்துப் புசி'' என்றார் - தீர்க்கதரிசியும், வார்த்தையும் ஒன்றாவதற்காக. அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் தன்னை வெளிப்படுத்த வேண்டும், ஏனெனில் அது தேவனுடைய மூலவித்து. கல்வியறிவு கொண்ட ஏதோ ஒரு வேத சாஸ்திர நிபுணன் இதை உங்களிடமிருந்து எடுத்துப் போட இடங்கொடாதிருங்கள். அவர் மாம்சப் பிரகாரமான விஞ்ஞானத்தையும், அறிவையும், கல்வியையும் உங்கள் மேல் தெளிக்க இடங்கொடாதிருங்கள். தேவனை விசுவாசியுங்கள். 116ஆபிரகாம் தன் காலத்திலிருந்த விஞ்ஞான ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டு, “எனக்கு குழந்தை கிடைக்காது, நான் மிகவும் வயோதிபமானவன். எனக்கு அதிக வயதாகிவிட்டது. நான் இதை, அதை, மற்றதை செய்தேன்” என்று கூறவில்லை. தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருந்த எதையுமே அவன் இல்லாதது போல் அழைத்தான். அவன் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவனை மகிமைப்படுத்தி விசுவாசத்தில் வல்லவனானான். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று அறிந்திருந்தான். 117ஓ, அலைந்து திரியும் குமாரரே, இப்பூமியின் கொடிகளினால் உருக்குலைந்தவரே! அலைந்து திரியும் சகோதரிகளே... இவ்வுலகிலுள்ள இடங்களும், நவநாகரீகமும் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்வோரே! அருமை சகோதரியே, என்னை நீ பைத்தியக்காரக் கிழவனாகக் கருதலாம். ஆனால் இந்நாட்களில் ஒன்றில் நீ, அன்றிரவு பிளாரன்ஸ் ஷகரியான் சந்தித்ததை சந்திக்கும் போது; அவள் இந்த அறையில் இந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாள் என்று உனக்குத் தெரியும். அதை நீ சந்திக்கும் போது, நான்அல்ல, இந்த வார்த்தை உண்மை என்பதைக் கண்டு கொள்வாய். அந்த சிகையலங்கார கடைகளையும் நவநாகரீக கடைகளையும் விட்டு விலகுங்கள். ''நீங்கள் ஏன் பெரிய காரியங்களைப் போதிக்கக் கூடாது'' என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் மொழியின் முதலெழுத்துக்களில் தொடருங்கள், அதன் பிறகு நாம் அல்ஜீப்ரா கணிதத்துக்கு வருவோம். பாருங்கள்? கற்றுக் கொள்ளத் தொடங்குங்கள். அதுவே, ''நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்; அதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.'' 118உங்கள், புத்தியுள்ள ஆராதனையை நீங்கள் செய்து கொண்டிருங்கள், தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். பாருங்கள், உங்களுக்கு புத்தியுள்ள காரியங்கள் என்று தோன்றுகிறவைகளை செய்தல்... ஒரு ஸ்திரீ தன் உடைகளை களைந்து அங்கு சென்று அவ்விதம் செய்வது புத்தியற்ற செயல் அல்லவா? இன்று நம்மிடையேயுள்ள கோட்பாடுகள், வேத சாஸ்திர பிரமாணங்கள் தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும் போது, ஒரு மனிதன் தன்னை அதில் நுழைத்துக் கொள்வது புத்தியற்ற செயல் அல்லவா? பாருங்கள்? 119ஏசாயாவின் உதடுகள், அவன் அசுத்த உதடுகளுள்ள ஒரு சாதாரண மனிதன். அவன், ''கர்த்தாவே, நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன். ஐயோ! அதமானேன், தேவனை என் கண்கள் கண்டதே“ என்றான். அப்பொழுது ஒரு தேவதூதன் இறங்கி வந்து, தேவனுடைய பலிபீடத்திலிருந்த பரிசுத்த அக்கினியிலிருந்து ஒரு நெருப்புத் தழலை எடுத்து, அவனுடைய அசுத்த உதடுகளை மாற்றினான் - அலைந்து திரிகிற மனிதனின் உதடுகளை, கர்த்தர் உரைக்கிறதாவது என்று கூறும் தீர்க்கதரிசிகளின் உதடுகளாக. தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை! மீன் பிடிப்பவர் நூற்றிருபது பேர், இரத்தாம்பரம் விற்கும் பெண்கள் போன்றவர்கள் மேலறையில் கூடி கதவுகளை மூடிக் கொண்டனர். அவர்களில் சிலருக்கு கையொப்பமிடக் கூடிய அளவுக்குக் கூட கல்வியறிவு இருக்கவில்லை. மீன் பிடிப்பவர்களாயிருந்த அவர்களை தேவன் மனுஷரைப் பிடிப்பவர்களாக மாற்றினார்: தெருக்களில் இருந்த ஆண்களையும், பெண்களையும் தேவனுடைய பரிசுத்தவான்களாக மாற்றினார். தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை! 120உள்ளுர் சபை அங்கத்தினனாகிய பவுல், பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு, பெந்தெகொஸ்தேகாரன் அல்லது ஏதோ ஒருவன்; அவனுக்குள் எதிர்க்கும் ஆவியைக் கொண்டவனாய், மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்னும் எண்ணமுடையவனாய் சாலையில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அக்காலத்தில் தேசத்திலிருந்த மிகச் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரான கமாலியேலிடம் அவன் பயின்றான். தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் ஒரு கூட்டம் ஜனங்களை கட்டிக் கொண்டு வரும்படி தமஸ்குவுக்குப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, அவனுக்கு என்ன நேர்ந்தது? அவன் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு ஒளி அவனை வீழ்த்தியது. அவன் ஒரு செய்தியைக் கேட்டான். அது சபை அங்கத்தினனாக சபைக்குச் சென்று கொண்டிருந்த அவனை தேவனுடைய தீர்க்கதரிசியாக மாற்றினது. அவன் புதிய ஏற்பாட்டில் தேவனுடைய வார்த்தையை எழுதினான் சபை அங்கத்தினனிலிருந்து பரிசுத்தவானாக! ஓ, அலைந்து திரியும் நட்சத்திரமே, நாம் அலைவதை நிறுத்திக் கொள்வோம். அலைந்து திரியும் மகனே, இந்த உருக்குலைந்த நிலையில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்கு செல்லும் அலைந்து திரியும் விதையே; பிள்ளைகளே, கர்த்தரிடம் இன்று காலை திரும்புங்கள். ஜீவனுள்ளோருக்கும், மரித்தோருக்கும் இடையே நிற்க முயற்சி செய்யும் ஒரு மனிதன் என்னும் முறையில் நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். 121நீங்கள் இன்னும் தொலைபேசி வழியாக இணைக்கப்பட்டிருந்தால், இந்த ஒலிபரப்பு சென்று கொண்டிருக்கும் பாகங்களில், அலைந்து திரிந்து அந்த இடத்துக்கு வந்துள்ளோரே, தயவு செய்து இன்னும் ஒரு நிமிடம் உட்காருங்கள். இங்கு டூசானில், மன்னிக்கவும், பீனிக்ஸில், நேரமாகி விட்டது. இப்பொழுது பகல் பன்னிரண்டு மணிக்கு இருபது நிமிடம் உள்ளன. இந்த ஜனங்களை காலை முழுவதும் பிடித்து வைத்துக் கொண்டு விட்டேன். நீங்கள் வேலைக்கு செல்லக்கூடாதபடிக்கு செய்து விட்டேன். ஆனால் பார், அருமை நண்பனே, ஒருக்கால் நீ தேவனை விட்டு சதாகாலமும் விலகியிருக்க வகையுண்டு. இன்று காலை அவரிடம் திரும்ப வா. அப்படி செய்யமாட்டாயா? ஊற்றண்டையில் இடமுண்டு. நீண்ட காலம் முன்பு முன்னணையில், அது உண்மையென்று. எனக்குத் தெரியும் மனிதரை தங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்க ஒரு குழந்தை பிறந்தது. யோவான் அவரை கரையில் கண்டான், அவரே சதாகாலங்களிலுமுள்ள ஆட்டுக்குட்டியாயிருந்தார். ஓ, கிறிஸ்து, கல்வாரியில் அறையப்பட்டவர். ஓ, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதரை நான் நேசிக்கிறேன். ஏனெனில் அவர் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார். அவர் என் பாவங்கள் அனைத்தும் மன்னித்து, பரிசுத்த ஆவியை எனக்குள் வைத்தார். ஓ, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதரை நான் நேசிக்கிறேன். ஒருநாள் ஒரு ஆயக்காரன் ஜெபம் செய்ய ஆலயத்துக்கு சென்றான், அவன், “ஓ, ஆண்டவரே, என் மேல் கிருபையாயிரும்'' என்று கதறினான், அவன் பாவம் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, அவனுக்குள் ஆழமான சமாதானம் வந்தது அவன், “கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதரை வந்து பாருங்கள்” என்றான். அது உண்மை. முடவர் நடந்தனர், ஊமையர் பேசினர், அந்த அதிகாரம், அன்புடன் கடலுக்கு உரைக்கப்பட்டது, குருடர் பார்வையடைந்தனர், அது கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதரின் இரக்கத்தின் மூலம் மட்டுமே என்றறிவேன். அதை இன்றைய ஊழியத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கிணற்றண்டையில் இருந்த ஸ்திரீயிடம், அவர் அவளுடைய, பாவங்கள் அனைத்தும் எடுத்துக் கூறினார் அவளுக்கு அந்த சமயத்தில் ஐந்து புருஷர் இருந்தனர் என்று, அவளுடைய பாவம் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, ஆழமான சமாதானம் அவளுக்குள் வந்தது. அவள், ''கலிலேயாவிலிருந்து வந்த இந்த மனிதரை வந்து பாருங்கள்'' என்றாள். 122ஸ்திரீயே, அவர் அறிந்திருந்தார். பார், உன் இருதயத்திலுள்ளதை அவர் இன்று காலை அறிந்திருக்கிறார். மனிதனே, உன் இருதயத்திலுள்ளதையும் அவர் அறிந்திருக்கிறார். ஓ, ஆயக்காரனே, நாம் ஜெபம் செய்வோம்! ஓ, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதரை நான் நேசிக்கிறேன், கலிலேயாவிலிருந்து வந்த, ஏனெனில், அவர் எனக்கு எவ்வளோவோ செய்திருக்கிறார், அவர் என்பாவங்கள் அனைத்தும் மன்னித்து, பரிசுத்த ஆவியை எனக்குள் வைத்தார். ஓ, கலிலேயாவிலிருந்து வந்த அந்த மனிதரை நான் நேசிக்கிறேன். என்னுடன் கூட சேர்ந்து இன்று காலை அவரை நேசிக்க மாட்டீர்களா? ஓ, வழிதப்பி அலையும் பாவியே, இங்கிருந்தாலும், வேறெங்கிருந்தாலும், இன்று காலை என் ஆண்டவரை ஏற்றுக்கொள்வாயா? அவர் வார்த்தையாயிருக்கிறார், வார்த்தை உங்களிடம் கொண்டு வரப்பட்டது. நீங்கள் கைகளையுயர்த்தி அல்லது எழுந்து நின்று, ஜெபித்து, “இப்பொழுதே அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். சகோதரனே, நான் சித்தமாயிருக்கிறேன், இப்பொழுதே அவரை ஏற்றுக்கொள்ள சித்தமாயிருக்கிறேன்'' என்று கூறுவீர்களா? ஜெபித்துக் கொள்ள விரும்பும் யாராகிலும் எழுந்து நின்று, நான்...'', ஜெபித்து கொள்ள விரும்புவோர், ''நான் பாவி. எனக்குத் தேவை...'' என்று சொல்வீர்களா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாராகிலும்? எல்லோரும் இப்பொழுது ஜெபித்துக் கொண்டிருங்கள், ஒரு நிமிடம். நீண்ட காலம் முன்பு முன்னணையில், (உலகம் அப்பொழுது குழப்பத்தில் இருந்ததென்று உங்களுக்குத் தெரியும்), அது உண்மையென்று எனக்குத் தெரியும், மனிதரை தங்கள் பாவத்திலிருந்து இரட்சிக்க, ஒரு குழந்தை பிறந்தது. யோவான் அவரை கரையில் கண்ட போது, அவரே சதா காலங்களிலுமுள்ள ஆட்டுக் குட்டியாயிருந்தார் (இன்றும் அவ்வாறே உள்ளார்). ஓ, கிறிஸ்து, கல்வாரியில் அறையப்பட்டவர். 123இன்று அவரை உங்கள் முழு இருதயத்தோடும் நேசித்து, நீங்கள் இப்பொழுதுள்ள உலகப்பிரகாரமான நிலையிலிருந்து வெளியே வரமாட்டீர்களா? ஸ்திரீகளே, மனிதரே, ஓ, நீங்கள் ஏன் இவ்வளவு நேரமாக இங்கு உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள்? உங்களுக்குள் ஏதோ ஒன்று பசிதாகம் கொண்டுள்ளது என்பதை அது காண்பிக்கிறது. அங்கு ஒன்றுமில்லை என்றால், நீங்கள் இரண்டு மூன்று மணிநேரமாக இந்த கட்டிடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்க மாட்டீர்கள். இன்று அவருக்கு செவிகொடுக்க மாட்டீர்களா? அருமை சகோதரனே, அருமை சகோதரியே. சபைகள் ஐக்கியப்படுகின்றன. மகத்தான நாடுகள் உடைகின்றன, இஸ்ரவேல் விழித்தெழும்புகிறாள், இவை தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்களாம். புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன, திகில் எங்கும் சூழ்ந்துள்ளது. ''சிதறப்பட்டோரே, உங்கள் சொந்தத்துக்கு திரும்புங்கள்.'' மீட்பின் நாள் சமீபமாயுள்ளது, மனிதரின் இருதயங்கள் பயத்தினால், சோர்ந்துள்ளன ஆவியில் நிறைந்து, உங்கள் தீவட்டிகளை சுத்தப்படுத்தி, நிமிர்ந்து பாருங்கள், உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது. கள்ளத்தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர். கிறிஸ்துவாகிய இயேசு நமது தேவன் என்னும், தேவனுடைய சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர். 124அது உண்மை. அது உங்களுக்கு தெரியும். நாம் வாழும் நாளை நாமெல்லாரும் அறிந்திருக்கிறோம். ஆனால், சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று அவர் சொல்லியிருக்கிறார், மகிமையின் வழியை நீ நிச்சயம் கண்டுகொள்வாய், அந்த நாளில் தான் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாயங்காலத்தில் இருள் வருவதற்கு முன்பு அந்தி வெளிச்ச (twilight) நேரத்தில், வெளிச்சம் பிரகாசிக்கும், சாயங்கால நட்சத்திரம். அந்தி வெளிச்சம் சாயங்கால நட்சத்திரம், அதன் பிறகு அந்தகாரம்! நான் முடிவில் கப்பலில் ஏறும்போது, விடைபெறும் வருத்தம் இருக்க வேண்டாம். எல்லாவற்றையும் காலமும், வேளையும் சுமந்து செல்லும், வெள்ளம் என்னைத் தூரக் கொண்டு செல்ல நேரிடும், ஆனால் நான் கரையைக் கடந்த பிறகு, என் மாலுமியை முகமுகமாய் காண விரும்புகிறேன். துக்கிப்போர் திரளாய் கூடி, வாழ்க்கை வெறும் கனவு என்று என்னிடம் கூற வேண்டாம். உறங்கும் ஆத்துமா, சாகும் காரியங்கள் காணும் போல் அல்ல, ஆம் வாழ்க்கை உண்மையானது! வாழ்க்கை உத்தமமானது! கல்லறை அதன் முடிவல்ல, நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய், என்று ஆத்துமாவைக் குறித்து சொல்லப்படவில்லை. பெரிய மனிதரின் வாழ்க்கை அனைத்தும், நமது வாழ்க்கையை நாம் உயர்த்திக் கொள்ள முடியும் என்பதை நினைப்பூட்டுகிறது. பிரிவினைகள் நமக்குப் பின்னால், ''காலமென்னும் மணலில் அடிச்சுவடிகளை, விட்டுச் செல்கின்றன.'' வேறொரு சகோதரன் வாழ்க்கை படகில் மிதந்து செல்கையில், கப்பல் சேதம் ஏற்பட்டு கதியற்ற நிலை அடையும் போது, இந்த அடிச்சுவடிகளைக் காண நேர்ந்தால், மறுபடியும் தைரியம் கொள்ள வகையுண்டு, அப்படியானால் நாம் எழுந்து பணி புரிவோம், எந்த கஷ்டம் வந்தாலும், இருதயம் தளராமல் இருப்போம். விரட்டப்பட்ட கால்நடையைப் போல் ஊமையாயிராதே, கஷ்டத்தில் வீரனாக இரு! 125அன்புள்ள தேவனே, இவர்கள் உம்முடையவர்கள். பிதாவே, இரண்டு பேர் எழுந்து நிற்பதை நான் கண்டேன். தேவனே, இவர்களை இப்பொழுது ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன். இவர்கள் உமது குமாரராயிருக்க விரும்புகின்றனர். இவர்கள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த அறியாமையின் வாழ்க்கையிலிருந்து விழித்தெழுந்து, இன்று அவர்கள் இருதயங்களில் நடப்பட்ட விதையின் மேல் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று, இப்பொழுது புத்துணர்ச்சியடைய விரும்புகின்றனர். நித்திய தேவனே, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவரே, உமது வார்த்தையை உரைத்தவரே, இந்த மனிதர் இன்று காலை இதை செய்வார்கள் என்று நீர் ஏற்கனவே அறிந்திருந்தீர் என்று நான் நம்புகிறேன். கர்த்தாவே, இந்த வார்த்தைக்கு நீர் இரவும் பகலும் நீர்பாய்ச்சி, சாத்தான் அதை உம்முடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள இடம் கொடுக்க வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன். என்றாலும் ஒருநாள், எல்லாம் திரும்பக் கொண்டு வரும்போது, அது தேவனுடைய பரதீசில் மரமாக வளர்ந்திருப்பதாக. ஏனெனில் உமது வார்த்தை தவற முடியாது, அது மறுபடியும்... ஏனெனில் இந்த உலகம். 126வரப்போகும் உலகில் இந்த விதமான நாகரீகம் இருக்காது. விஞ்ஞானம் கண்டு பிடித்த மோட்டார் வாகனங்கள் இருக்காது. வரப்போகும் உலகில் இப்படிப்பட்ட காரியங்கள் ஒன்றும் இருக்காது. ஆனால் அந்த மகத்தான ஆட்சியில் தேவன் தம்முடைய சொந்த நாகரீகத்தை ஏற்படுத்துவார். இந்த நாகரீகத்தில் வியாதி, மரணம், துயரம், கல்லறைகள், தேவைகள் உள்ளன. ஆனால் வரப்போகும் அந்த ராஜ்யத்திலோ மரணமோ, துயரமோ, வியாதியோ, வயோதிபமோ இருக்காது. ஓ தேவனே, உம்முடைய நாகரீகத்தில் எல்லாமே புதிதாயிருக்கும். தேவனே, உம்முடைய வல்லமையினால் எங்களை இன்று மறுரூபமாக்கும். எங்கள் மனம் புதிதாவதன் மூலம் நாங்கள் இந்த உலகத்தின் அற்பகாரியங்களை விட்டு விலகி தேவனுடைய வார்த்தைக்குத் திரும்புவோமாக. எங்கள் இருதயத்திலுள்ளதாக நாங்கள் விசுவாசிக்கும் அந்த விதையின் மேல் தேவனுடைய மறுரூபமாக்கும் வல்லமை கிரியை செய்து, நாங்கள் புதிதாக்கப்பட்டு, தேவனுடைய குமாரர்கள், குமாரத்திகள் என்றழைக்கப்படும், அந்த சிருஷ்டிகளாக மாறுவோமாக. பிதாவே, இதுவே நான் ஜனங்களுக்காக உம்மிடத்தில் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கும் என் ஜெபம். ஆமென். 127இந்த ஒலிபரப்பை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள், எங்கிருந்தாலும், கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய ஆவியினால் நீங்கள் நிறையப்பட வேண்டுமென்று விரும்புகிறேன். இன்று காலை பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் இருதயத்தில் விழுவதாக. அங்குள்ள நீங்கள் இயேசுவை ஏற்றுக் கொள்வீர்களாக. அதன் பிறகு நீங்கள் எவ்விதம் வாழ்கிறீர்கள் என்று உங்கள் வாழ்க்கையை கவனித்துப் பாருங்கள். இங்கு சிந்திக்கும் மனிதனின் வடிகட்டும் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த வார்த்தைக்கு முரணாக ஒன்றைச் செய்வதாகக் கண்டால், அதை விட்டு வேகமாக விலகுங்கள். பாருங்கள்? ஏனெனில், மரணத்தை உங்களிடமிருந்து விலக்கும் ஒரு வடிகட்டும் பொருள் உள்ளது. அதுதான் தேவனுடைய வார்த்தை. அவருடைய வார்த்தை ஜீவனாயுள்ளது, அது உங்களை மரணத்தினின்று காக்கும். 128இங்கு அரங்கத்தில் உள்ள ஜனங்களே, உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்து விட்டேன். உங்கள் கவனத்திற்காக நான் நன்றி சொல்லுகிறேன். தேவன் இந்த விதையை மரிக்க வொட்டாமல் காக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நான் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவைகளைக் கூறுகிறேன் என்று எண்ண வேண்டாம். நான் அன்பின் நிமித்தமாக இவைகளைக் கூறினேன். எனக்கு உயிருள்ள போதே ஜனங்களுக்கு பிரசங்கிக்க முடியும் என்பதை அறிந்திருக்கிறேன். நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். அவர் என் இரட்சகர். அவர் மாத்திரம் என்னை இரட்சிக்காமல் இருந்தால், நான் வெளியே தெருவில் அலைந்து கொண்டிருந்திருப்பேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். என் பெற்றோர், என் ஜனங்கள் அனைவருமே பாவிகளாயிருந்தனர். ஆனால், தேவனோ தம்முடைய மறுரூபமாக்கும் வல்லமையினால் என்னை வேறு சிருஷ்டியாக மாற்றினார். அது மிகவும் நல்லதென்று உங்களுக்கு நான் சிபாரிசு செய்ய முடியும். அது தொல்லை நேரத்தில் உங்களைப் பாதுகாக்கும். மரணம் உங்கள் வாசலில் காத்திருந்தாலும், உங்களுக்கு பயமிருக்காது. ஒன்றுமே கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்க முடியாது. தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உங்களுக்கு நித்திய ஜீவன் அளிப்பாராக. 129இங்குள்ள எத்தனை பேர், தேவனுடைய விதையை, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றிருக்கவில்லை? உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரன்ஹாமே, நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று என்னை ஜெபத்தில் நினைவு கூருங்கள்“ என்று சொல்லுங்கள். வார்த்தையை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொண்டு அதை விசுவாசியுங்கள். நீங்கள்... நீங்கள் உங்களையே பார்க்கலாம். நீங்கள் சென்று நிலைக் கண்ணாடியில் பாருங்கள், அப்பொழுது நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதைக் காணலாம். பாருங்கள், நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள், ''நான் பரிசுத்த ஆவியைப் பெற்று கொண்டிருக்கிறேன் என்பதால் என் கையை உயர்த்தவில்லை எனலாம். உங்கள் நிலைக் கண்ணாடியில் பாருங்கள், அப்பொழுது எந்த விதமான ஆவி உங்களை வஞ்சிக்கிறது என்பதை நீங்கள் காணலாம், பாருங்கள். வஞ்சிக்கப்பட்ட கருத்து! ''மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதன் முடிவோ மரண வழிகள்.'' அது உண்மையா? மீட்பர் மரித்த குருசண்டை, நான் ஜெபித்த ஸ்தலத்தண்டை, இரத்தத்தால் மன்னிப்பு அடைந்தேன். ''மகிமை...'' 130இப்பொழுது ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி அவருக்கு இந்த பாடலைப் பாடுவோம். நமது கைகளையும் உயர்த்துவோம். மீட்பருக்கு மகிமை! மகிமை! மீட்பருக்கு மகிமை! இரத்தத்தால் உள்ளம் மாறிற்று; மீட்பருக்கு மகிமை! இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் கைகுலுக்குங்கள். நான் ஆச்சரியமாய் பாவத்திலிருந்து இரட்சிக்கபட்டிருக்கிறேன், இயேசு எனக்குள்ளே மிகவும் இனிமையாய் உள்ளே தரித்திருக்கிறார், அங்கே சிலுவைண்டையில் அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மீட்பருக்கு மகிமை! மீட்பருக்கு மகிமை! மகிமை! மீட்பருக்கு மகிமை! இரத்தத்தால் உள்ளம் மாறிற்று; மீட்பருக்கு மகிமை! 131இரத்தத்தில் ஜீவ கிருமி உண்டென்று உங்களுக்குத் தெரியும். இது அவரை அறிந்திராதவர்களுக்கு; இந்த ஜீவ ஊற்றண்டை வா, மீட்பருக்குள் இதயத்தை தா, மூழ்கி உன் பாவத்தைப் போக்க வா, மீட்பருக்கு மகிமை! ஓ,மீட்பருக்கு... இதை பாடும்போது இப்பொழுது தலை வணங்குவோம். மீட்பருக்கு மகிமை! இரத்தத்தால் உள்ளம் மாறிற்று, மீட்பருக்கு மகிமை! 132அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? (சபையோர், “ஆமென்” என்கின்றனர் - ஆசி). பவுல், ''நான் ஆவியோடு பாடுவேன், ஆவியோடு ஆராதிப்பேன்“ என்றான். நமது கரங்களை உயர்த்தி, மறுபடியும் இதை மிருதுவாகப் பாடுவோம். உங்களுக்குத் தெரியுமா, தொல்லை என்னவெனில், பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நாம் நம்முடைய சந்தோஷத்தையும், உற்சாகத்தையும் இழந்து விட்டோம். அன்றொரு இரவு பில்லிகிரகாம், ''நான் தென்பாகத்துக்கு சென்றிருந்த போது, அந்த பிரசங்கிமார்கள் கழுத்துப் பட்டையை திருப்பி உடுத்து, கைகளைத் தட்டி, கால்களை தரையின் மேல் தட்டி தாளம் போட்டார்கள். அவர்கள் சந்தோஷமாயிருக்க அவர்களில் ஏதோ ஒன்றிருந்தது“ என்றார். நல்லது, ஆம், நான் சந்தோஷமாயிருக்க என்னிலும் ஏதோ ஒன்றுண்டு. பாருங்கள்? பாருங்கள்? ஆம், ஆம், நமது உற்சாகத்தை நாம் இழந்து விட்டோம். இப்பொழுது நாம் கரங்களை உயர்த்துவோம். கண்ணீரைக் குறித்து கவலைப்படாதீர்கள். அது உங்களை பாதிக்காது. பாருங்கள். அது பாதிக்காது. ''கண்ணீரோடே விதைக்கிறவன், கெம்பீரத்தோடே அறுப்பான். அவன் தான் அறுத்த அரிகளைச் சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்.'' மீட்பருக்கு மகிமை! மகிமை! மீட்பருக்கு மகிமை! இரத்தத்தால் உள்ளம் மாறிற்று, மீட்பருக்கு மகிமை! மீட்பருக்கு... (ஓ, தேவனே! தேவனுக்கு ஸ்தோத்திரம்!) மீட்பருக்கு மகிமை! கர்த்தாவே, விதையை இருதயத்தில் ஆழமாகப் பதியச் செய்வீராக. இரத்தத்தால் உள்ளம் மாறிற்று மீட்பருக்கு மகிமை!